மோடி அறிவுரை; கேரள சர்ச் தலைவர்களை அணுக பா.ஜ.க கூடுதல் முயற்சி

கிறிஸ்தவ சமூக வாக்குகளை கவர தேவையான நடவடிக்கை எடுக்க கட்சியினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்; கேரள தேவாலய தலைவர்களை அணுக கூடுதல் முயற்சிகளை மேற்கொள்கிறது பா.ஜ.க

கிறிஸ்தவ சமூக வாக்குகளை கவர தேவையான நடவடிக்கை எடுக்க கட்சியினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்; கேரள தேவாலய தலைவர்களை அணுக கூடுதல் முயற்சிகளை மேற்கொள்கிறது பா.ஜ.க

author-image
WebDesk
New Update
pm modi

பிரதமர் நரேந்திர மோடி

கிறிஸ்தவ சமூகத்தை கவர கேரள பா.ஜ.க.,வுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளதை அடுத்து, கட்சித் தலைவர்கள் தேவாலயத் தலைவர்களை அணுக கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். புதன்கிழமை, கேரளாவில் உள்ள மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரியன் சர்ச்சின் முக்கிய பிரிவுகளில் ஒன்றின் தலைவரான பாசெலியோஸ் மார்த்தோமா மேத்யூஸ் III, மத்திய அமைச்சர் வி.முரளீதரனுடன் பிரதமரை அவரது பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்தார். குஜராத்தில் ஒரு மறைமாவட்டத்தைக் கொண்டுள்ள மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் மலங்கரா திருச்சபைக்கு குஜராத் பா.ஜ.க மற்றும் அரசு ஆதரவு அளித்துள்ள நிலையில், இந்த சந்திப்பு இரு தரப்புக்கும் மகிழ்ச்சியை அளித்தது. பாசிலியோஸ் பிரதமரின் வளர்ச்சி முயற்சிகளை வரவேற்று, கோட்டயத்தில் உள்ள அவர்களின் தலைமையகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் மீதான தாக்குதல்களை பிரதமரிடம் முறையிட்டார்.

Advertisment

இதையும் படியுங்கள்: சங்பரிவார்களின் வரலாற்றை அழிக்கும் முயற்சி; காந்தியின் கொள்ளுப் பேரன்

புதிய ஆரம்பம்

புதன்கிழமை முதல் முறையாக, ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் ஐ-பேடைப் பயன்படுத்தி ராஜ்யசபையின் நடவடிக்கைகளை நடத்தினார், இது தலைவரின் காகிதமற்ற பாரம்பரியத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. புதிய பார்லிமென்ட் கட்டடம், காகிதம் இல்லாததாகவும், தொழில்நுட்பம் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதால், ஐ-பேட்கள் மற்றும் டேப்லெட்கள் பயன்படுத்துவது விரைவில் நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் கூறுகின்றனர். காலை 11 மணிக்கு நடவடிக்கைகள் தொடங்கிய பிறகு நான்கு நிமிடங்களுக்குள் ஜக்தீப் தன்கர் சபையை ஒத்திவைக்க வேண்டியிருந்தாலும், அவர் தனது கருத்தை ஒரு துண்டு காகிதத்தைப் பயன்படுத்தாமல் நன்றாக வெளிப்படுத்தினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala Bjp Modi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: