DD National to telecast Ramayana from Saturday on public demand : கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க சுய ஊரங்கு, சமூக தனிமைப்படுத்தல் ஆகியவற்றை இந்தியா 21 நாட்களுக்கு மேற்கொள்ள உள்ளது. 21 நாட்கள் ஊரடங்கு நிகழ்வின் போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது, எப்படி பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என பல தரப்பில் இருந்து அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
இந்நிலையில் நாளை முதல் (மார்ச் 28) தூர்தர்ஷன் சேனலில் காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களில் ராமாயணம் தொடர் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது என்றும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
Happy to announce that on public demand, we are starting retelecast of 'Ramayana' from tomorrow, Saturday March 28 in DD National, One episode in morning 9 am to 10 am, another in the evening 9 pm to 10 pm.@narendramodi
@PIBIndia@DDNational
— Prakash Javadekar (@PrakashJavdekar) March 27, 2020
இந்த நிகழ்ச்சி நாளையில் இருந்து காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 9 மணியில் இருந்து 10 மணி வரையிலும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் ஊரடங்கு நிலையில் இருப்பதால் மக்கள் பலரும் ராமானந்த் சாகர் இயக்கத்தில் உருவான ராமாயணம் மற்றும் பி.ஆர். சோப்ரா இயக்கத்தில் உருவான மகாபாரதம் ஆகியவற்றை ஒளிபரப்ப வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை வெளியிடுவதாக பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.