உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் கடைசி கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு, தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி மூன்று நாள் அங்கு செல்லவுள்ளார். அதேவேளையில், பாஜக தலைவர்கள் பலரும் வாரணாசியை நோக்கி பயணித்துள்ளனர்.
பிரதமரின் லோக்சபா தொகுதியில் கட்சி சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய பாஜக தீவிர பிராச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. பல தலைவர்கள் ஏற்கனவே வாரணாசிக்கு வந்துள்ளனர்
மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வாரணாசியில் முகாமிட்டு அங்கிருந்து தனது அலுவலகத்தை நடத்தி வருகிறார். மேலும், காலை நடைப்பயிற்சியின் போது பொது மக்கள், படகு ஓட்டுநர்களுடன் கலந்துரையாடுகிறார். கடந்த வாரம், யோகாசனம் செய்து கொண்டிருந்த பொதுமக்களை, பஜனை பாடி ஆச்சரியப்படுத்தினார்.
உள்ளூர் கணிதம் முக்கியம்
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர், மஞ்சுல் பார்கவா கூறுகையில், " காலனித்துவ காலப் பாடப்புத்தகங்கள் மற்றும் எழுத்துக்கள் ஆகியவை, கணிதத்தின் "இந்திய வேர்களை" பொதுமக்களுக்குத் தெரியாமல் வைத்திருக்கிறது என நம்புவதாக தெரிவித்தார்.
மேலும், ஃபீல்ட்ஸ் மெடலைப் பெற்ற பேராசிரியர் பார்கவா, வெள்ளிக்கிழமை AICTE ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட கணிதத்தில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து பேசியது சுவாரஸ்யமானது. அவர் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பைத் திருத்துவதற்கான 12 உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் உறுப்பினராக உள்ளார்
நிகழ்ச்சியில் மெய்நிகர் வாயிலாக பங்கேற்ற பேராசிரியர் பார்கவா, கணிதத்தில் இந்தியாவின் அடிப்படைப் பங்களிப்புகள் பள்ளிப் பாடப்புத்தகங்களில் கூட இடம்பெறவில்லை என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil