Advertisment

முஸ்லீம், கிறிஸ்தவ வாக்குகள் : காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ; கேரளாவில் பா.ஜ.க வெற்றிக்கு காரணம் யார்?

கேரளாவில் சிபிஎம் முதலாவதாகவும், பா.ஜ.க இரண்டாவதாகவும் குறிவைத்தாலும் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது. திருச்சூரில் பாஜக வெற்றி பெறுவதற்கு இடதுசாரிகள் ஒரு மறைமுகமான ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Kerala Politics Decode Pol

திருவனந்தபுரம் தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து, காங்கிரஸ் தலைவர் சசி தரூர், திருவனந்தபுரத்தில் அக்கட்சியின் ஆதரவாளர்களுடன் கொண்டாட்டம்

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், 20 தொகுதிகளை கொண்ட கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் 18 இடங்களிலும், பாஜக மற்றும் சிபிஐ(எம்) கட்சிகளுக்கு தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், கேரள தேர்தல் முடிவுகளில் இருந்து சில முக்கிய அம்சங்களை பார்ப்போம்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க : Decode Politics: Muslim to Christian vote, divisions within Cong, to Left, what Kerala results show

மக்களவைக்கு காங்கிரசையே விரும்பும் கேரளா

கேரளா மாநிலம் எப்போதுமே சட்டசபை தேர்தலை விட லோக்சபா தேர்தலில், வித்தியாசமான ஓட்டுப்பதிவை, காட்டி வருகிறது. மக்களவை தேர்தல்களில் ஒரு சில மாற்றங்களை தவிர, எப்போதும் இடதுசாரிகளை விட காங்கிரஸ் கட்சியையே கேரளா விரும்புகிறது. 2024 லோக்சபா தேர்தலில், நாட்டில் மற்ற இடங்களில் இடதுசாரிகள் தங்களது இடங்களை பறிகொடுத்த சமயத்தில், தேசிய அளவில் காங்கிரஸுக்கு மாற்றாக இருக்கும், தங்கள் அதிகம் விமர்சிக்கும் பா.ஜ.கவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இயலாத தன்மையை காட்டியது.

மாநில அரசுக்கு எதிரான எதிர்ப்பு, எம்.பி.க்களுக்கு எதிராக அல்ல

மத்தியில் 10 ஆண்டுகால மோடி அரசுக்கு எதிரான கண்டன வாக்கெடுப்பு, கேரளாவில் எட்டு வருட பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசாங்கம் கொடுத்துள்ள ஆட்சிக்கு எதிரான ஒரு முக்கிய காரணி யூடிஎஃப்க்கு ஆதரவாக செயலபட்டுள்ளது. களத்தில், சிபிஐ(எம்) மீது கடும் அதிருப்தி இருந்தாலும், அக்கட்சி தனது ஆட்சி குறித்த விமர்சனங்கள் மற்றும் எந்த விவாதத்தையும் தவிர்த்து வந்தது. அதே நேரத்தில், யூடிஎஃப் கூட்டணியில், குறிப்பாக காங்கிரஸ், அனைத்து சிட்டிங் எம்.பி.க்களையும் இந்த தேர்தலில் களமிறங்கியது.  அவர்களில் பலர் 2-3 முறை தங்கள் தொகுதிகளில் வெற்றியை பெற்றிருந்தனர். தற்போது அதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றியை பெற்றுள்ளனர்.

சி.பி.ஐ.(எம்) vs யூ.டி.எஃப் முஸ்லிம்கள் ஆதரவு யாருக்கு?

தேசிய அளவில் பா.ஜ.கவை உறுதியாக எதிர்த்துப் போராடக்கூடிய ஒரே கூட்டணியாக இடதுசாரிகள் தான் என்று சிபிஐ(எம்) முன்னிறுத்தியது. ஆரம்பத்தில் இருந்தே, கட்சி சி.ஏ.ஏ-  சட்டத்தை அதன் முக்கிய தேர்தல் திட்டமாக மாற்றியது. மேலும் இந்த சட்டம் குறித்து காங்கிரஸ் அமைதியாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML), முஸ்லிம்கள் ஆதிக்க சக்தியாக இருக்கும் வடக்கு கேரளாவில் உள்ள அனைத்து இடங்களிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேரளாவில் மற்ற இடங்களில், சிபிஐ(எம்)-ன் பிரச்சாரம, இந்து மற்றும் கிறிஸ்தவ வாக்குகளை இடதுசாரிகளுக்கு கிடைக்காமல் தடுத்திருக்கலாம்.

காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த கிறிஸ்தவர்கள்

முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மரணம் உட்பட பல முன்னணி கிறிஸ்தவ முகங்கள் கட்சியில் இருந்து வெளியேறிய பிறகும் மத்திய கேரளாவில் காங்கிரஸ் பெற்ற மாபெரும் வெற்றி, காங்கிரஸின் மீதான சமூகத்தின் விசுவாசம் அப்படியே இருப்பதைக் காட்டுகிறது. மத்திய கேரளத் தொகுதிகளான எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா ஆகிய இடங்களில், சிபிஐ(எம்) மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் கிறிஸ்தவ வேட்பாளர்களை நிறுத்தியது, ஆனால் யூடிஎஃப் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. பாஜக கிறிஸ்தவ பரப்புரைத் திட்டங்கள் மற்றும் முஸ்லீம் எதிர்ப்பு பிரச்சாரத்தை ரத்து செய்தது. மணிப்பூரில் நடந்த வன்முறை, பழங்குடியினரிடையே குறிப்பாக கிறிஸ்தவ பழங்குடியினருடன், கட்சி மீதான நற்பெயரை சீர்குலைத்தது,

எல்.டி.எஃப்-க்குள் பிரச்சனை

திருச்சூரில் பாஜக வெற்றி பெற்றது மற்றும் திருவனந்தபுரத்தில் வலுவான போட்டியை உருவாக்கியது.இந்த  இரண்டு இடங்களிலும் சிபிஐ போட்டியிட்டது, இது எல்.டி.எஃப் -ல் சிபிஐ(எம்) இன் இளைய கூட்டாளியாக உள்ளது. இரண்டு இடங்களிலும், எல்.டி.எஃப் வேட்பாளர்கள் அனைத்து இடதுசாரி வாக்குகளையும் பெறவில்லை என்று நம்பப்படுகிறது. திருச்சூரில் சுரேஷ் கோபியின் வெற்றிக்கு உதவுவது குறித்து கேரள பாஜக பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஈபி ஜெயராஜன் பேச்சுவார்த்தை நடத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிபிஐ(எம்) தலைவர்களுக்கு எதிரான ஏஜென்சிகள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள எஸ்என்சி லாவலின் வழக்கு ஆகியவை வெற்றிக்கு தடையாக இருந்துள்ளது.

காங்கிரஸ் மற்றும் ஐயுஎம்எல் இடையேயான வலுவான பிணைப்பு

தேர்தலுக்கு முன்னதாக, சிபிஐ(எம்) கேரளாவில் காங்கிரஸின் முக்கிய கூட்டாளியான ஐயுஎம்எல் (IUML) க்கு ஃபீலர்களை அனுப்பியது. கடந்த சில ஆண்டுகளாக, ஐயுஎம்எல் உடன் நெருக்கமாக தொடர்புடைய சமஸ்தா என்ற செல்வாக்கு மிக்க மதகுரு அமைப்போடு சிபிஐ(எம்) நெருக்கம் கட்டியது. இதன் விளைவாக, பொன்னானியில், சமஸ்தா மதகுருமார்களின் ஒரு பிரிவினரின் ஆதரவுடன் சிபிஐ(எம்) தனது வேட்பாளரை நிறுத்தியது. கேரளாவில் காங்கிரஸ் அமோக வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், சமஸ்தாவில் உள்ள இடதுசாரிகளுக்கு ஆதரவான கூறுகளை ஐயுஎம்எல் சரிபார்க்க முடியும். இது தவிர, மறைமுக இடதுசாரி ஆதரவுடன் திருச்சூரில் பாஜக வெற்றி பெற்றது என்ற எண்ணமும் முஸ்லிம்கள் மத்தியில் சிபிஐ(எம்) மீதான அவதூறு கருத்து வெளிப்பட்டுள்ளது. இதுவே காங்கிரஸுக்கு ஐயூஎம்எல் உடனான உறவுகளை உறுதிப்படுத்த உதவும் மற்றொரு காரணியாக உள்ளது.

கேரளாவில் முதல் வெற்றியை பதிவு செய்த பா.ஜ.க

கேரளாவில் 2024 லோக்சபா தேர்தலில் திருச்சூரில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுரேஷ்கோபி வெற்றி பெற்றிருப்பது மிக முக்கியமான விஷயம். பாஜக தேர்தல் பிரச்சாரம் "மோடியின் உத்தரவாதம்" மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. மிகவும் தேவையான இந்த வெற்றி கேரளாவில் பாஜகவின் நம்பிக்கையை அதிகரிக்கும், மேலும் கட்சியின் எதிர்கால தேர்தல் திட்டங்களில் நீண்ட தூரம் செல்லும். அதேபோல் இந்த வெற்றியின் மூலம் திருவனந்தபுரம், அட்டிங்கல் மற்றும் ஆலப்புழா போன்ற பல தொகுதிகளிலும் கட்சி தனது வாக்கு சதவீதத்தை அதிகரித்துள்ளது. ஆனால், யூடிஎஃப் க்கு ஆதரவாகச் சென்ற எல்டிஎஃப் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் அதிருப்தியிலிருந்து பெரிய ஆதாயத்தைப் பெற முடியவில்லை. 2019 ஆம் ஆண்டிலும், சபரிமலை கோவிலுக்குள் இளம் பெண்களை அனுமதிக்கும் எல்.டி.எஃப் அரசாங்கத்திற்கு எதிராக பாஜக தலைமையில் போராட்டங்கள் நடந்தாலும், தேர்தல் ஆதாயம் காங்கிரஸ் கட்சிக்கு தான் கிடைத்தது.

திருச்சூர் தோல்வியால் காங்கிரசுக்குள் கிளர்ச்சி

2019ல் திருச்சூரில் வெற்றி பெற்ற காங்கிரஸ், இந்த ஆண்டு பாஜகவிடம் தோல்வியடைந்தது. திருச்சூர் தொகுதியை தக்கவைக்க கட்சியின் மூத்த தலைவரும் வடகரை நாடாளுமன்ற உறுப்பினருமான கே.முரளீதரனை நியமித்தது. முரளீதரன் ஏற்கனவே கட்சித் தலைமைக்கு எதிராகப் பேசியிருக்கிறார், பிரச்சாரத்தின் போது கட்சி தொகுதியை புறக்கணித்துவிட்டதாகவும், தன்னை பல ஆடாக ஆக்கிவிட்டதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Kerala Parliament Election Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment