scorecardresearch

டெல்லி ரகசியம்: உ.பி.,யில் பிராமணர்களை கவர குழு அமைத்த பாஜக

மக்கள் தொகையில் 17 சதவீதமாக உள்ள சமூகத்தை புறக்கணிக்க கட்சியால் முடியாது என்று பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு நடவடிக்கைகளால் பிராமணர் பிரிவினர் அதிருப்தியில் இருப்பதாக பரவிய தகவலை உ.பி பாஜக பிரிவு மறுத்துள்ளது. இருப்பினும், கட்சி மேலிடம் அதனை கருத்தில் எடுத்துக்கொண்டதாகத் தெரிகிறது.

பாஜக அரசு எப்போதும் பிராமணர்களுக்காக பாடுபடுகிறது என்ற செய்தியை பரப்பும் வகையில், உ.பி., தேர்தல் பொறுப்பாளரான கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட மத்திய தலைவர்கள், சமூகத்தை சேர்ந்த மாநில தலைவர்களுடன் நடந்த கூட்டத்தில், பிராமண தலைவர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்தனர்.

குழுவில் மூத்த தலைவர்களான சிவ பிரதாப் சுக்லா (ராஜ்யசபா தலைமை கொறடா), மகேஷ் சர்மா, அபிஜத் மிஸ்ரா மற்றும் ராம் பாய் மொகாரியா (குஜராத் எம்.பி.) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், லக்கிம்பூர் வன்முறை யில் தொடர்புடையதாக குற்றச்சாட்டப்பட்டுள்ள மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை, உயர் சாதியினரிடையே பிரச்சாரம் செய்ய களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் தொகையில் 17 சதவீதமாக உள்ள சமூகத்தை புறக்கணிக்க கட்சியால் முடியாது என்று பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.

டெல்லிக்கு வெளியே கொண்டாட்டம்

இந்தியா-பாகிஸ்தான் எல்லையான ஜெய்சால்மரில் டிசம்பர் 5 அன்று எல்லை பாதுகாப்பு படையினர் ரைசிங் தினத்தை கொண்டாடிய நிலையில், டெல்லிக்கு வெளியே அனைத்து படையினரும் அவர்களது ரைசிங் தினத்தை கொண்டாடமாறு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

எல்லைப் பாதுகாப்புப் படையினர் தாங்கள பாதுகாக்கும் பகுதிகளுக்கு அருகிலே கொண்டாடினர். ஆனால், மற்ற துணை ராணுவப் படைகளிடம் தினத்தை கொண்டாட வேற இடத்தை கண்டறிய அறிவுறுத்தப்பட்டது.

டெல்லியில் வரும் ஜனவரி 15 அன்று ராணுவ தினம் கொண்டாடப்படவுள்ளதால், ராணுவத்தை தலைநகரை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் பரிந்துரைத்தது. ஆனால், அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டதால், கடைசி நிமிடத்தில் டெல்லியை விட்டு வெளியேறுவது கடினம் என கூறி இந்தாண்டு மட்டும் ராணுவம் விலக்கு கேட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹுனார் மேன்

சிறுபான்மை விவகாரங்களுக்கான மத்திய இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, தற்போது கைவினைஞர்களால் “ஹுனார் மேன்” என்று அழைக்கப்படுகிறார்.

கைவினைஞர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் அமைச்சகத்தின் முதன்மைத் திட்டமான ஹுனார் ஹாட்ஸைத் தொடங்கிவைத்து, அதற்காக நாடு முழுவதும் பயணம் செய்து வருவதால், இந்த பெயர் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஹாட்ஸ் என்பது கைவினைஞர்களுக்கான வெளிப்பாட்டையும், ஓரளவு வருமானத்தையும் அளிப்பதற்கான ஒரு வழியாகும். தொற்றுநோய் மத்தியிலும் அவை செயல்பட்டன. அவ்வப்போது, ஹாட்ஸ்களில் அமைச்சர்கள், ஆளுநர்கள், மூத்த பாஜக தலைவர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Delhi confidential bjp brahmin outreach ahead of up polls