கலாநிதி-தயாநிதி மாறன் பிரச்னைக்கு தீர்வு: ஸ்டாலின், வீரமணி, என். ராம் தலையீட்டில் தணிந்த சர்ச்சை!

சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் தயாநிதி மாறன் இடையிலான சொத்துப் பிரச்னை முதல்வர் ஸ்டாலின், தி.க. தலைவர் கி.வீரமணி மற்றும் 'தி இந்து' நாளிதழின் என். ராம் ஆகியோரின் தலையீட்டிற்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் தயாநிதி மாறன் இடையிலான சொத்துப் பிரச்னை முதல்வர் ஸ்டாலின், தி.க. தலைவர் கி.வீரமணி மற்றும் 'தி இந்து' நாளிதழின் என். ராம் ஆகியோரின் தலையீட்டிற்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

author-image
WebDesk
New Update
cable thirudargal

கலாநிதி- யாநிதி மாறன் பிரச்சனைக்குத் தீர்வு: ஸ்டாலின், வீரமணி, என். ராம் தலையீட்டில் தணிந்த சர்ச்சை!

சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவருடைய சகோதரரும் மக்களவை உறுப்பினருமான தயாநிதி மாறன் இடையிலான சொத்துப் பிரச்னை முடிவை எட்டியுள்ளதாகத் தெரிகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக மேற்கொண்ட சமரச முயற்சியின்படி சகோதரர்கள் இருவரும் இணக்கமான முடிவு நோக்கி நகர்ந்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சரும், கலைஞர் கருணாநிதியின் சகோதரி மகனும் ஆகிய முரசொலி மாறனுடைய மகன்களான கலாநிதி மற்றும் தயாநிதி இடையே சொத்து பகிர்வு தொடர்பாக முரண்பாடுகள் இருந்துவந்தன.
Advertisment

ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் 'தி இந்து' நாளிதழின் என். ராம் ஆகியோரின் தீவிரத் தலையீட்டிற்குப் பிறகு பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. தி.மு.க எம்.பி. தயாநிதி மாறனுக்கு சுமார் 800 கோடி ரூபாய் ரொக்கமாகவும், சென்னை 'போட் கிளப்' பகுதியில் 4 நிலப் பரப்புகளும், அவற்றின் மதிப்பு ரூ.800 கோடி எனவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மாறன் குடும்பம் மற்றும் தி.மு.க.வின் 2 உயர்மட்ட வட்டாரங்கள் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழிடம் தெரிவித்துள்ளன.

சர்ச்சையும் நிதி சார்ந்த குற்றச்சாட்டுகளும்:

மாறன் சகோதரர்களுக்கு இடையேயான இந்த மோதல் ஜூன் மாத தொடக்கத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது. அப்போது, தயாநிதி மாறன் தனது மூத்த சகோதரர் கலாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்பினார். 2000-களின் முற்பகுதியில் சன் டிவி நெட்வொர்க் தனியார் நிறுவனமாக இருந்தபோது, பங்கு ஒதுக்கீட்டில் மோசடி, நிறுவன முறைகேடு மற்றும் ஒருதலைப்பட்சமான முடிவுகள் எடுத்ததாகக் கலாநிதி மீது தயாநிதி குற்றம் சாட்டினார். சமரசத்திற்கு தயாநிதி 1,500 கோடி ரூபாய் கோரியதாகவும், ஆனால் கலாநிதி 500 கோடி ரூபாய் மட்டுமே வழங்க தயாராக இருந்ததாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisment
Advertisements

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸின்படி, 2003-ம் ஆண்டில், அவர்களின் தந்தை முரசொலி மாறன் கோமாவில் இருந்தபோது, கலாநிதி தனக்கு 12 லட்சம் ஈக்விட்டி பங்குகளை தலா 10 ரூபாய் என்ற பெயரளவிலான விலையில் ஒதுக்கிக்கொண்டார். சன் டிவியில் 60% க்கும் அதிகமான பங்குகளை அவருக்குக் கிடைக்கச் செய்தது. இதனால், மாறன் குடும்பம், கருணாநிதி குடும்பங்களின் பங்குகள் தலா 50% லிருந்து தலா 20% ஆகக் குறைக்கப்பட்டதாகவும் அந்த அறிவிப்பில் குற்றம் சாட்டப்பட்டது. கார்ப்பரேட் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பல மீறல்கள் நடந்திருப்பதாகவும் தனது அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த சன் டிவி, இந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் நிறுவனத்தின் பொதுப் பட்டியல் வெளியீட்டிற்கு முன்பே சட்டப்பூர்வமாக சரிபார்க்கப்பட்டதாகத் தெரிவித்ததுடன், இது "முழுவதும் தனிப்பட்ட குடும்பப் பிரச்னை" என்றும் குறிப்பிட்டது. எனினும், இந்த செய்தி வெளியானவுடன் சன் டிவியின் பங்கு விலைகள் சுமார் 8% க்கும் மேல் சரிந்து முதலீட்டாளர் நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்தது.

சமரச முயற்சிகளும் ஸ்டாலினின் தலையீடும்:

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு மிக அருகில் இந்த குடும்பப் பிரச்னை பகிரங்கப்படுத்தப்பட்டது ஸ்டாலினுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஸ்டாலின் இந்த விவகாரத்தைத் தணிக்க நேரடியாகத் தலையிட்டார். முதலில் தனது சொந்த முயற்சியில் சமரசம் செய்ய முயற்சி செய்த ஸ்டாலின், அது கைகூடாத நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி மற்றும் 'தி இந்து' நாளிதழின் முன்னாள் ஆசிரியர் என். ராம் ஆகியோரின் உதவியை நாடினார். இவர்கள் இருவருக்கும் மாறன் குடும்பத்துடன் நீண்டகால தொடர்பு உண்டு. ஜூன் கடைசி வாரம் முதல் ஜூலை முதல் வாரம் வரை, 2 நேர்முக மற்றும் ஒரு வீடியோ கான்பரன்ஸ் உட்பட 3 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வீரமணி, தமிழக அரசியலில் மூத்த தலைவராகவும், திராவிட இயக்கத்தில் மதிக்கப்படும் ஒருவராகவும் இருப்பதால், அவரது தலையீடு முக்கியத்துவம் பெற்றது. மேலும், அவருக்கு சன் டிவியில் எந்த நிதி நலனும் இல்லை. மாறன் குடும்பத்தின் உறவினரான என். ராம், ஊடகத் துறையில் அவரது நம்பகத்தன்மையால், இந்த மத்தியஸ்தப் பேச்சுவார்த்தைக்குச் சமநிலையையும் நம்பகத் தன்மையையும் வழங்கினார்.

இந்த சமரசத்தின் ஒரு பகுதியாக, தி.மு.க எம்.பி. தயாநிதி மாறனுக்கு சுமார் 800 கோடி ரூபாய் ரொக்கமாகவும், சென்னை 'போட் கிளப்' பகுதியில் சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பிலான 4 நிலப்பரப்புகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தயாநிதி ஆரம்பத்தில் 1,500 கோடி ரூபாய் கோரியதாகவும், கலாநிதி 500 கோடி ரூபாய் மட்டுமே வழங்க முன்வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், நீண்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு இந்த இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந்தத் தகராறு தொடர்ந்தால் தி.மு.க. மற்றும் மாறன் குடும்பத்தின் நற்பெயருக்கு ஏற்படும் பாதிப்புகள், அத்துடன் வழக்குகளின் நீண்டகால தன்மை மற்றும் அதிக சட்டச் செலவுகள் ஆகியவை பேச்சுவார்த்தைகளில் வலியுறுத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறைந்த முரசொலி மாறன் குடும்பத் தலைவராக இருந்தவரை சகோதரர்களுக்குள் அமைதி நிலவியது. ஆனால், 2007 ஆம் ஆண்டில் 'தினகரன்' நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்பு, குடும்பத்தில் முதல் விரிசலை ஏற்படுத்தியது. தற்போது நிதி சார்ந்த குற்றச்சாட்டுகள் இணைந்ததால், இந்த மோதல் மிகவும் மோசமானதாகக் கருதப்பட்டது.

"இந்த முழு விஷயமும் வேறு திசையில் போயிருக்கலாம்" என்று ஒரு மூத்த வட்டாரம் கூறியது. "ஆனால் ஸ்டாலின், வீரமணி மற்றும் ராம் ஆகியோர் இதைத் தெளிவாகக் கூறினர்: இது எல்லோரையும் பலவீனப்படுத்துவதற்கு முன்பு இப்போது முடிவுக்கு வரட்டும்." இந்த விவகாரம் குறித்து என். ராம் தொடர்பு கொண்டபோது "எனக்கு எந்தக் கருத்தும் இல்லை" என்று கூறிய அதே வேளையில், கலாநிதி, தயாநிதி மற்றும் வீரமணியை தொடர்பு கொள்ள முடியவில்லை.

Dmk Kalanithi Maran Dayanidhi Maran Mk Stain

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: