Deeptiman Tiwary , Bashaarat Masood
காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில், மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (DDC) தேர்தலுக்காக வேட்பு மனுவை தாக்கல் செய்த மூன்றே நாட்களில் தேசிய விசாரணை முகமை புதன்கிழமை அன்று பீப்பிள் டெமாக்ரட்டிக் பார்ட்டியின் இளைஞர் அணி தலைவர் வஹீத் உர் ரெஹ்மான் பாராவை கைது செய்தது. முன்னாள் காவல்துறை அதிகாரி தேவிந்தர் சிங்குடன் தொடர்பு இருப்பதால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இன்று, தேசிய விசாரணை முகமை வஹீத், நவீத் பாபு/தேவிந்தர் சிங்கின் ஹிஸ்புல் முஜாஹீதீன் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டார் என்ற் என்.ஐ.ஏ. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவிந்தர் சிங் முன்னாள் துணை காவல் ஆய்வாளர் இந்த ஆண்டு ஜனவரி 11ம் தேதி அன்று, ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதியான நவீத் பாபுவுடன் காரில் சென்று கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு பின்பு என்.ஐ.ஏ.விற்கு மாற்றப்பட்டது. தீவிரவாதிகளுக்கு வெகு நாட்களாக ஆதரவை வழங்கி வருகிறார் தேவிந்தர் என்று குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்.ஐ.ஏ.
”இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சில முக்கிய குற்றவாளிகளுடன் பாரா தொடர்பில் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். அவர் இந்த சதித்திட்டம் குறித்து அவருக்கு தெரிந்துள்ளது என்பதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அதில் அவர் ஈடுபட்டிருக்கலாம்” என்று விசாரணை முகமை அறிவித்துள்ளது.டெல்லியில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு பாராவை அழைத்திருந்தது என்.ஐ.ஏ..
திங்கள் கிழமை அன்று டெல்லிக்கு கிளம்புவதற்கு முன்பு, பாரா, இந்தியன் எக்ஸ்பிரஸிடம், “”அரசியல் ஈடுபாடு தொடங்கப்பட்டு தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தல்களுக்கு பொருத்தமான வேட்பாளர்களைக் கொண்டுவருவதில் நான் களத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன், கட்சிக்கு உதவுகிறேன். இன்று, எனக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, என்னை டெல்லியில் விசாரணைக்கு வரும்படி கூறப்பட்டுள்ளது…” இதற்கு அரசியல் உந்துதல் தான் காரணம் என்று கூறியுள்ளார் அவர்.
பாரா மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறிய பிடிபி தேர்தல்களுக்கும் அவரின் கைதுக்கும் இடையேயான தொடர்பை மேற்கோள்காட்டியது.
ஜனநாயகத்தை வலுப்படுத்தியதற்காக பி.டி.பி.யின் பாரா வாஹித் அன்றைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கால் பாராட்டப்பட்டார். இன்று என்.ஐ.ஏ ஆதாரமற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 20 ஆம் தேதி அவர் டி.டி.சி-க்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அடுத்த நாளிலேயே என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியது என்பது தற்செயல் நிகழ்வு அல்ல ”என்று முன்னாள் முதல்வரும் பிடிபி தலைவருமான மெஹபூபா முப்தி ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பாஜக அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ நீக்குவதை சட்டத்திற்கு மாறாக செய்து வருகிறது. அதனை காஷ்மீரிகள் எதிர்த்து கேள்வி கேட்கும் போது அவர்கள் வீட்டிற்குள் பூட்டப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள். தேவிந்தர் சிங் யாருடைய உத்தரவின் கீழ் பணியாற்றினார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் மற்றவர்களை குறை கூறுவது முரணாக உள்ளது. வஹீதுக்கு இவர்கள் கூறும் அந்த நபருடன் எந்த தொடர்பும் இல்லை. மேலும் பொய்யாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பி.டி.பி. மற்றும் இதர முக்கிய கட்சிகளை அச்சுறுத்தவே இது பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். பி.டி.பி. வட்டாரம், பாராவின் கைது முஃப்திக்கு தனிப்பட்ட வகையில் பின்னடைவு என்று கூறியுள்ளது.
32 வயதான அவர் முஃப்தியின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவராக உள்ளார். மேலும் கள பணிகளில் மேலாளராக உள்ளார். ஒரு கூட்டத்தை கவர்ந்திழுக்க கூடிய வகையில் இருக்கும் பாரா, முஃப்தியின் கைது காலத்திலும் அனைத்து தொண்டர்களுடனும் இணைப்பில் இருந்தார். பாரா குடும்பத்தினரும் முஃப்தி குடும்பத்தினரும் வெகுநாட்களுக்கு முன்பில் இருந்தே அரசியல் பந்தத்தில் ஒன்றாக பயணிப்பவர்கள். பாராவின் தாத்தா அப்துல் ரெஹ்மான் பாரா முஃப்தி முகமது சயீதின் நெருங்கிய நண்பராக இருந்தார். தெற்கு காஷ்மீரில் குறிப்பாக புல்வாமாவில் பி.டி.பியின் வெற்றி என்பது களத்தில் பாராவின் மைக்ரோ மேனேஜ் திறமையால் உருவானது என்று கட்சிக்காரர்களே கூறுவது உண்டு.
2016ம் ஆண்டு பாரா ஜம்மு காஷ்மீரின் சிறப்பு கவுன்சில் செயலாளராக பணியாற்றிய போது அம்மாநிலத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்தியதற்காக அன்றைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராவை வாழ்த்தினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்த போது முஃப்தியுடன் சேர்த்து பாராவும் சில முக்கிய தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஆறு மாதங்கள் சிறையில் இருந்த அவர் பிப்ரவரி மாதம் விடுதலை பெற்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Days after he entered ddc polls pdp youth chief held in terror case