அயோத்தியில் ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு கும்பாவிஷேகத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ராமரின் மனைவியான சீதாவின் பிறப்பிடமாக நம்பப்படும் சீதாமர்ஹியில் உள்ள புனூர்தாத்தை மீண்டும் புதுப்பிப்பு செய்வதற்காக ரூ72 கோடி மதிப்பிலான திட்டத்தை பீகார் முதல்வர் நிதீஷ் குமார் இந்த வாரம் வெளியிட்டார்.
ஆங்கிலத்தில் படிக்க : Decode Politics: In Bihar, why a plan to develop Sita birthplace has sparked a row
இந்த திட்டத்தின் கீழ் சீதாமர்ஹி புனரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும். சீதாகுண்ட் சீரமைப்பு பணிகளை முடித்து, பக்தர்கள் கவனம் ஈர்க்கும் வகையில், அதன் சுற்றுப்புறங்களை அழகுபடுத்த வேண்டும்” என்று டிசம்பர் 13 அன்று நடந்த நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும், அயோத்தி ராமர் கோவில் கும்பாவிஷேகத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,
பீகார் அரசின் இந்த திட்டம் பாஜக மற்றும் சங்பரிவாரால் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படுகிறது. பீகார் அரசின் இந்த முடிவு, ஜே.டி.(யு) (JD(U)) மற்றும் அதன் முன்னாள் கூட்டணி கட்சியான பாஜக இடையே இடையே வார்த்தைப் போரைத் அதிகரித்துள்ளது.
இந்த திட்டம் எதை உள்வாங்கியுள்ளது?
மத்திய சுற்றுலா துறையின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் வளர்ச்சிக்காக அடையாளம் காணப்பட்ட 15 கருப்பொருள் சுற்றுகளில் ஒன்றான ராமாயண சர்க்யூட்டில் உள்ள 15 சுற்றுலா மற்றும் மத இடங்கள் மத்திய அரசின் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும், பீகார் அரசாங்கத்தின் சீதாமர்ஹி திட்டம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உள்ள திட்டங்கள் மாநில அரசுகள் அல்லது யூனியன் பிரதேச நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்து அடையாளம் காணப்படுகின்றன.
மாநில அரசின் திட்டத்தில் கூரை மற்றும் மணற்கல் தூண்களுடன் கூடிய பரிக்கிரமா பாதை (கோயிலைச் சுற்றி வருவதற்கான பாதை) அமைப்பது உள்ளிட்ட பணிகள் இடம்பெற்றுள்ளது. ஒரு சீதா வாடிகா (சீதாவின் தோட்டம்), லுவ்-குஷ் வாடிகா (லுவ்-குஷ் தோட்டம்) சாந்தி மண்டபம் (தியானத்திற்கான பகுதி) ஒரு உணவு விடுதி மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவையும் இந்த திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் சீதாவின் வாழ்க்கையை சித்தரிக்கும் 3டி அனிமேஷன் படமும் தயாராகி வருகிறது. மேலும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ராமர் மற்றும் சீதையுடன் தொடர்புடையதாக நம்பப்படும் ஒரு டஜன் தளங்களையாவது மறுவடிவமைக்க மாநில சுற்றுலாத் துறை முடிவு செய்து செயல்பட்டு வருகிறது.
ஒரு அரசியல் மந்தநிலை
முஸ்லீம் திருப்திப்படுத்தல் குற்றச்சாட்டுகளை மறைக்க ஜே.டி.(யு) இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முயற்சிப்பதாகவும், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக "மென்மையான இந்துத்துவாவை" கொண்டுவர முயற்சிக்கிறார்கள் என்றும் பாஜக குற்றம் சாட்டுகிறது. அதேபோல் மறுபுறம், சீதையுடன் தொடர்புடையதாக நம்பப்படும் இடங்கள் உட்பட முக்கியத்துவம் வாய்ந்த மற்ற இடங்களைப் புறக்கணித்துவிட்டு, ராமர் கோயிலின் வளர்ச்சியில் மட்டுமே பாஜக கவனம் செலுத்துகிறது என்று ஜேடி (யூ) குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இது குறித்து ஜேடி (யு) எம்எல்சியும் பீகார் மாநில மத அறக்கட்டளையின் உறுப்பினருமான நீரஜ் குமார் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், அனைத்து மதங்களையும் மதிக்கிறேன் என்று முதல்வர் எப்போதும் கூறினார். "அது கல்லறைகள், கோவில்கள் அல்லது வேறு எந்த மத வழிபாட்டுத் தலங்களுக்கு வேலி அமைத்தாலும் சரி, அத்தகைய அனைத்து இடங்களின் வளர்ச்சிக்காக எங்கள் அரசாங்கம் செயல்படுகிறது," என்று அவர் கூறினார்.
மேலும் பீகார் அரசின் இந்த திட்டம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு மறுவடிவமைப்புத் திட்டமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில் அளித்த அவர், சீதையுடன் தொடர்புடையதாக நம்பப்படும் இடங்கள் பீகாரின் கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாகவும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை. “ராமர் கோயில் மேம்பாட்டுக்காக 3,000 கோடி ரூபாய் செலவழிக்கும் மத்திய அரசு, சீதை தொடர்பான இடங்களையும் மேம்படுத்தியிருக்க வேண்டும். நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம், இதில் எந்த அரசியலும் இல்லை சாலைகள் அமைப்பதற்காக அகற்ற வேண்டிய கோவில்களை பீகார் அரசு இடமாற்றம் செய்திருந்திருந்தது. ஆனால், நெடுஞ்சாலைகள் அமைக்கும் போது மத்திய பாஜகவிடம் அத்தகைய திட்டம் எதுவும் செயல்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், ஜே.டி.(யு) நடவடிக்கையை "மென்மையான இந்துத்துவா" என்று குறிப்பிட்ட பாஜக மாநில துணைத் தலைவர் சந்தோஷ் பதக் “அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது இந்தியாவின் ஒட்டுமொத்த பெருமைக்குரிய விஷயம். ஜே.டி.(யு) முஸ்லீம் திருப்திக்கு பெயர் போனாலும், மென்மையான இந்துத்துவா முயற்சியில் ஈடுபட்டுள்ளது,” என்றார்.
பீகார் மற்றும் இந்துத்துவா
சோசலிச அரசியலுடன் அதன் நீண்ட தொடர்பு காரணமாக, இந்துத்துவா பீகாரின் தேர்தல் மையப் புள்ளியாக இல்லை. 1992-ல் பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு, அடுத்தடுத்த தேர்தல்களில் பாஜக மோசமாக செயல்பட்டது. 1995 தேர்தலில், கட்சி 324 (பிரிக்கப்படாத பீகார்) இடங்களில் போட்டியிட்டு 41 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. பாஜக தனித்து போட்டியிட்டபோதும் தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. 2015 தேர்தலில், நரேந்திர மோடி அலை இருந்தாலும், அக்கட்சி 243 இடங்களில் 91 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
நிதீஷ் குமார் மற்றும் அவரது அரசாங்கம் மீது மென்மையான இந்துத்துவா குற்றச்சாட்டுகள் இருந்தாலும், மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் இந்துத்துவா உணர்வை பாஜக பணமாக்குவது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது..
இந்துத்துவா பற்றி பேசும் எதிர்கட்சிகளில் ஜே.டி.(யு) மட்டும் இல்லை
பெரிய எதிர்க்கட்சியான இடத்தில், "ஜெய் ஸ்ரீராம்" என்ற முழக்கத்தால் பொதிந்துள்ள பாஜகவின் இந்துத்துவா உந்துதலை எதிர்க்கும் விதமாக, சீதையின் மீது ஒரு எதிர்க்கட்சி தலைவர் கவனம் செலுத்த முயற்சிப்பது இது முதல் முறையல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாரத் ஜோடோ யாத்ராவின் ஹரியானாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு பொதுக் கூட்டத்தில், “யே (ஆர்எஸ்எஸ்) ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறியிருந்தார். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஒருபோதும் ‘ஜெய் சியா ராம்’ என்று சொல்வதில்லை.
சீதையை பற்றி பேசுவதை அவர்கள் மறந்துவிட்டார்கள். இது நம் வரலாற்றிற்கு எதிரான ஒன்று. நான் உங்களிடம் (காங்கிரஸ் தொண்டர்கள்) சொல்கிறேன், ஒவ்வொரு முறையும் நீங்கள் ஆர்.எஸ்.எஸ்.காரரை சந்திக்கும் போது, அவர்களை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லுங்கள்.ஏனென்றால் சீதை ராமரைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.