Advertisment

அகர்தலாவில் பாதுகாப்பு மீறல்; இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பிய வங்கதேசம்

இந்திய தூதரை சம்மன் அனுப்பி வரவழைத்த வங்கதேச தற்காலிக வெளியுறவு செயலாளர் ரியாஸ் ஹமிதுல்லா; அகர்தலாவில் துணை தூதரகத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு மீறலால் நடவடிக்கை

author-image
WebDesk
New Update
bangaladesh summon

இந்திய தூதர் பிரனய் வர்மா முஹம்மது யூனுஸுக்கு தனது அறிமுக அழைப்பைச் செய்தார் (கோப்புப் படம்: X/@ihcdhaka)

இந்திய தூதர் பிரனய் வர்மா செவ்வாய்க்கிழமை டாக்காவில் உள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார். அகர்தலாவில் உள்ள வங்கதேசத்தின் உதவி தூதரகத்தின் பாதுகாப்பு அரண்களை ஒரு கட்டுக்கடங்காத கும்பல் உடைத்த ஒரு நாள் கழித்து இந்த சம்மன் நடவடிக்கை நடந்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Day after security breach at Agartala, Bangladesh summons Indian envoy Pranay Verma

செவ்வாயன்று, அரசாங்கத்தின் சட்ட விவகார ஆலோசகர் அகர்தலாவில் நடந்த சம்பவம் இந்திய அரசாங்கத்தின் "தோல்வி" என்று கூறினார். "இது ஷேக் ஹசீனாவின் வங்கதேசம் அல்ல என்பதை இந்தியா உணர வேண்டும்" என்று சட்ட விவகார ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் பேஸ்புக் பதிவில் எழுதினார்.

ஒரு நாள் முன்னதாக, இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதற்கும், பங்களாதேஷில் இந்து சமூகம் மீதான தாக்குதல்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, அகர்தலாவில் ஆயிரக்கணக்கானோர் பங்களாதேஷின் தூதுரகம் அருகே ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

Advertisment
Advertisement

செவ்வாயன்று இந்திய தூதரின் வருகை குறித்து, வெளியுறவு ஆலோசகர் தௌஹித் ஹொசைன் தனது சுருக்கமான கருத்தில் "அவர் (வர்மா) வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்" என்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்திய தூதர் மாலை 4 மணியளவில் வெளியுறவு அமைச்சகத்திற்குள் நுழைந்ததாக அரசு நடத்தும் செய்தி நிறுவனமான பங்களாதேஷ் சங்பாத் சங்ஸ்தா தெரிவித்துள்ளது.

இந்திய தூதரை தற்காலிக வெளியுறவு செயலாளர் ரியாஸ் ஹமிதுல்லா அழைத்ததாக பங்களாதேஷ் சங்பாத் சங்ஸ்தா தெரிவித்துள்ளது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதம மந்திரி ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு தப்பிச் சென்ற ஆகஸ்ட் 5 முதல் இரு அண்டை நாடுகளுக்கு இடையே பதற்றம் நீடித்தது, கடந்த வாரம் இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதையடுத்து நிலைமை மேலும் மோசமடைந்தது.

வங்கதேச நீதிமன்றத்தில் இந்து துறவியின் சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை

தேச துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வங்காளதேச நீதிமன்றம் அவர் சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகாததால் செவ்வாய்கிழமை ஒத்திவைத்தது.

அவரது சம்மிலிதா சனாதனி ஜாகரன் ஜோட்டில் துறவியின் கூட்டாளியான ஸ்வதந்த்ர கௌரங்க தாஸ், "அரசியல் ரீதியாக உந்துதல் பெற்ற வழக்கறிஞர்கள் குழுவின்" அச்சுறுத்தல் காரணமாக எந்த ஒரு வழக்கறிஞரும் இந்து துறவி சார்பாக ஆஜராகவில்லை என்று கூறினார்.

சட்டோகிராம் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீதான விசாரணை தற்போது ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Bangladesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment