அமைச்சரவை விரிவாக்கம்: மகாராஷ்டிராவில் கடந்தாண்டு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி உடைந்தது. தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தாக்கரே, ஷிண்டே தரப்பினர் இருவரும் சிவசேனா கட்சி பெயர், சின்னம் பெறுவதில் உரிமை கோரி வருகின்றனர்.
இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தரப்பினர் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்திற்காக காத்திருக்கின்றனர். அதன் தலைவர்களை மத்திய அமைச்சரவையில் சேர்ப்பது கிட்டத்தட்ட உயிர்நாடியாக இருக்கும் என்று கூறுகின்றனர். மத்திய அமைச்சரவை விரிவாக்கம் அல்லது மறுசீரமைப்பு பற்றிய ஊகங்கள் பல பா.ஜ.க அமைச்சர்களை சற்று பதட்டப்படுத்தியிருக்கலாம். ஆனால் ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் இதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஷிண்டே தரப்பு எம்.பி.க்களுக்கு இடமளிக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.
கட்சியை ஒன்றாக வைத்திருப்பதற்கும், தலைவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கும் முக்கியம் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் மும்பை பயணத்தின் போதும் இதுதொடர்பாக பேசப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
படங்கள் நீக்கம்: சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது. 2021-ம் ஆண்டு முதல் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டடத்தின் புகைப்படங்கள், பணிகள் குறித்து அரசாங்கத்தின் பிரத்யேக இணையதளமான centralvista.gov.in இல் பதிவேற்றப்பட்டு வருகிறது.
அந்தவகையில், சமீபத்தில் ஜனவரி 16-ம் தேதி அன்று மக்களவை, மாநிலங்களை அரங்கம் உள்ளிட்ட மாதிரி புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. பல்வேறு ஊடகங்கள் இது குறித்து செய்தி வெளியிட்டன. இந்நிலையில், பணிகள் மற்றும் இணையதளத்தை மேம்படுத்தும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் பாதுகாப்புக் காரணங்களை மேற்கோள் காட்டி அவற்றை நீக்கியது.
மேலும், “progress” பக்கத்தில் பதிவிடப்பட்ட முந்தைய புகைப்படங்களும் அகற்றப்பட்டன. “progress” பக்கத்தின் புகைப்படங்கள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/