இந்தியாவின் கொரோனா தொற்று தடுப்பு பணிக்குழுவின் தலைவரான டாக்டர் வி.கே.பால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாகவும், குழந்தைகளுக்கான சோதனைகள் நிறைவடைந்தவுடன் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 12-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஃபைசரின் கடத்து ஆர்என்ஏ தடுப்பூசியை வாங்குவதற்கான திட்டத்தை இந்திய அரசாங்கம் கொண்டுள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த 25 முதல் 26 கோடி டோஸ் தடுப்பூசிகள் தேவைப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய அவர், ‘குழந்தைகளுக்கு எந்த தடுப்பூசி பயன்படுத்தப்பட வேண்டும் என்ற பிரச்சினையில், குழந்தைகளின் எண்ணிக்கை என்பது, சிறிய எண்ணிக்கை அல்ல என்பதை நினைவில் கொள்க வேண்டும். எனது தோராயமான பகுப்பாய்வு என்னவென்றால், 18-12 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றால், 13-14 கோடி எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு செலுத்த 25 முதல் 26 கோடி தடுப்பூசி டோஸ்கள் தேவை. குறிப்பிட்ட சில குழந்தைகளுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்துவது அர்த்தமற்ற செயல்.
பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தவிர, சைடஸ் காடிலாவின் தடுப்பூசியும் குழந்தைகள் மீது பரிசோதிக்கப்படுகிறது. இந்த இரண்டு தடுப்பூசிகளும் குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு ஊசி போடக்கூடிய தடுப்பூசிகள் என்பதைக் குறிக்கிறது. நாங்கள் இதை கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். முதலாவது எந்த தடுப்பூசி கொடுக்க வேண்டும் என்பதை தீவிர ஆய்வுகளுக்கு பின்பு உறுதிப்படுத்தி உள்ளோம். தற்போது, தடுப்பூசி ‘ஏ’ ஃபைசர் பொருத்தமானது என்பதை கண்டறிந்துள்ளோம். கடுமையான பக்க விளைவுகளுக்கான இழப்பீட்டு செலவுகளுக்கு எதிராக ஃபைசர் மற்றும் இந்திய உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
கொள்கையளவில், வெளிநாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்கள் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். உலகெங்கிலும் இதுதான் நடைமுறையில் இருந்து வருவதாக நிறுவனங்கள் கூறுகின்றன. இதனை நாங்கள் மற்ற நாடுகளுடனும் சோதனை செய்துள்ளோம். குறிப்பிட்ட நிறுவனங்கள் இழப்பீடுகளை கோரியுள்ளன. நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால், தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கிய மூன்று கோவிட் -19 தடுப்பூசிகளில் ஏதேனும் உற்பத்தியாளர்களுக்கு கடுமையான பக்கவிளைவுகளுக்கான இழப்பீட்டு செலவுகளுக்கு எதிராக இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் இழப்பீடு வழங்கவில்லை. இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தின் முன்னேற்றத்தை மறுஆய்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை உயர்மட்டக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
தடுப்பூசிகளின் தற்சமயத்தில் கிடைக்கும் தன்மை மற்றும் அதை அதிகரிப்பதற்கான திட்டங்கள் குறித்து பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது. இது, பல்வேறு தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். இந்திய அரசு தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் தீவிரமாக பணியாற்றி வருகிறது, மேலும் உற்பத்தி பிரிவுகளுக்கு உதவுதல், மூலப்பொருட்களை வழங்குதல் ஆகியவற்றில் அவர்களுக்கு உதவி வருவதாக பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நேற்று 33,57,713 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 31,01,109 பயனாளிகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. 2,56,604 பயனாளிகள் தங்களுக்கான 2 வது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொண்டதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil