வெவ்வேறு கொலை வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் கடந்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தூக்கிலிடப்பட்ட கேரளாவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களின் குடும்பங்கள், உதவிக் கேட்டு இளைஞர்கள் அழைத்ததாக தெரிவித்தனர்.
காசர்கோடு மாவட்டம் சீமானியைச் சேர்ந்த பி.வி.முரளீதரன் (43), கண்ணூர் மாவட்டம் தலச்சேரியைச் சேர்ந்த அரங்கிலோட்டு முகமது ரினாஷ் (24) ஆகியோர் பிப்ரவரி 15-ம் தேதி தூக்கிலிடப்பட்டனர். இதை பிப்ரவரி 28 அன்று இந்திய தூதரகம் அவர்களின் குடும்பங்களுக்கு தெரிவித்தது.
மார்ச் 7 தூக்கிலடப்பட்ட இளைஞர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முரளீதரனின் தந்தை கேசவன் கூறுகையில், " பிப்ரவரி 14 ஆம் தேதி தனது மகனின் தொலைபேசி அழைத்து காலை அவர் தூக்கிலிடப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தனது குடும்பத்தினரிடம் தெரிவித்ததாக கூறினார்.
இதையடுத்து "இந்தியாவிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் எங்களால் முடிந்த ஒவ்வொருவரையும் நாங்கள் உதவிக்கு அழைத்ததாகவும் தூக்கிலிடப்படுவதற்கு முந்தைய நாள் கூட, அவரை வெளியில் எடுக்க முயற்சித்ததாகவும்" கூறினார்.
கேசவனும் 2016க்கு முன் 30 ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஓட்டுநராக பணியாற்றியவர் ஆவர்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
திருமணமாகாத முரளீதரன், தனது 20 வயதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் அய்னுக்கு அரபு நாட்டவரின் மாளிகையில் பாதுகாவலராக பணியாற்றச் சென்றார். கால்பந்து வீரரான இவர், அல் அய்னில் உள்ள உள்ளூர் கால்பந்து கிளப்பில் தீவிரமாக விளையாடி வந்தார்.
முரளீதரன் மீதான குற்றச்சாட்டு என்னவென்றால், 2009 ஆம் ஆண்டில் கேரளாவைச் சேர்ந்த மற்றொரு நபரைக் கொலை செய்து அவரது உடலை பாலைவனத்தில் மறைத்து வைத்தார் என்பதுதான். அன்றிலிருந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
"மற்றவர்களும் குற்றத்தில் ஈடுபட்டனர், ஆனால் எனது மகன் குற்றத்தை மட்டுமே ஒப்புக்கொண்டார். நான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்தபோது, வெள்ளிக்கிழமைகளில் சிறையில் அவரைப் பார்ப்பது வழக்கம். அவர் வெளியே வருவார் என்ற நம்பிக்கையில் இருந்தார். பல சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை மலப்புரத்தில் சந்தித்தோம். அவனை மன்னிக்க அவர்கள் தயாராக இல்லை" என்றான் கேசவன்.
கண்ணூரின் தலச்சேரிக்கு அருகிலுள்ள நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த லைலாவுக்கு பிப்ரவரி 14 ஆம் தேதி அவரது மகன் ரினாஷிடமிருந்து அழைப்பு வந்தது. "அவர் அழுது கொண்டிருந்தார், தாய் உதவியற்றவராக இருந்தார்.
தனது மகனை காப்பாற்ற மதத் தலைவர்கள் தலையிட வேண்டும் என்று மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் மனு அளித்திருந்தார். ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்ய லைலாவிடம் பணம் இல்லை" என்று தலச்சேரியில் அவருக்கு உதவிய வழக்கறிஞர் கே.ஏ.லத்தீப் கூறினார்.
மார்ச் 8, லைலா மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் அல் அய்னில் ரினாஷின் அடக்கத்தில் தூதரகம் அவர்களின் பயணத்தை எளிதாக்கிய பின்னர் கலந்து கொண்டனர்.