டெல்லி ரகசியம்: அமைச்சர்களை லங்கருக்கு அழைத்த விவசாய தலைவர்கள்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் செவ்வாய்க்கிழமை நடந்த சந்திப்பில், அமைச்சர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முட்டுக்கட்டைக்கு முடிவு கட்டும் முயற்சிகளில் சிறிது முன்னேற்றத்தைக் காண ஆர்வமாக இருந்தனர்.

By: Updated: December 2, 2020, 12:30:05 PM

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளின் தலைவர்களுடனான பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் தேநீர் விருந்துக்கு அழைத்தை விவசாய தலைவர்கள் மறுத்துள்ளனர். மேலும், அமைச்சர்களை விவசாயிகளின் லங்கர்-க்கு (சம பந்திக்கு) அழைத்ததாக விவசாயிகள் தலைவர்கள் தெரிவித்தனர்.

டெல்லியில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சந்தித்த அமைச்சர்கள், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முட்டுக்கட்டைக்கு முடிவு கட்டும் முயற்சிகளில் சிறிது முன்னேற்றத்தைக் காண ஆர்வமாக இருந்தனர். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோர் தேநீர் விருந்துக்கு வருமாறு விவசாயிகள் தலைவர்களை அழைத்தனர். இருப்பினும், அமைச்சர்களின் அழைப்பை மறுத்த விவசாய தலைவர்கள், அதற்கு பதிலாக டெல்லியின் எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லங்கரில் (பந்தியில்) அவர்களுடன் சேர அமைச்சர்களை அழைத்தனர். விவசாயிகளின் தலைவர்கள், அமைச்சர்கள் அங்கே ஜிலேபிகளுடன் உபசரித்திருக்கலாம். தேநீர் குடிக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறினர் என்று கூறினார்கள்.

சிராக் பாஸ்வான்

சிராக் பாஸ்வானுக்கு டிசம்பர் 4ம் தேதி ஒரு முக்கியமான நாளாக இருக்கும் – பிரதமர் அழைப்பு விடுத்துள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் மக்களவையில் லோக் ஜனசக்தி கட்சி தலைவராக அவர் கலந்துகொள்வது இதுவே முதல் முறையாகும். இந்த நிகழ்வின் பரிமாணம் என்னவாக இருக்கும் என்ற யூக அரசியல் வட்டாரத்தில் சுவாரசியத்தை உருவாக்குகிறது.

அண்மையில் பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது ஐக்கிய ஜனதா தளத்துடனான எதிர்ப்புக்குப் பிறகு, எல்.ஜே.பி-யின் போட்டியே ஒரு பாஜக சூழ்ச்சி என்று பலர் வலியுறுத்தினாலும், அவரது தந்தைக்கு இருந்த ராஜ்யசபா இடம் பாஜக வேட்பாளருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. பீகார் சட்டமன்றத்தில் இடங்கள் இல்லாததால், சிராக் பாஸ்வான் பாராளுமன்றத்திற்கு திரும்பக்கூடும் அது அவரை வித்தியாசமாகக் நடத்துகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Delhi confidential farmers protest minister narendra singh tomar chirag paswan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X