டெல்லி ராஜபாதை பெயர் மாற்றம்.. காங்கிரஸ் சாடல்.. மிலிந்த் தியோரா வரவேற்பு!

டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராஜபாதை மற்றும் சென்ட்ரல் விஸ்டா தோட்டப்பகுதிகளுக்கு 'கர்தவ்ய பாதை' என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.

டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராஜபாதை மற்றும் சென்ட்ரல் விஸ்டா தோட்டப்பகுதிகளுக்கு 'கர்தவ்ய பாதை' என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
டெல்லி ராஜபாதை பெயர் மாற்றம்.. காங்கிரஸ் சாடல்..  மிலிந்த் தியோரா வரவேற்பு!

டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராஜபாதை மற்றும் சென்ட்ரல் விஸ்டா தோட்டப்பகுதிகளுக்கு 'கர்தவ்ய பாதை' என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. இந்நிலையில் அக்கட்சி தலைவர் மிலிந்த் தியோரா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Advertisment

மிலிந்த் தியோரா ட்விட்டர் பக்கத்தில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக கோயிலுக்கு எடுத்துச் செல்லும் சாலைக்கு கர்தவ்ய பாதை என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது பொருத்தமான பெயர் என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், காங்கிரஸின் ஊடகத் பிரிவுத் தலைவர் பவன் கேரா, வாஜ்பாயின் விருப்பத்தை உறுதிசெய்யும் வகையில், ராஜபாதை ‘ராஜ தர்ம பாதை’ என்று பெயர் மாற்றம் செய்திருக்க வேண்டும் என்று மத்திய அரசை சாடி கருத்து தெரிவித்தார்.

தென் மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் பாஜக

கடந்த மே மாதம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது, 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக பின்தங்கிய மாநிலம் மற்றும் இடங்களை கண்டறிந்து அவற்றில் பணியாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு மத்திய அமைச்சருக்கும் இதில் பொறுப்பு வழங்கப்பட்டது. அந்தந்த பகுதி தலைவர்களிடமிருந்து கருத்துகளை பெற்று மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த உத்தரவிடப்பட்டது. இதன் அறிக்கையை அமைச்சர்கள் கட்சிக்கு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisment
Advertisements

இந்நிலையில், இதுகுறித்த ஆய்வு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக தென், கிழக்கு மாநிலங்களில் பாஜகவின் நிலையை வலுப்படுத்த குழு அமைக்கப்பட்டது, அதுகுறித்தும் கூட்டத்தில் கருத்து கேட்கப்பட உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: