டெல்லி ரகசியம்: A ஃபார் அம்பேத்கர், B ஃபார் பகத் சிங் – புதிய சார்ட் அறிமுகம்

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி, தனது டயமண்ட் ஹார்பர் தொகுதியில் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை மேற்கொண்டார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி, சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் தனது மக்களவைத் தொகுதியான டயமண்ட் ஹார்பரில் கொரோனா பரிசோதனை இயக்கத்தை மேற்கொண்டார். ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 27,000 சோதனைகள் என்ற விகிதத்தில் அங்கு, 53,203 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இது நாடு முழுவதும் ஒரு தொகுதியில் ஒரே நாளில் நடந்த அதிக கொரோனா பரிசோதனை எண்ணிக்கையில் ஒன்றாகும் என எம்.பி கூறுனார். மேலும், மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் தனது தொகுதியில் தான் கோவிட் பாசிட்டிவிட்டி விகிதம் குறைவாக இருப்பதாக தெரிவித்தார்.

X For LaXman?

விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) ஆங்கில எழுத்துக்கள் அட்டவணையை இந்தியமயமாக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளது. A for Apple, B for Ball அட்டவணையை ஒதுக்கி வைத்துவிட்டு, அதற்கு பதிலாக இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிற மதப் பிரமுகர்கள் இடம்பெற்ற அட்டவனையை குழந்தைகள் கற்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

அவர்கள் அட்டவனையின்படி, A ஃபார் அம்பேத்கர், B ஃபார் பகத் சிங், C ஃபார் சாணக்யா, D ஃபார் தயானந்தா… K for அப்துல் கலாம், லக்ஸ்மனுக்கு X, வால்மீகிக்கு W (வால்மீகி) மற்றும் Z க்கு Zulelal (ஜூலேலால்), y ஃபார் யோகா என சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.

ட்விட்டர் கணக்கு ஹேக்

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் புதன்கிழமை காலை தனது ட்விட்டர் பக்கத்தில் சில எதிர்பாராத சூழ்நிலையை எதிர்கொண்டது. அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, அமெரிக்க பில்லியனர் எலோன் மஸ்க் என பெயர் மாற்றப்பட்டது.

1.4 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களை கொண்ட அந்த கணக்கு, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஹேக்கர்கள் கைவசம் இருந்தது. அவர்கள் Hurry up!”, “Great job!” “Love you guys!! My gift here!!” போன்ற கமெண்ட்களை தொடர்ந்து வெளியிட்டனர்.

பின்னர், 10 மணியளவில் ட்விட்டர் கணக்கை மீட்டெடுத்த அமைச்சகம், ஹேக்கர்கள் பதிவிட்ட ட்வீட்டை டெலிட் செய்தது. அமைச்சகத்தின் கணக்கு மீட்டெடுக்கப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்திலும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Delhi confidential vhp new alphabet chart

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express