மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா,பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் வீட்டில் உள் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்டார். இந்நிலையில், விருந்தளித்த மறுநாளே மம்தா பானர்ஜி எனக்கும் மிகவும் நெருக்கமானவர் என கங்குலி பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
கொல்கத்தாவில் நேற்று நடந்த தனியார் ஆஸ்பத்திரி திறப்பு விழாவில் கலந்து கொண்ட கங்குலி, மம்தா பானர்ஜி நெருக்கம் குறித்து பேசினார்.
அவர் பேசியதாவது, ம்தா பானர்ஜி எனக்கும் மிகவும் நெருக்கமானவர். நான் உதவிக்காக அழைக்கும் போதெல்லாம் அவர் எப்போதும் பதிலளிப்பார். அவர் எப்போதும் மக்களுக்காக இருக்கிறார். எல்லா நேரத்திலும் மக்களுக்கு உதவுகிறார் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கங்குலி மனைவி டோனா கங்குலி கூறியதாவது, அமித் ஷா வீட்டிற்கு வந்தது மரியாதை நிமித்தமான சந்திப்பாகும். அரசியல் விவாதம் நடக்கவில்லை. ஏதாவது நடந்தால் அது மக்களுக்குத் தெரிய வரும். கங்குலி அரசியலுக்கு வருவாரா என்பது தெரியவில்லை. ஆனால் அப்படி நடந்தால் கண்டிப்பாக மக்களுக்காக உழைப்பார். இப்போதும் அவர் மக்களுக்காக பல பணிகளை செய்து வருகிறார் என்றார்.
மேலும், கங்குலி வீட்டிற்கு அமித்ஷாவுடன் பா.ஜ.க. தலைவர்கள் சுவபன் தாஸ்குப்தா, சுகந்தா மஜூம்தார், சுவேந்து அதிகாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கங்குலியை எப்போதும் கட்சி என்பதை தாண்டி, அரசியல் தலைவர்களால் விரும்பக்கூடியவர். மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜிவுடனும் மிகவும் நெருக்கமாக இருந்தார்.
மேலும், 2021 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு, அவர் பாஜகவின் முதல்வர் முகமாக இருக்கலாம் என்றும் வதந்திகள் வந்தன, ஆனால் அது நடைபெறவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil