New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/09/Birla.jpg)
2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கான செயல்திட்டத்துடன் தயாராகி வருகிறது என சுரினாம் நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடியின் ‘2047இல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்’ என்ற செய்தியை உலகுக்கு எடுத்து சென்றார். சுரினாமுக்கு நாடாளுமன்ற குழுவை வழிநடத்திச் சென்ற பிர்லா, 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கான செயல்திட்டத்துடன் தயாராகி வருகிறது என்றார். பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களின் ஆக்கப்பூர்வமான விவாதங்களின் விளைவே பயனுள்ள சட்டம் என்று கூறினார். இதுகுறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறுகையில், பிர்லாவின் செய்தி ஆளும் கட்சிக்கானது என்று கூறுகிறார்கள். நாடாளுமன்றத்தில் முறையான விவாதம் இல்லாமல் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்கானது என்று கூறினர்.
சிம்லாவில் கருத்து வேறுபாடு: இமாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை காங்கிரஸ் நேற்று தொடங்கியது. முதற்கட்டமாக 10 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பரப்புரையை தொடங்கியது. ஆனால் நிகழ்ச்சியில் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பங்கேற்கவில்லை. காங்கிரஸ் தேர்தல் பார்வையாளர்கள் சச்சின் பைலட், பர்தாப் சிங் பஜ்வா, ஏஐசிசி பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா, மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் மற்றும் பிற மூத்த மாநில தலைவர்கள் முன்னிலையில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் அறிவிப்பை வெளியிட்டார். இமாச்சல பிரதேச தேர்தல் வழிநடத்துதல் குழு தலைவர் பதவியில் இருந்து ஷர்மா அண்மையில் விலகினார். சுக்லா அவரை சமாதானப்படுத்த சந்தித்தார். ஆனால் அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அவருடன் கட்சி நிர்வாகிகள் பகிர்ந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் பங்கேற்கவில்லை என தகவல் தெரிவிக்கின்றன.
தொழில்நுட்ப அறிவு: இந்த வார தொடக்கத்தில் ஒரு விசாரணையின் போது கூறிய நீதிபதி டி. ஒய். சந்திரசூட்,உச்ச நீதிமன்றம் அதன் கணினி பிரிவுக்கு தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்கத் திட்டமிட்டு வருகிறது. தற்போதுள்ள ஊழியர்களில் முதலில் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் விருப்பமுள்ளவர்களை மீண்டும் பணியில் அமர்த்த ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி சந்திரசூட் கூறினார். தேவைப்பட்டால், அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களின் தகுதி மற்றும் நிபுணத்துவத்திற்கு ஏற்ற பணி வழங்கப்படும், என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.