scorecardresearch

நாகார்ஜூனாவின் பண்ணை வீட்டில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு… காவல்துறை விசாரணை

அருகில் இருந்த ஆதார் அட்டையை கைப்பற்றிய காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Decomposed body found in Nagarjuna's farmhouse
Decomposed body found in Nagarjuna's farmhouse

Decomposed body found in Nagarjuna’s farmhouse : பிரபலமான தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகார்ஜூனாவிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அழுகிய நிலையில் ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் நகரத்துக்கு வெளியே அமைந்திருக்கும் அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அடையாளம் தெரியாத ஒருவரின் பிணம் புதன்கிழமை (18/09/2019) அன்று கண்டுபிடிக்கப்பட்டது.

நாகார்ஜூனாவிற்கு சொந்தமான பண்ணை மற்றும் வயல்வெளி, ஷாத்நகரில் அமைந்திருக்கும் பாப்பிரெட்டிகுடா கிராமத்தில் அமைந்துள்ளது. அவருடைய வயலில் எந்த விதமான பயிர் விவசாயம் செய்யலாம் என்று அறிந்து கொள்ள சிலரை புதன்கிழமை அனுப்பியுள்ளார் நாகார்ஜூனா.

அங்கு சென்ற அவர்கள், பண்ணை வீட்டில் படுத்திருந்த நிலையில் அந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவர்கள் கேஷம்பேட்டையில் இருக்கும் காவல்நிலையத்திற்கு தகவல்கள் அளித்தனர். அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர் குறித்த தகவல்களை காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர்.

மேலும் படிக்க : ’வாழ்க்கையும் ஒரு ஃபுட் பால் மேட்ச் தான்’ – விஜய்யின் தெறி பேச்சு!

அவரின் சடலத்தின் அருகே இருந்த ஆதார் அடையாள அட்டையை வைத்து அவரைப் பற்றிய தகவல்களை அறிந்து வருகின்றனர் காவல்துறையினர். அவர் பெயர் சக்காலி பாண்டு என்றும் அவருடைய வயது 30 என்றும் தெரிய வந்துள்ளது. அவருடைய சகோதரர் மரணமடைந்த துக்கத்தை தாங்கிக் கொள்ள இயலாத அவர், தற்கொலை செய்து கொள்வதாக பெற்றோர்களுக்கு கடிதம் எழுதியிருந்ததாக அவருடைய பெற்றோர்கள் அறிவித்துள்ளனர்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Decomposed body found in nagarjunas farmhouse