சமீபத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர், இன்ஸ்டாகிராம் ரீல் தயாரிப்பதில் தனது மனைவி அடிமையாகிவிட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆங்கிலத்தில் படிக்க: Dejected by wife’s Instagram ‘addiction’, Karnataka man dies by suicide
உயிரிழந்தவர் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள பிஜி பாளையத்தைச் சேர்ந்த குமார் (33) என அடையாளம் காணப்பட்டுள்ளார். புகாரில், குமாரின் குடும்பத்தினர், அவரது மனைவி பதிவேற்றிய சில இன்ஸ்டாகிராம் ரீல்கள் குறித்து அவரது நண்பர்கள் அவரை கேலி செய்ததால் குமார் மனச்சோர்வடைந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், குமார் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூபாவை திருமணம் செய்து கொண்டார், தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். குடும்பம் நடத்துவதற்காக சிறு சிறு வேலைகள் செய்து வந்த குமாருக்கு, குடிப்பழக்கம் இருந்ததால் தம்பதி இடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்தது.
சமீபத்தில், அவரது மனைவி அவரை விட்டுவிட்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் குமாரின் மனைவி ஒரு இன்ஸ்டாகிராம் ரீலை பதிவேற்றினார், அதில் குமாரின் மனைவி, ஒரு ஆண் இன்னொரு பெண் ஆகியோர் பிரபல கன்னட பாடலுக்கு நடனமாடினர்.
புதன்கிழமை, குமார், ரூபாவை தொலைபேசியில் அழைத்து, ரீல் குறித்து அவரிடம் விசாரித்ததாகவும், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. குமார் புதன்கிழமை மற்றும் வியாழன் இடைப்பட்ட இரவில் இறந்தார்.
குமாரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“