டெல்லி தேர்தல்: கெஜ்ரிவால் ‘ஹாட்ரிக்’ வெற்றி; 70-க்கு 62 இடங்களை கைப்பற்றியது ஆம் ஆத்மி

Delhi Elections Results 2020 Updates: டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.

By: Feb 11, 2020, 7:48:28 PM

Delhi Assembly Election 2020 Results Latest:  டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் வெற்றி பெற்று டெல்லியில் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை.

தலைநகர் டெல்லியில் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சி, தனது கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சி செயல்திறனை இந்த தேர்தலில் முன்வைத்தது.பாஜக  மோடியின் பெயர்  முன்வைத்தது.  இன்றைய முடிவு சிஏஏ, தேசிய மக்கள் பதிவேடு போன்ற மத்திய அரசின் கொள்கைகாண பதிலா? இல்லை கெஜ்ரிவால் அரசின் செயல் செயல்திறனுக்கான பதிலா?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும்  அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கும் என்று கணித்துள்ளன.

2015 சட்டமன்றத் தேர்தலில் 70 இடங்களைக் கொண்ட டெல்லி  சட்டபேரவையில் 67 இடங்களை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, இந்த முறை குறைந்தது 50 இடங்களை கைப்பற்றும் என்கிறது கருத்துக்கணிப்பு.

கடந்த தேர்தலை விட பாஜக தனது செல்வாக்கை மீட்டெடுத்தாலும், பெரும்பான்மைக்கு சாத்தியமில்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் டெல்லியில்  காங்கிஸின் மறுமலர்ச்சி இந்த முறையும் சாத்தியமில்லை என்றே கணித்துள்ளன.

Live Blog
Delhi 2020 election result updates in tamil : டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
18:44 (IST)11 Feb 2020
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ஆம் ஆத்மி கட்சிக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளர். டெல்லி மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு வாழ்த்துக்கள் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

18:19 (IST)11 Feb 2020
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 62 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்துவருகிறது. அதனால், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

17:49 (IST)11 Feb 2020
கிரேட்டர் கைலாஷ், ஜானக்புரி, மோதி நகரில் ஆம் ஆத்மி வெற்றி

டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் கிரேட்டர் கைலாஷ், ஜானக்புரி, மோதி நகர் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி.

17:45 (IST)11 Feb 2020
2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது பாஜக வெற்றி சதவீதம் அதிகரித்துள்ளது: பாஜக தலைவர் மனோஜ் திவாரி

டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்களால் சிறப்பாக செயல்படமுடியவில்லை. நாங்கள் இந்த தோல்வியை மதிப்பீடு செய்வோம். சில நேரங்களில் முடிவுகள் எங்கள் எதிர்பார்ப்புகளின்படி இல்லாதபோது நாங்கள் சோர்வடைகிறோம். ஆனால், எங்களுடைய தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம் என்று சொல்ல விரும்புகிறேன்... 2015 தேர்தல் உடன் ஒப்பிடும்போது எங்கள் வெற்றி சதவீதம் அதிகரித்துள்ளது” என்று கூறினார்.

17:30 (IST)11 Feb 2020
டெல்லி ரோஹினி தொகுதியில் பாஜகவின் விஜேந்தர் குப்தா வெற்றி

டெல்லியில் உள்ள ரோஹினி தொகுதியில் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த விஜேந்தர் குப்தா அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜேஷ் நாமா பன்சிவாலாவைவிட 12,000 வாக்குகளுக்கு மேல் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார்.

17:26 (IST)11 Feb 2020
ஆம் ஆத்மி 46 இடங்களில் முன்னிலை; 17 தொகுதிகளில் வெற்றி அறிவிப்பு

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 46 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 17 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

17:24 (IST)11 Feb 2020
ஆம் ஆத்மியின் இன்றைய வெற்றி நாட்டிற்கு ஒரு செய்தி - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில், கட்சி தொண்டர்கள் இடையே பேசிய அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், “இது நாட்டிற்கு ஒரு நல்ல செய்தி. இந்த அரசியல் இந்தியாவின் முன்னேற்றத்தை உறுதி செய்யும். இது நாடு முழுவதற்குமான வெற்றியாகும்” என்று வாக்காளர்களுக்கு நன்றி கூறினார்.

16:58 (IST)11 Feb 2020
ஆம் ஆத்மி 62 இடங்களில் முன்னிலை; 4 தொகுதிகளில் வெற்றி அறிவிப்பு

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 62 இடங்களில் முன்னிலை வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம் அத்மி கட்சியின் அதிஷி கல்கஜி தொகுதியிலும், மனீஷ் சிசோடியா பட்பர்கஞ்ச் தொகுதியிலும், ராகவ் சதா ரஜீந்தர் தொகுதியிலும், ஜர்னைல் சிங் திலக் நகர் தொகுதியிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

16:53 (IST)11 Feb 2020
ஆம் ஆத்மி கட்சியின் ஜர்னைல் சிங் டெல்லி திலக் நகர் தொகுதியில் வெற்றி

ஆம் ஆத்மி கட்சியில் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள ஜர்னைல் சிங் டெல்லியில் உள்ள திலக் நகரில் பாஜக வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

16:51 (IST)11 Feb 2020
அரவிந்த் கெஜ்ரிவாலின் முன் மாதிரியான ஆட்சி வென்றது: ராகவ் சதா

டெல்லியில் உள்ள ராஜீந்தர் நகர் தொகுதியில் 59,135 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா கூறுகையில், “டெல்லியின் மகன் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பயங்கரவாதி அல்ல, அவர் ஒரு உண்மையான தேசபக்தர் என்பதை டெல்லி மக்கள் நிரூபித்துள்ளனர். அவர் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக உழைக்கிறார். அவர் செய்து வரும் சேவைதான் தேசபக்தியைக் குறிக்கிறது. பாஜக செய்துகொண்டிருப்பது தேசபக்தி அல்ல” என்று கூறினார்.

16:47 (IST)11 Feb 2020
பட்பர்கஞ்ச் தொகுதியில் இருந்து மீண்டும் எம்.எல்.ஏ ஆனதில் மகிழ்ச்சி: மனீஷ் சிசோடியா

டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா: “பட்பர்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியில் இருந்து மீண்டும் எம்.எல்.ஏ ஆனதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பாஜக வெறுப்பு அரசியலைச் செய்ய முயன்றது. ஆனால், டெல்லி மக்கள் மக்களுக்கு சேவை செய்யும் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

16:40 (IST)11 Feb 2020
டெல்லி பட்பர்கஞ்சி தொகுதியில் மனிஷ் சிசோடியா வெற்றி

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பட்பர்கஞ்சி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

14:52 (IST)11 Feb 2020
மனிஷ் சிசோடியா 2000 வாக்குகள் முன்னிலை

டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா பட்பர்கஞ்ச் தொகுதியில் 2000 வாக்குகள் முன்னிலை. 2015 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சிசோடியா 28791 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

12:52 (IST)11 Feb 2020
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையிடத்தில் முன்னிலை இருக்கும்  அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.    வகுப்புவாத அரசியலை  மக்கள் நிராகரிப்பர்  என்பதற்கான நிரூபணம் இந்த தேர்தல் முடிவு.  கூட்டாட்சி உரிமைகள் மற்றும் பிராந்திய வளர்ச்சியும்  இந்திய நாட்டை பலப்படுத்தும் என்றுதெரிவித்துள்ளார்.

12:37 (IST)11 Feb 2020
சிஏஏ போரட்டமும் - டெல்லி சட்டமன்றத் தேர்தலும் (4/4)

முஸ்தபாபாத்: குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதராக போராட்டம் கண்ட மற்றொரு முக்கியாமான தொகுதி முஸ்தபாபாத் ஆகும். இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜகதீஷ் பிரதான் முன்னிலை வகிக்கிறார். வடகிழக்கு டெல்லியில் அமைந்துள்ள முஸ்தபாபாத்தில் 70.55 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டில் இந்த தொகுதியை பாஜக கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

12:07 (IST)11 Feb 2020
சிஏஏ போரட்டமும் - டெல்லி சட்டமன்றத் தேர்தலும் (3/3)

மத்தியா மஹால் : குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிரான போரட்டத்தைக்  கண்ட மத்தியா மஹாலில், ஆம் ஆத்மி கட்சியின் ஷோயாப் இக்பால் முன்னிலையில் உள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் அசிம் அகமது கான்  காங்கிரஸ் வேட்பாளர்  சோயிப் இக்பாலை 26,096 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  இந்த தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் ஷோயிப் இக்பால், பாஜகவின் ரவீந்தர் குப்தா இடையே  முக்கிய போட்டி உள்ளது. 

11:58 (IST)11 Feb 2020
சிஏஏ போரட்டமும் - டெல்லி சட்டமன்றத் தேர்தலும் (2/2)

குடியுரிமை திருத்தம் சட்டம்  எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது வன்முறையைக் கண்ட  மற்றொரு சட்டமன்றத் தொகுதி சீலாம்பூர் ஆகும்.  இந்த தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் அப்துல் ரஹ்மான் தற்போது  முன்னிலை வகிக்கிறார்.

சீலம்பூரில் 71.22 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மொஹமட் இஷ்ராக் 2015 ஆம் ஆண்டில் பாஜகவின் சஞ்சய் ஜெயினை 27,887 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த்தார்.   2003, 2008 மற்றும் 2013 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் சீலாம்பூர் தொகுதி காங்கிரஸ் கட்சியிடம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

11:51 (IST)11 Feb 2020
சிஏஏ போரட்டமும் - டெல்லி சட்டமன்றத் தேர்தலும்

குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிராக கடந்த 50 நாட்களுக்கு மேலாக ஷாஹீன் பாக் பகுதியில்  பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  ஷாஹீன் பாக் அமைந்திருக்கும்  ஒக்லா சட்டமன்றத் தொகுதியில் 58.8 சதவீத வாக்குகள் பதிவாகின.  இந்த ஒக்லா தொகுதியில் ஆம் ஆத்மி  கட்சி வேட்பாளர் அமானத்துல்லா கான்  முன்னிலை வகிக்கிறார் .

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி  கட்சி வேட்பாளர் அமானத்துல்லா கான் இதே பிரகாம் சிங்கை 64532  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

11:28 (IST)11 Feb 2020
அரவிந்த் கெஜ்ரிவாலின் குட்டி ரசிகர்

ஒரு குட்டி ரசிகர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போலவே உடையணிந்து, ஆம் ஆத்மி அலுவலகத்திற்கு  வருகை தந்துள்ளார்  .

11:25 (IST)11 Feb 2020
ஆம் ஆத்மி வெற்றி அனைவருக்கும் தெரிந்ததே - காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சி திரும்பும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே என்று தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா மற்றும் அதன் வகுப்புவாத தோற்றத்திற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.  

10:16 (IST)11 Feb 2020
கபில் மிஸ்ரா, மனிஷ் சிசோடியா முன்னிலை

பாரதிய ஜனதா கட்சியின் கபில் மிஸ்ரா மாடல் டவுனில் இருந்து 98 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கின்றார்; ஆம் ஆத்மி கட்சியின் மனிஷ் சிசோடியா பட்பர்கஞ்சில் தொகுதியில் 112 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கின்றார்.  

10:09 (IST)11 Feb 2020
விகாஸ்பூரி எம்எல்ஏ தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்

10:03 (IST)11 Feb 2020
Delhi Election Results Live : ஆம் ஆத்மி கட்சி முன்னிலை

தேர்தல்  ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் ஆம் ஆத்மி கட்சி 27 இடங்களிலும், பாஜக 16 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.   

09:28 (IST)11 Feb 2020
டெல்லி தேர்தல் 2020 Live: புது டெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலை வகிக்கிறார்

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புது டெல்லி சட்டமன்றத் தொகுதியில் முன்னிலை வகுக்கிறார். கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்தே புது டெல்லி தொகுதியில் வெற்றி பெறுபவரே டெல்லி முதலமைச்சர் பதவியில் அமருகிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.

புது டெல்லி வெற்றி வேட்பாளர்கள்:  

சீலா தீக்‌சித் -  2008 

அரவிந்த் கெஜ்ரிவால் - 2013,2015 

09:20 (IST)11 Feb 2020
டெல்லி தேர்தல் 2020: பல்லிமாரன் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை


காங்கிரஸ்பல்லிமரன் சட்டமன்றத் தொகுதியில் முன்னிலை வகுக்கின்றது. 40% முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட தொகுதிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.  

09:19 (IST)11 Feb 2020
இஸ்லாம் வாக்காளர்கள் காங்கிரசுக்கு திரும்புவார்களா?

டெல்லியில் 40% முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த ஐந்து தொகுதிகளில் முஸ்தபாபாத் தொகுதியைத் தவிர நான்கு தொகுதிகளில் 2015 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வென்றது .  இந்த தேர்தலில் காங்கிரஸ் இந்த தொகுதிகளில் கணிசமான வெற்றியை பெறுமா? காங்கிரஸின் பாரம்பரிய வாக்குகளை  இந்த முறையும் கைப்பற்றுமா? என்ற கேள்வி இன்று மிகவும் எதிர்பார்கப் படுகிறது.    

08:45 (IST)11 Feb 2020
டெல்லி சட்டமன்றத் தேர்தல்: காலை 8.30 மணி நிலவரம்:

காலை 8.30 மணி நேர நிலவரப்படி நரேலா, விகாஸ்பூரி, ஹரி நகர், சாந்தினி சவுக்   ஆகிய இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது. நஜாப்கர், பிஜ்வாசன், கரவால் நகர், துவாரகா, கோண்ட்லி ஆகிய இடங்களில் பாஜக முன்னணியில் உள்ளது.

08:43 (IST)11 Feb 2020
இன்றைய தேர்தல் முடிவுகளின் தாக்கம் என்ன ?

ஆம் ஆத்மி : அரவிந்த் கெஜ்ரிவால் அரசியலில் நுழைந்து வெறும் எட்டு ஆண்டுகள் தான் ஆகின்றன. அதற்குள் டெல்லி அரசியலில் ஒரு புதிய பரிணாமத்தை கொண்டு வந்துவிட்டார். இன்று அவரின் வெற்றி உறுதி செய்யப்பட்டால்  தேசிய அரசியலை கால்பதிக்க முடியும். தோல்வியுற்றால் ஆம் ஆத்மி கட்சியின் இருத்தலே கேள்விக்குறியாகிவிடும்.      

பாஜக:   மாநிலத் தேர்தல்களில்( ராஜஸ்தான், மத்திய பிரேதேசம் , மகாராஷ்டிரா- பெரிதும் சோபிக்கவில்லை ) மீண்டும் கால் பதிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த தேர்தலில் வெற்றி அடைவதன் மூலம் அடுத்து வரும் பீகார், தமிழ்நாடு போன்ற சட்டமன்றத் தேர்தல்களில் உறுதியாய் போராடாலாம்.  நிதிஷ் குமார் மிகவும் வழிந்துக் கொடுக்க போக வேண்டிய அவசியத்தைக் குறைக்கலாம். தமிழ்நாட்டில் அதிமுக வுடன் கூட்டணி தொடர்ந்தால் (ரஜினி - அரசியல் சூழ்நிலை மாறலாம் )   அதிக சட்டமன்றத் தொகுதியை கேட்டு வாங்கலாம்.      

08:26 (IST)11 Feb 2020
இன்று வெற்றி பெறுவோம் - மணீஷ் சிசோடியா

கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் மக்களுக்காக உழைத்ததால் இன்று வெற்றி பெறுவோம்  என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார் 

08:22 (IST)11 Feb 2020
முதற்கட்ட வாக்கு எண்ணிகையில் ஆம் ஆத்மி முன்னிலை:

ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகுக்கிறது. சற்று முன்பு வரை ஆம் ஆத்மி கட்சி 33 இடங்களிலும், பாஜக  10 இடங்களிலும்  முன்னிலை வகிக்கிறது. 

08:18 (IST)11 Feb 2020
வாக்கு எண்ணும் பணி  தொடங்கியது

டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி  தொடங்கியது.  முதலில் அஞ்சல் வாக்கு எண்ணப்படும் .

தனிப்பட்ட இடங்களின் வாக்குகள் மற்றும் முடிவுகளின் எண்ணிக்கை இந்திய தேர்தல் ஆணையத்தின் பின்வரும் வலைத்தளங்களில் நேரடியாக அறிவிக்கப்படும் - eciresults.nic.in, eci.gov.in, results.eci.gov.in.

08:08 (IST)11 Feb 2020
கடந்த காலங்களில் டெல்லி எப்படி வாக்களித்துள்ளது?

08:01 (IST)11 Feb 2020
சற்று நேரத்தில் வாக்கு எண்ணும் பணி துவக்கம்

டெல்லி சட்டமன்றத் தேர்தலின்  வாக்கு  எண்ணும் பணி இன்னும் சற்று நேரத்தில் துவங்க இருக்கிறது.

                                                                                    டெல்லி பாஜக தலைவர்  விஜய் கோயல் கோயிலில் தரிசனம் செய்து வருகின்றார்.  

                                            டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தனது வீட்டில் பிரார்த்தனை செய்யும் காட்சி.

Delhi 2020 election result updates in tamil : 2015 சட்டமன்றத்  தேர்தலில், ஆம் ஆத்மி ஆட்சி  54 சதவீத வாக்குகளுடன் 67  இடங்களை கைப்பற்றியது. அதே தேர்தலில் பாஜகவின் வாக்கு 32 சதவீதமாக இருந்தாலும், 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனது செல்வாக்கை 56 சதவீதமாக உயர்த்தியது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 2015 சட்டமன்றத் தேர்தலில் 10 சதவீத வாக்குகளை பெற்றன.

Web Title:Delhi 2020 election result live updates in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
JUST NOW
X