நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி நாடு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஹர் கர் திரங்கா என இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அதன்படி ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றினர். இதற்காக பிரத்யேகமாக ஹர் கர் திரங்கா என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது.
டிஜிட்டல் முறையில் இந்த இணையதளத்தில் தேசிய கொடியை பதிவிடும் வகையில் உருவாக்கப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகளில் ஏற்றப்பட்ட தேசியக் கொடியையும், தேசியக் கொடிக்கு அருகே செல்ஃபி எடுத்தும் புகைப்படங்களை பதிவிடும் வகையில் அமைக்கப்பட்டது. இந்தியா மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் இந்த பிரச்சாரத்தில் பலர் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் தேசியக் கொடியுடன் செல்ஃபி எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதைய கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பிரச்சாரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதாகவும் கூறியுள்ளது.
கிரண் ரிஜிஜு
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (SCBA) சார்பில் ஆண்டுதோறும் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும். இதில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கலந்து கொள்வார். அந்தவகையில் இந்தாண்டு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு விழாவில் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அமைச்சர் ரிஜிஜு, கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு வராததால், நான் கலந்து கொள்ளவில்லை என்றார். இருப்பினும் வழக்கறிஞர்கள் சங்க தலைவரும், மூத்த வழக்கறிஞருமான விகாஸ் சிங், அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ரிஜிஜு, விகாஸ் சிங் அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார், ஆனால் எனக்கு அது வரவில்லை. இதை விட்டுவிடுவோம். யாருடைய தவறு என்பதை பார்க்க வேண்டாம். இந்தாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.