தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்றக் குழு மறுசீரமைப்பிற்கு பிறகு, இந்த வார தொடக்கத்தில் கூடியது. நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹா கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு வங்கம் அசன்சோல் இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் போட்டியில் வெற்றி பெற்றார். இவர் தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்றக் குழுவில் உறுப்பினராக உள்ளார். இந்த வார தொடக்கத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய சின்ஹா, தனக்கு சக உறுப்பினர்களின் தொழில்நுட்ப அறிவால் மிகவும் ஈர்க்கப்பட்டதாகக் கூறினார். அதேசமயம் ஐடி பற்றிய தனது அறிவு மெசேஜ்களை அனுப்பவும், நீக்கவும் மட்டுமே உள்ளது என்று கூறினார்.
கூட்டத்தின் முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ராஜ்யசபா எம்.பி ஜான் பிரிட்டாஸ் கூறுகையில், "தனது பதவிக்காலம் முடிவதற்குள் சின்ஹாவிற்கு இந்தக் குழு வாட்ஸ்அப் செய்திகளை எப்படி அனுப்புவது என்பதை கற்பிக்க வேண்டும்" என்றார். இதனால் அங்கு நிலவிய தீவிரமான சூழல் சற்று லேசாக மாறியது.
கர்தவ்யா பாதை: டெல்லி ராஜ பாதை கர்தவ்யா பாதை எனப் பெயர் மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டது. மத்திய பா.ஜ.க அரசு பெயர் மாற்றி அறிவித்தது. புதிதாக பெயர்மாற்றப்பட்ட சாலை இப்போது பா.ஜ.க தலைவர்களாக கவனம் பெற்று வருகிறது. தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது மனைவியுடன் கர்தவ்யா பாதையில் சென்று வீடியோ எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதேபோல், நேற்று புதன்கிழமை, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், தனது மனைவியுடன் ராஜபாதையில் காலை நடைபயிற்சிக்குச் சென்றார்.
தெலுங்கானாவில் பா.ஜ.க உத்தி: தெலுங்கானாவில் பா.ஜ.க வலிமையான மாற்றாக உருவெடுக்க கடுமையாக உழைத்து வருகிறது. இந்நேரத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பாளர் தருண் சுக் கூறுகையில், “பல தலைவர்கள்” பா.ஜ.கவில் இணையவுள்ளதாக கூறினார்.
இந்தநிலையில், நேற்று புதன்கிழமை, ஆளும் டி.ஆர்.எஸ் முன்னாள் மக்களவை உறுப்பினர் பூரா நர்சய்யா கவுட் டெல்லி சென்று பா.ஜ.கவில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பூபேந்தர் யாதவ் மற்றும் ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். ரெட்டியின் வலது காலில் லேசான எலும்பு முறி ஏற்பட்டுள்ளதால் அவர் நிகழ்ச்சில் மேடையில் ஏறுவதற்கு சிரமப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“