காங்கிரஸ் மேலிடம், சரண்ஜித் சிங் சன்னியை இரண்டு தொகுதிகளில் போட்டியிட அனுமதிப்பது, அவரை முதல்வர் வேட்பாளராக களமிறக்கவுள்ளதா என்ற விவாதத்தை எழுப்பியுள்ளது. ஆனால், அதற்கடை விடையை காங்கிரஸ் மேலிடம் மக்களிடம் தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ், பொது மக்களின் கருத்தையும், அவர்களின் விருப்பமான முதல்வர் தேர்வுகளில் அதன் தரவரிசை மற்றும் கோப்புகளையும் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பஞ்சாபில் கட்சியின் களநிலவரம் குறித்து நிகழ்நேர கருத்துக்களைப் பெற தரவு பகுப்பாய்வுத் துறையால் 70 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
சமூக ஊடக துறை சார்பாரகவும் பொதுமக்களிடம் இருந்து தகவல்களை சேகரிக்க 250 பேரை நியமித்துள்ளது. இதுதவிர,குறைந்தபட்சம் இரண்டு வெளிப்புற ஏஜென்சிகள் விருப்பமான முதல்வர் வேட்பாளரைக் கண்டறிய கணக்கெடுப்புகளைச் செய்து வருகின்றன. தொகுதி அளவில் இருந்தே கட்சி நிர்வாகிகளின் கருத்தும் கேட்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவிட் முன்னெச்சரிக்கை
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை தொடங்கியுள்ள நிலையில், அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக RTPCR சோதனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.கொரோனா பாசிட்டிவ் வந்தால், அவர்கள் எழு நாள்கள் வீட்டு தனிமையில் இருந்துவிட்டு, வர வேண்டும். நெகிட்டிவ் ரிப்போர்ட் தேவையில்லை. இரு அவைகளின் கேலரிகள் மற்றும் அறைகள் முழுவதும் உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து நிலைமையை ஆய்வு செய்தார். நேரமின்மை காரணமாக, இரு அவைகளும் ஒரு மணி நேரம் குறைவாக செயல்படலாம் என கூறப்படுகிறது.
மதிய உணவு
குடியரசு தின கொண்டாட்டங்களுக்குப் பிறகு ஜம்மு மற்றும் காஷ்மீர் அலங்கார ஊர்தியுடன் பங்கேற்ற கலைஞர்கள், ஊர் திரும்புவதற்கு முன்பு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் டெல்லியில் உள்ள தனது வீட்டில் மதிய உணவு அளித்தார். விருந்தில் பங்கேற்ற கலைஞர்கள், பாரம்பரிய ஆடை அணிந்தப்படி வந்தனர்.தேந்திர சிங் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil