scorecardresearch

ஹத்ராஸ் வழக்கு : அத்தனை அவசரமாக சிதை மூட்டியது ஏன்? – அலகாபாத் நீதிமன்றம் கேள்வி!

இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் மீது எந்த அழுத்தமும் வராமல் பார்த்துக் கொள்ளுமாறு நீதிமன்ற அமர்வு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.

Day after police rushed her cremation Allahabad HC steps in asks officials to explain

Asad Rehman

Day after police rushed her cremation, Allahabad HC steps in, asks officials to explain :  ஹத்ராஸ் பகுதியில் தலித் பெண் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகின்ற நிலையில், அலகாபாத் நீதிமன்றம் தானாக முன் வந்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. மாநில அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் இது தொடர்பாக, குறிப்பாக, அவசர கதியில் அவர் எரிக்கப்பட்டது தொடர்பாக விளக்க, அடுத்த விசாரணை நடைபெறும் நாளான அக்டோபர் 12 அன்று ஆஜராகவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த விசாரணைக்கு இறந்து போன பெண்ணின் குடும்பத்தினரையும் வர உத்தரவிட்டுள்ளனர். அந்த பெண்ணின் உடலை தகனம் செய்தது தொடர்பாக அவர்களின் தரப்பினையும் விசாரிக்க வேண்டும், குறிப்பாக காவல்துறையினரால் நடுராத்திரி தகனம் செய்யப்பட்டதற்கு அவர்களின் பொருளாதார சூழல் தான் காரணமா என்று விசாரிக்க வேண்டும் என்று அந்த அமர்வு குறிப்பிட்டுள்ளது. இந்த விசாரணையை நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் நடத்த வேண்டுமா அல்லது சட்டப்படி சுதந்திரமாக விசாரணை ஏஜென்சி மூலமாக நடத்தப்பட வேண்டுமா என்பதையும் முடிவு செய்வோம் என்று கூறியுள்ளது அந்த அமர்வு.

To read this article in English

வியாழக்கிழமை வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக் குறிப்பை விரிவாக மேற்கோள்காட்டிய நீதிபதிகள் ரஞ்சன் ராய் மற்றும் ஜஸ்ப்ரீத் சிங் நான்கு குற்றம் சாட்டப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர், விசாரணையை நடத்த சிறப்பு விசாரணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது, இருப்பினும் அதன் பின்னர் என்ன நடந்தது என்பது குறித்து நாங்கள் அக்கறை காட்டுகிறோம். 29.09.2020 அன்று பாதிக்கப்பட்ட பெண் மரணம் அடைந்த பிறகு அவர் தகனம் செய்யப்பட்ட விதம் குறித்த செய்தி எங்களின் மனதை உலுக்கியுள்ளது. எனவே நாங்கள் இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரிக்கின்றோம் என்று அந்த அமர்வு அறிவித்தது.

இந்த வழக்கு பொதுநலம் சம்பந்தப்பட்டது. மேலும் இதில் மாநில அதிகாரத்தின் உயர்மட்டத்தில் இருந்து அதிகாரிகளின் பங்கீடுகள் இருப்பதால் இறந்த பெண்ணிற்கு மட்டுமல்லாமல் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கான மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் மீது மீறல்கள் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது நீதிமன்றம். மேலும், மரணம் அடைந்த பாதிக்கப்பட்ட நபர் மிகவும் மோசமான முறையில், மிருகத்தனமாக குற்றம் சுமத்தப்பட்டவர்களால் நடத்தப்பட்டுள்ளார். அதன் பின்பு நடைபெற்ற செயல்களாக கூறப்படும் அனைத்தும் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அப்பெண்ணின் குடும்ப உறுப்பினர்களின் துக்கத்தை ஆறாததாக மாற்றுவதும் அந்த காயத்தின் மேல் உப்பினை தேய்ப்பது போன்ற செயல் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

“இறந்தவரின் குடும்பத்தின் பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்தை மாநில அதிகாரிகள், அக்குடும்பத்திற்கான அரசியலமைப்பு உரிமைகளை ஒடுக்குவதற்கும் பறிப்பதற்கும் பயன்படுத்திக் கொண்டார்களா” என்பதை ஆராய விரும்புவதாக நீதிமன்றம் கூறியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

எக்ஸ்பிரஸ் அறிக்கையிலிருந்து மேற்கோள் காட்டி, இந்த விவகாரத்தை எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு “இது தொடர்பாக, இந்தியன் எக்ஸ்பிரஸ், லக்னோ பதிப்பில் 01.10.2020 தேதியிட்ட ஒரு செய்தியில் இவ்வாறாக குறிப்பிடப்பட்டுள்ளது. உத்திரபிரதேசம் காவல்துறை ஹத்ராஸ் பெண்ணை, அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல், தகனம் செய்ய முழு பலத்துடன் உள்ளனர் … அந்த அறிக்கையின்படி, ‘இறந்தவரின் உடல் செவ்வாய்க்கிழமை இரவு 9:30 மணியளவில் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டது. புதன்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் 200 கிலோமீட்டர் தொலைவில், ஹத்ராஸ் கிராமத்தில் அவசரமாக தகனம் செய்யப்பட்டது. காவல் படையினர் நெறிமுறைகளை பின்பற்றப்படாததாலும், உயர் அதிகாரிகளின் தலையீட்டால் அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகளை செய்ய அனுமதிக்கவில்லை.

இறந்த பெண்ணின் உடல், அவர் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்படாமலே, மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்டது என அப்பெண்ணின் தந்தை கூறிய செய்தி அறிக்கையை மேற்கோள் காட்டினார்கள். மேலும், தகனம் எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். நேரம் முக்கியமில்லை என்று காவல்துறை தரப்பு கூறியதை முற்றிலுமாக மறுத்துள்ளார் அவர். இந்த விவகாரத்தில் மற்ற செய்திதாள் குறிப்புகளையும் மேற்கோள்காட்டியது நீதிமன்றம்.

இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் மீது எந்த அழுத்தமும் வராமல் பார்த்துக் கொள்ளுமாறு நீதிமன்ற அமர்வு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. அறிக்கையில் இடம் பெற்றிருந்த செய்திகளை நீதிமன்றம் இவ்வாறு கூறியது. தகனம் அதிகாலை 02:00 – 02:30 வரை நடைபெற்றது. இறந்து போன பெண் இந்து மதத்தை பின்பற்றுபவர். அம்மதத்தில் இறுதி சடங்குகள் சூரிய மறைவிற்கு பிறகும், சூரியன் உதிப்பதற்கு முன்பும் நடத்தப்படுவதில்லை” என்பதை கூறினர்.

காந்தி எவ்வழியில் நின்றாரோ அதே வழியில் வாழ நாம் நம்மை தயார்படுத்த வேண்இய நேரம் இது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நம் தேசத்தந்தை பரப்பிய மற்றும் நடைமுறைப்படுத்திய உயர் மதிப்புகளிலிருந்து கள எதார்த்தம் வேறாக இருக்கிறது. அக்டோபர் 12ம் தேதி நடைபெற இருக்கும் அடுத்தக்கட்ட விசாரணையின் போது கூடுதல் தலைமைச் செயலாளர் / முதன்மைச் செயலாளர் (உள்துறை), டிஜிபி, கூடுதல் இயக்குநர் ஜெனரல் (சட்டம் ஒழுங்கு), ஹத்ராஸ் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இடம் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. விசாரணைக்கு வரும் அதிகாரிகள் தங்கள் தரப்பினை சப்போர்ட்டிங் மெட்டிரியல்களோடு சமர்பிக்க வேண்டும் என்றும், விசாரணையின் அன்றைய நிலை என்ன என்பதையும் கூற வேண்டும் என்று கூறியுள்ளனர். ஹத்ராஸ் மாவட்ட நீதிமன்றத்தின் அறிக்கைகளையும் சமர்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Day after police rushed her cremation allahabad hc steps in asks officials to explain