டெல்லி எம்.எல்.ஏ அல்கா லம்பாவை, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுமாறு அக்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எம்.எல்.ஏ அல்கா லம்பா :
டெல்லியில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடா் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நடைப்பெற்றது. இந்த கூட்டத் தொடரில் சீக்கியா்கள் படுகொலை தொடா்பான தீா்மானத்தை ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினா் ஜொ்னைல் சிங் முன் மொழிந்ததாக சொல்லபடுகிறது.
அதனைத் தொடர்ந்து, சீக்கிய கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் அதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதமும் எழுத வேண்டும். 1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது, நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக வெடித்த கலவரத்தை நியாயப்படுத்திய முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா பட்டத்தை திரும்ப பெறவேண்டும் என பல கோரிக்கைகளை நிறைவேற்ற ஆம் ஆத்மி தீர்மானம் நிறைவேற்றியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதனால் டெல்லி அரசியலில் பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது. ஆனால் ராஜீவ் காந்திக்கு எதிரான எந்த ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை எனக்கூறி ஆம் ஆத்மி மறுப்பு தெரிவித்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/perumal-murugan.jpg)
மேலும், பேரவையில் இடம்பெற்றிருந்த உறுப்பினா் ஒருவா் தனக்கு வங்கப்பட்ட தீா்மான நகலில் அவரது கோாிக்கையை கையில் எழுதியிருந்தாா். அது தான் தற்போது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளதாகவும் ஆம் ஆத்மி இதுக் குறித்து விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையில் ராஜீவ் காந்திக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அல்கா லம்பாவை, அக்கட்சியினர் பதவி விலகுமாறு தொடர்ந்து நெருக்கடி தருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப் பெற வேண்டும் என ஆம் ஆத்மி வலியுறுத்திய தீர்மானத்திற்கு எம்.எல்.ஏ அல்கா லம்பா ஆதரவு தர மறுத்தாராம். இதனால் அல்கா லம்பாவை பதவி விலக தொடர்ந்து அக்கட்சியினர் நெருக்கடி தருவதாக தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த தகவலை அல்கா லம்பா உறுதி செய்துள்ளார். இதுக்குறித்து அவர் பிரபல செய்தி ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “ ராஜினாமா செய்யுமாறு கட்சி என்னை கேட்டுக்கொண்டுள்ளது. நான் ராஜினாமா செய்யத் தயாராகவே இருக்கிறேன். ராஜீவ் காந்தி நாட்டுக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளார். எனவே அவருக்கு எதிரான தீர்மானத்தை நான் ஆதரிக்கவில்லை. எனவே, கட்சியின் விருப்பத்துக்கு எதிராக நின்றதால், என்னை பதவி விலகுமாறு கேட்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.