excise policy case | டெல்லி கலால் கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிமை (மார்ச் 22,2024) 6 நாள்கள் அமலாக்க இயக்குனரக காவலில் வைக்கப்பட்டார்.
இந்த வழக்கு குறித்து பேசிய எஸ்.வி. ராஜு, கெஜ்ரிவால் தான் இந்த ஊழலின் 'கிங்பின்' என்றும், 2022ல் கோவா சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பணம் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
இதற்கிடையில், நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன், டெல்லி முதலமைச்சர், “நான் சிறையில் இருந்தாலும் சரி அல்லது வெளியில் இருந்தாலும் சரி என் வாழ்க்கை தேசத்திற்கு சேவை செய்ய அர்ப்பணிக்கப்படும்.
இந்த வழக்கில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கெஜ்ரிவால் வியாழக்கிழமை இரவு மத்திய நிறுவனத்தால் கைது செய்யப்பட்டார்.
சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக பதவியில் இருக்கும் முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கெஜ்ரிவால் விசாரணை அமைப்பின் பல சம்மன்களைத் தவிர்த்தது, மொத்தம் ஒன்பது சம்மன்களை "சட்டவிரோதமானது" என்று அழைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
6 நாள்கள் காவல்
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 28 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
இன்று, ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கை வழக்கு தொடர்பாக அவரை 6 நாள் அமலாக்கத் துறை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆங்கிலத்தில் வாசிக்க : Delhi CM Kejriwal sent to 6-day ED custody in excise policy case
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“