டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்.8 வாக்குப்பதிவு, பிப்.11 வாக்கு எண்ணிக்கை - தேர்தல் ஆணையம்

Delhi Election 2020 Dates: இந்த முறை கெஜிரிவாலை மீண்டும் முதல்வராக்க ஆம் ஆத்மி களம் இறங்கி தனது பிரசாரத்தை தொடங்கிவிட்டது.

Delhi Election 2020 Dates: இந்த முறை கெஜிரிவாலை மீண்டும் முதல்வராக்க ஆம் ஆத்மி களம் இறங்கி தனது பிரசாரத்தை தொடங்கிவிட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
delhi election 2020, delhi election dates, டெல்லி தேர்தல், டெல்லி தேர்தல் தேதி, டெல்லி சட்டமன்றத் தேர்தல்

delhi election 2020, delhi election dates, டெல்லி தேர்தல், டெல்லி தேர்தல் தேதி, டெல்லி சட்டமன்றத் தேர்தல்

Delhi Assembly Polls 2020 Date: டெல்லி சட்டமன்றத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது. டெல்லியை ஆளும் ஆம் ஆத்மிக்கும், மத்தியில் ஆளும் பாஜக.வுக்கும் இடையே பலத்த போட்டியை இங்கு எதிர்பார்க்கலாம்.

Advertisment

தர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா?

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்தின் ஆயுட்காலம் பிப்ரவரி 22-ம் தேதியுடன் முடிகிறது. எனவே அதற்குள்ளாக அங்கு தேர்தலை அறிவித்து, புதிய அரசை தேர்வு செய்வதற்கான வழிவகைகளை செய்யவேண்டிய கடமை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது.

Advertisment
Advertisements

2015-ம் ஆண்டு இங்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி 67 இடங்களைப் பெற்று அபாரமாக வென்றது. பாஜக 3 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை.

இந்த முறை கெஜிரிவாலை மீண்டும் முதல்வராக்க ஆம் ஆத்மி களம் இறங்கி தனது பிரசாரத்தை தொடங்கிவிட்டது. பாஜக முதல்வர் வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை. பிரதமர் மோடியை முன்னிறுத்தியே பாஜக பிரசாரம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில் இன்று (6-ம் தேதி) மாலை 3.30 மணிக்கு டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்திக்கிறார்கள். அப்போது டெல்லி சட்டமன்றத் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 70 தொகுதிகளை கொண்ட டெல்லி பேரவைக்கு பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறுகையில், "70 தொகுதிகளை கொண்ட டெல்லி பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக நான்கு கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டது. ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி 1.46 கோடி வாக்காளர்கள் உள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசிக்கப்பட்டது. ஜனவரி 14-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

Delhi Election Commission

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: