scorecardresearch

சோனியா காந்தி காண்பித்த புகைப்படம் : ’எனக்கும் அனுப்புங்க’ என்று கேட்டு வாங்கிய தயாநிதி மாறன்                 

சோனியா காந்தி மக்களவை கூட்டம் தொடங்கும் முன்பு, தனது செல்போனில் உள்ள புகைப்படத்தை மிகவும் ஆர்வமாக கூட்டணி கட்சி எம்.பி-களுக்கு காண்பித்தார்.

சோனியா காந்தி

சோனியா காந்தி மக்களவை கூட்டம் தொடங்கும் முன்பு, தனது செல்போனில் உள்ள புகைப்படத்தை மிகவும் ஆர்வமாக கூட்டணி கட்சி எம்.பி-களுக்கு காண்பித்தார்.

மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவைக்கு 11 மணிக்கு வருகை தந்த சோனியா காந்தி, முக்கியமான ஒன்றை தனது சக எம்.பி களுக்கு காண்பித்தார். தனது கைபேசியை  எடுத்து, அதில் இருக்கும் கருப்பு- வெள்ளை புகைப்படத்தை தி.மு.க எம்.பி டி.ஆர். பாலு ,  எம்.பி பரூக் அப்துல்லா-வுக்கு காண்பித்தார். சோனியா காந்தியின் மிகுந்த சந்தோஷத்தை கவனித்த எம்.பி தயாநிதி மாறன், அவரிடம் இது குறித்து கேட்டார்.

மேலும் அந்த புகைப்படத்தை தனக்கு செல்போனில் அனுப்புமாறு சோனியாவிடம் கேட்டார். எம்.பி சுப்ரியா சூலிடம் தனது கைபேசியை கொடுத்து. அந்த புகைப்படத்தை மாறனுக்கு அனுப்பச் சொன்னார் சோனியா. மக்களவையில் இணைய சேவை சரியாக இல்லை என்பதால், தயாநிதி மாறன் கைபேசியை வாங்கிய எம்.பி சுப்ரியா, ஸ்கிரீன் ஷாட் எடுத்து, புகைப்படத்தை பகிர்ந்தார்.  

நாற்காலி மூலம் ஒரு பாடம்

திரிணாமுல் காங்கிரஸின் ராஜசபா தலைவர் டெரிக் ஓ பைர்ன், இளம் ஆய்வாளருக்கு பாடம் கற்றுக்கொடுத்தார். திரிணாமுல் காங்கிரஸின், செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் இடத்தில் உள்ள. நாற்காலிகளை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டது. ஏன் இன்னும் நாற்காலிகள் நிக்கப்படவில்லை என்று பெண் ஆய்வாளர் ஒருவரிடம் டெரிக் ஓ பைர்ன் கூறினார். இந்த பணியை செய்வதற்கான நபரிடம், இது குறித்து சொல்லிவிட்டதாக பதிலளித்தார் அந்த பெண் ஆய்வாளர். நாற்காலிகளை அகற்றும் வேலையை நீங்கள் செய்திருக்கலாமே, ஏன் உங்கள் கைகள் அழுக்காகி விடுமா என்ன? . இதை ஒரு ஆண் வந்து செய்ய வேண்டும் என்பதில்லை என்று அவர் கூறினார். உடனே அந்த பெண் நாற்காலியை அங்கிருந்து நீக்கினார்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Delhi confidential moments before parliament chaos photo on sonias phone sparks much excitement