Sukhbir Siwach , Raakhi Jagga , Harikishan Sharma
‘Delhi Chalo’ against farm laws: Farmers cross barricades, water jets; Tomar, Rajnath offer talks : ஹரியானா மற்றும் பஞ்சாபில் இருந்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் வழியாக டெல்லி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர் விவசாயிகள். மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.
அவர்கள் மீது தடியடி தாக்குதல் மற்றும் நீர் பாய்ச்சி அடித்து அப்புறப்படுத்தும் நிகழ்வுகள் நடந்த பின்னர் தடையை மீறி போராட்டக்காரர்கள் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தை முனைப்புடன் நடத்தி டெல்லி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஹரியானாவில் இருந்து வந்த விவசாயிகள் பலரும் பானிபட் டோல் ப்ளாசாவில், டெல்லியின் எல்லையில் இருந்து 65 கி.மீ க்கு அப்பால், டெல்லி - அம்பலா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து முன்னேறி வருகின்றனர். அதே தேசிய நெடுஞ்சாலையில், டெல்லி எல்லையில் இருந்து 100 கி.மீக்கு அப்பால் கர்னல் பகுதியில் இருந்து பஞ்சாப் விவசாயிகள் முன்னேறி வருகின்றனர்.
மூன்றாவது சிறிய குழுவினர் டெல்லி சிர்ஸா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து டெல்லி எல்லைக்கு 115 கி.மீக்கு அப்பால் இருக்கும் ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஹான்சியை வந்ததடைந்தனர். டெல்லி - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தை தலைமை தாங்கி வந்த ஸவ்ராஜ் இந்தியா கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ், கூர்கோனில் உள்ள பிலாஸ்பூர் கிராமத்தில்கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு பகுதியில் இருந்து டெல்லியை நோக்கி படையெடுக்கும் விவசாயிகள் தங்களை ஒரு நீண்ட கால போராட்டத்திற்கு தயார் நிலையில் வைத்துள்ளனர். அவர்களுடைய ட்ராக்டர்களில் உணவுப் பொருட்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் உள்ளன. சிலர் ட்ரக்குகள், பஸ்கள், மற்றும் ஜீப்களிலும், பலர் நடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதியம் வேளாண்துறை அமைச்சர் தோமர் போராட்டக்காரர்களுக்கு பேச்சுவார்த்தைக்கு தயார் என்ற சமிக்ஞையை விடுத்தார். அரசு இந்த விவகாரத்தில் இருக்கும் மாறுபட்ட கருத்துகளை கலைய விரும்புகிறது என்று அவர் கூறினார்.
“நான் நம்முடைய விவசாய சகோதரர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன். நம்முடைய பேச்சுவார்த்தை முடிவுகள் சாதகமாக அமையும்” என்றும் அவர் கூறியுள்ளார். மாலையில் ராஜ்நாத் சிங் தானும் ஒரு விவசாயி மகன் தான். மேலும் அரசு விவசாயிகளை ஏமாற்றிவிடாது என்று கூறினார்.
எச்.டி. லீடர்ஷிப் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், “உங்களின் போராட்டங்களை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றேன். நான் பாதுகாப்புத்துறை அமைச்சர். ஆனால் ஒரு விவசாயியின் மகன். ஒரு விவசாயியாக நான் அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்கின்றேன். நான் அவர்களுடன் பேச தயாராக இருக்கின்றேன். நம்மால் விவசாயிகளை ஏமாற்ற முடியாது என்று அவர் கூறினார்.
தோமர் மற்றும் ராஜ்நாத் இருவரும் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மையையே தரும் என்பதை புரிய வைக்க முயலுகின்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி அமைப்பை முடிவுக்கு வரும் என்ற அச்சம் தரும் விசயங்கள் ஏதும் வேளாண் சட்டத்தில் இல்லை என்பதை அவர்களுக்கு புரிய வைக்க முயலுகின்றனர்.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஹரியானா காவல்துறையால் பல்வேறு இடங்களில் இரும்பு மற்றும் கான்கிரீட்டால் ஆன பல் அடுக்கு தடைகள், . மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்தல், எம்.எஸ்.பி. தொடரும் என்பதற்கான சட்டப்பூர்வ உத்தரவு ஆகியவற்றை கோரி டெல்லியை நோக்கி செல்லும் அவர்கள் போராட்டத்திற்கு தடையாகவே இல்லை
ஹரியானா காவல்துறை கண்ணீர் புகை, தண்ணீர் கேனான் மற்றும் தடியடி ஆகியவற்றை பயன்படுத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயன்றனர். ஆனாலும் அவர்களால் போராட்டக்காரர்களை ஒன்றும் செய்ய இயலவில்லை. காவல்துறை 90 விவசாய தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 நாட்களில் கைது செய்தனர்.
ஹரியானாவின் ஃபதேஹாபாத், ஜிந்த், பானிபட், சோனிபட், ரோஹ்தக் மற்றும் அம்பலா ஆகிய மாவட்டங்களில் இதே போன்ற சூழல் காணப்பட்டது. சில இடங்களில் காவல்துறையினர் மீது கல்லெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டது. அம்பலா, ஜிந்த், ஃபதேஹாபாத், கார்னல் ஆகிய இடங்களில் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே தாக்குதல்கள் மூண்டதாக தகவல்கள் வெளியாகின. ஜிந்த் பகுதியில் தனியார் மற்றும் அரசு வாகனங்கள் சேதம் அடைந்தது. அதே போன்று அம்பலாவீல் விவசாயிகள் காவல்துறையிடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.
டெல்லியில் தோமரின் அறிக்கையோ அல்லது ஹரியானாவில் அரசாங்கத்தின் பல்வேறு முயற்சிகளோ கிளர்ந்தெழுந்த விவசாயிகளை சமாதானப்படுத்துவதில் வெற்றிபெறவில்லை. பிற்பகலில், முதலமைச்சர் மனோகர் லால் கட்டாருடனான திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு விவசாயிகள் அமைப்பு ஒப்புக்கொண்டது.
விவசாய சங்கத் தலைவர்களை முதல்வர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அவர்களும் தயார் ஆனார்கள். ஆனால் சில குண்டர்கள் காரணமாக பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் சங்கத்தினர் வரவில்லை என்று ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறியுள்ளார். சர்ச்சைகளை தவிர்க்கவும், கொரோனா தொற்றுக்கு நடுவில் கூட்டம் கூட்டமாக மக்கள் சேர்வதை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து விவசாயிகள், காவல்துறையின் தடுப்புகளை உடைத்து முன்னேறி வர கட்டார் பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங்குடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டார். ஒருவருக்கு எதிராக மற்றொருவர் ட்விட்டரில் கருத்துகளை கூறினார்கள். அம்ரிந்தர் சிங் கட்டாரிடம் விவசாயிகள் மீது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். கட்டார், போராட்டத்தை தூண்டுவதாக பஞ்சாப் முதல்வர் மீது குற்றம் சுமத்தினார்.
ஹரியானா மற்றும் பஞ்சாப்பில் உள்ள பாஜக அல்லாத தலைவர்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினார்கள். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைதியான போராட்டம் அவர்கள் அரசியல் சாசன உரிமை என்று கூறினார். ஹரியானா மற்றும் மத்திய அரசு விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு விமர்சனங்களையும் முன் வைத்தார். விவசாயிகள் பலரும் இன்று டெல்லியை அடைய இருக்கும் நிலையில், பெரும்பாலானோர் குந்த்லி எல்லை வழியாக தலைநகரை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹரியானா காவல்துறை வியாழக்கிழமை மாலை, டெல்லியை ஹரியானாவுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 10 (ஹிசார்- ரோஹ்தக்- டெல்லி) மற்றும் தேசிய நெடுஞ்சாலை 44 (அம்பலா - பானிபட்-டெல்லி) ஆகியவற்றில் பயணிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.டெல்லிக்கு செல்லும் சாலைகளில், குறிப்பாக பானிபட் மற்றும் கர்னல், கர்னல் மற்றும் குருக்ஷேத்ரா, மற்றும் குருக்ஷேத்ரா மற்றும் அம்பாலா ஆகியவற்றுக்கு இடையேயான பாதைகளில் பொது மக்களுக்கு சிரமமாக இருப்பதாக டிஜிபி மனோஜ் யாதவா எச்சரித்தார்.
எங்களின் பிரிவினர், பஞ்சாபில் இருந்து விவசாயிகள் ஹரியானாவை அடைவதை தடுக்க முயன்றோம். விவசாயிகள் காவல்துறையினரின் தடையை மட்டும் சேதப்படுத்தவில்லை. அனைத்து தடைகளையும் மீறி அவர்கள் முன்னேறி சென்றனர். காவல்துறையினர் அவர்கள் மீது தாக்குதலை நடத்தவில்லை. ஆனால் விவசாயிகள் சட்டத்தை மீறினார்கள். பல்வேறு இடங்களில் காவல்துறையினர் மீது கற்களை வீசும்படி உத்தரவும் பிறப்பித்ததாக டி.ஜி.பி. கூறினார்.
டிசம்பர் மூன்றாம் தேதி அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெறும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு விவசாயிகளை அழைத்துள்ளது. இதற்கு முன்பு நவம்பர் 13ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வியாழக்கிழமை, காரீஃப் பருவத்தில் நெல் கொள்முதல் "சுமூகமாக" நடைபெறுகிறது என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காரிஃப் பருவத்தில் நெல் கொள்முதல் சுமூகமாக நடைபெற்று வருகிறது. பஞ்சாப், ஹரியானா, உ.பி., தெலுங்கானா, உத்திரகாண்ட், தமிழகம், சண்டிகர், ஜம்மு - காஷ்மீர், கேரளா, குஜராத், ஆந்திரா, ஒடிசா மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் 307.03 லட்சம் மெட்ரிக் டன் நெல் 25/11/2020 வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 259.41 லட்சம் மெட்ரிக் டன்களாக இருந்த இந்த கொள்முதல் தற்போது 18.35% வரை அதிகரித்துள்ளது என்று மத்திய அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கொள்முதல் செய்யப்பட்ட 307.03 லட்சம் மெட்ரிக் டன்னில் பஞ்சாப்பில் மட்டும் 202.53 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மொத்த கொள்முதலில் இதன் அளவு 65.96% ஆக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ் உணவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து பெற்ற தரவுகளில் 202 எல்.எம்.டி. நெற் கொள்முதல் கரீஃப் பருவத்தில் கடைசி இரண்டு மாதங்களில் மட்டுமே பெறப்பட்டுள்ளது. (செப்டம்பர் 26 முதல் புதன்கிழமை வரை). இது இந்த சீசனில் வைக்கப்பட்ட டார்கெட் மதிப்பை காட்டிலும் 20% அதிகம். கடந்த ஆண்டில் இதே பருவ காலத்தில் பஞ்சாபில் 161 எல்.எம்.டி. நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
ஹரியானாவில் தான் நெல்கொள்முதல் மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது. செப்டம்பர் 26ம் தேதியில் இருந்து 55 லட்சம் டன்கள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 63 லட்சம் டன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.