scorecardresearch

ஆபரேஷன் லோட்டஸுக்கு அறுவை சிகிச்சை செய்த அசோக் கெலாட் – சிவசேனா

ஆட்சியை கவிழ்க்கலாம் என்று பாஜக தீட்டிய திட்டத்தை முறியடித்து பாஜகவிற்கு பாடம் புகட்டியுள்ளார் ராஜஸ்தான் முதல்வர் என்றும் பாராட்டு

defeat of political perversity in Rajasthan says Shiv Sena

defeat of political perversity in Rajasthan says Shiv Sena : ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவியதால் ஆட்சி கவிழும் சூழல் உருவானது. ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அசோக் கெலாட்டிற்கு கூறப்பட்டது. ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டம் தீட்டி வருதாக காங்கிரஸ் தரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்தது.

இந்நிலையில் சச்சின் பைலட் கடந்த திங்கள் கிழமையன்று ராகுல் காந்தி மற்றும் ப்ரியங்கா காந்தியை சந்தித்து பிரச்சனைகள் குறித்து விவரித்தார். மேலும் அசோக் கெலாட்டுடன் இணைந்து பணியாற்றவும் ஒப்புக் கொண்டார். ஒரு மாதம் பெரும் போராட்டத்திற்கு பிறக்கு காங்கிரஸ் ஆட்சி தொடரும் என்பது உறுதி செய்யப்பட்டது.

மற்ற அரசுகளை கவிழ்த்தது போன்று இங்கும் ஆட்சியை கவிழ்க்கலாம் என்று பாஜக நினைத்தது. ஆனால் கெலாட் அனைத்து முயற்சிகளையும் முறியடித்துள்ளார் என்று சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான சாம்னாவில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் ஆபரேஷன் லோட்டஸை ஆப்பரேசன் செய்துள்ளார் அசோக் என்று கூறியிருக்கும் அந்த செய்தி குறிப்பு, அரசியல் நேர்மையின்மை மற்றும் வக்கிரம் தோல்வியை சந்தித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நாட்டில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை சரி செய்யாமல் பாஜகவினர் ஆட்சி செய்யாத இடங்களில் எல்லாம் ஆட்சியை கலைக்கும் வேலையில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது என்று குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Defeat of political perversity in rajasthan says shiv sena