ஜிஎஸ்டியில் மாநிலத்தின் 14% வளர்ச்சி விகித அனுமானம் தவறானதா ?

எவ்வாறாயினும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுடன் சமசரம் செய்ய வேண்டும் என்ற உணர்வில் 14 சதவிகிதத்தை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது..

By: Updated: December 26, 2019, 06:53:46 PM

தற்போது  ஜிஎஸ்டியின் வருவாய்  குறைந்து  வருவதால், மத்திய நிதி மந்திரி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு புதிய பதற்றம் உருவாகியுள்ளது.  சரக்கு மற்றும் சேவை வரி (மாநிலங்களுக்கு இழப்பீடு) சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இழப்பீட்டு நெறிமுறையின் கீழ் 14 சதவீத “உயர்” வருவாய் வளர்ச்சி விகித அனுமானத்தையே தற்போது சிலர் கேள்வியாக்க விரும்புகின்றனர்.

பணவீக்கம் 4-5 சதவிகிதமாகவும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5-6 சதவிகிதமாகவும் எதிர்பார்க்கப்படுவதால், மத்திய அரசால் மாநிலங்களுக்கு 14 சதவீத வளர்ச்சி விகிதத்தில் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவது கடினம்” என்று பாஜக ஆளும் மாநில நிதி அமைச்சர் ஒருவர்  ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ என்ற நாளிதழுக்கு  கூறினார்.

 

பல்வேறு பொருட்களுக்கான மீதான ஜி.எஸ்.டி விகிதம்  தற்போது அதிகரிக்க வாய்ப்பு இல்லாத நிலையில், முந்தைய காலங்களில் மாநிலங்கள் வசூலித்த/வசூலிக்கும்  வரிவருவாய் வளர்ச்சி விகிதம் உண்மை தான் என்ன ? (மாநிலங்களின் வரி 2017ம் ஆண்டிற்கு பின் ஜிஎஸ்டி-ன் கீழ் வந்தது)  என்ற கேள்வி தற்போது முக்கியத்துவமாகி உள்ளது.

2015-16க்கு முந்தைய மூன்று ஆண்டுகளில், சிறப்பு அந்தஸ்து பெறாத மாநிலங்களின் மொத்த வரி வளர்ச்சி விகிதம்  வெறும் 8.9 சதவீதமாக இருந்தன. 2015-16 அடிப்படை ஆண்டாக  வைத்து மாநிலங்களுக்கு இழப்பீடாக  நிர்ணயிக்கப்பட்ட 14 சதவீத வருவாய் வளர்ச்சி (ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்படுவதால்) விகிதத்தை ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு.

இவ்வளவு ஏன்…..  2015-16க்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் அகில இந்திய ( சிறப்பு அந்தஸ்து மாநிலங்களையும் சேர்த்து ) சராசரி வரி வளர்ச்சி விகிதம் விகிதம் 10.6 சதவீதமாக இருந்தது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் உள்ள தரவுகளின் படி , 2018-19 ம் ஆண்டில், ஒரு மாதத்திற்கும் மாநிலங்களின் இழப்பீட்டிற்காக மத்திய அரசிற்கு தேவைப்படும் சராசரி வருவாய் ரூ.49,020 கோடியாகும். ஆனால், மாநிலங்களுக்கான சராசரி மாத வருவாய் வெறும் ரூ .43,166 கோடி தான் வசூலாகியது. இதன் பொருள், மத்திய அரசு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு 6,000 கோடி ரூபாய் (அ) ஆண்டிற்கு 72,000 கோடி ரூபாய் துண்டு விழுகிறது.

GST, GST compensation, Nirmala Sitharaman, economy slowdown, Goods and Services Tax, Indian Express

இருப்பினும்  2019-20 ம் ஆண்டில், இந்த இடைவெளி மாதத்திற்கு கிட்டத்தட்ட ரூ .13,000 கோடியாக அல்லது ஆண்டுக்கு ரூ .1,56,000 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது முந்தைய ஆண்டின் இழப்பீட்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

இதனால், புது வருவாயைத் திரட்ட  மத்திய அரசு கடுமையாக போராடி வருகிறது. ஜிஎஸ்டி இழப்பீடு தாமதமாக செலுத்துவதில் மாநிலங்கள் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்துள்ளன.

நடப்பு நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில்,  இழப்பீட்டு செஸ் ரூ. 1.09 லட்சம் கோடி வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு  மதிப்பிட்டிருந்தது. ஆனால், நவம்பர் வரையிலான இந்த இழப்பீடு செஸ் வசூல் ரூ .64,528 கோடி. முழு நிதியாண்டிற்கும் இந்த செஸ் வசூலை கணக்கு செய்தாலும் ரூ .96,792 கோடி மட்டும் மத்திய அரசிற்கு கிட்டும். ரூ .59,208 கோடி பற்றாக்குறையை ஏற்படுத்தும்.

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி வளர்ச்சி விகித அனுமானம் 14 சதவீதத்திற்கும் குறைவாக இருந்திருந்தால், இழப்பீட்டுத் தொகை குறைவாகத்தான் இருந்திருக்கும்.


தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மாநிலங்கைல் வரி வசூல் விகித டேட்டாவை ஆய்வு செய்த பொது , மூன்று ஆண்டு காலப்பகுதியில் (அதவாது, 2013-14 முதல் 2015-16 வரை)  சிறப்பு அந்தஸ்து பெறாத 17 மாநிலங்களில் வெறும் எட்டு மாநிலங்கள் மட்டுமே வரி வருவாய் வளர்ச்சியில் இரட்டை இலக்கை பதிவு செய்திருக்கின்றன.  ஜார்க்கண்ட் (13.1 சதவீதம்), பீகார் (13 சதவீதம்), ஹரியானா (11.7 சதவீதம்), ராஜஸ்தான் (11.6 சதவீதம்), மத்தியப் பிரதேசம் (11 சதவீதம்), கர்நாடகா (10.7 சதவீதம்), கோவா (10.5 சதவீதம்), கேரளா (10.4 சதவீதம்).

குஜராத், மகாராஷ்டிரா போன்ற உற்பத்தி மாநிலங்கள் முறையே 3.6 சதவீதம் மற்றும் 9.4 சதவீத வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.  அதே சமயம் ஆந்திரா (3.5%), மேற்கு வங்கம் (7.7% ), உத்தரபிரதேசம் ( 9.4%) வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கின்றன.

மாநிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு வளர்ச்சி விகிதத்தை நிர்ணயிக்கும் தொடர்பாக, ​​ஜிஎஸ்டி கவுன்சில் பல யுக்திகளை யோசித்தது.

2015-16க்கு முந்தைய மூன்று ஆண்டுகளின் அடிப்படையில் இருக்கலாமா (அ) முந்தைய ஐந்து ஆண்டுகளின் வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் இருக்கலாமா (அ) நாட்டின் நாமினல் ஜிடிபி வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் இருக்கலாமா? என்ற பல்வேறு கோணங்களில் யோசிக்கப்பட்டது.

நாட்டின் நாமினல் ஜிடிபி அடிப்படையில் சமமான இழப்பீடு வழங்கும் விகிதம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.  பொருளாதார மந்தநிலை காரணமாக போதுமான வருவாய் ஈட்டப்படாவிட்டால்,மாநிலங்களுக்கு போதுமான வருவாய் கிடைக்காமல் போகும்.

ஜிஎஸ்டி கவுன்சிலில் முதல் சில கூட்டங்களுக்கு தலைமை தாங்கிய, ​​அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மாநிலங்களின் வளர்ச்சி விகிதத்தை 10.6 சதவீதம் போதுமானது என்று முன்மொழிந்தார். ஏனெனில், 2015-16ம் ஆண்டிற்கு முந்தைய மூன்று ஆண்டின், அகில இந்திய வளர்ச்சி விகிதமும்  இதற்கு இணையாக இருந்தது. எவ்வாறாயினும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுடன் சமசரம் செய்ய வேண்டும் என்ற உணர்வில் 14 சதவிகிதத்தை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது .

செப்டம்பர் மாதம் கோவாவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மாநிலங்களுக்கு சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட 14 சதவீத வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை (2022ம் ஆண்டு வரை) குறைக்க 15 வது நிதி ஆணையம் பரிந்துரைத்தது. எவ்வாறாயினும், மாநிலங்கள் இந்த முன்மொழிவுக்கு  உடன்படவில்லை.

கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் குறைந்து வருவது மத்திய, மாநில அரசுகளை கவலைக்குள்ளாக்குகிறது. முந்தைய இரண்டு மாதங்களிலும் (நவம்பரைத்  தவிர,)  ஜிஎஸ்டி வசூல் சுருங்கியது, இது மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதை தாமதப்படுத்த வழிவகுத்தது.

வருவாய் பெருக்குதலுக்கான பொருட்கள் மீதான வரி விகிதத்தை உயர்த்த  அதிகாரிகள் குழு பரிந்துரைத்திருந்தாலும், ஜிஎஸ்டி கவுன்சில் அதன் சமீபத்திய கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எதிராக  எதிர்வினையாக முடிவு செய்தது. வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்துவதிலும், வருவாயில் மேம்பட்ட விதத்தில் செலவு செய்வதிலும்  ஜிஎஸ்டி கவுன்சில் கவனம் செலுத்தியது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Declining in gst revenuesputs a question mark about 14 legal revenue rate for state compensation

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement