உச்ச நீதிமன்றத்தின் 48ஆவது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா கடந்தாண்டு ஏப்ரல் 24ஆம் தேதி பொறுப்பேற்றார்.
தலைமை நீதிபதியாக 16 மாதங்கள் பணியாற்றிய ரமணா நேற்றுடன்(ஆகஸ்ட் 26) ஓய்வு பெற்றார். இதை முன்னிட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வின் விசாரணை நேற்று முதன் முறையாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இலவசங்கள் குறித்த வழக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நேற்றுடன் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பிரியாவிடை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. பிரியாவிடை நிகழ்ச்சியில் பேசிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தெலுங்கு இலக்கியத்தின் ஆர்வலரான ரமணா, ஓய்வுக்குப் பிறகு தெலுங்கில் ரொமான்டிக் நாவல் எழுதுவது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார். இதை மிகவும் நம்பகமான ஆதாரங்களில் இருந்து திரட்டினேன் என்றார்.
மேலும், இதுகுறித்த என் ஆராய்ச்சியை நிறுத்திவிட்டேன் என்றார். இதற்கு பதிலளித்து பேசிய ரமணா, நான் மேத்தா கூறியதை விளக்க விரும்புகிறேன். IB (Intelligence Bureau) போல ஆராய்ச்சி செய்துள்ளீர்கள். ஆனால் உங்கள் அறிக்கை சரியானது அல்ல. நான் இலக்கியம் பற்றிய சில புத்தகங்களை எழுதலாம், நான் வழக்கறிஞராக இருந்தபோது நடந்த வரலாற்று நிகழ்வுகள் மற்றும் பலவற்றை எழுதலாம் என்று கூறினார்.
மேற்கு வங்க அரசியல்: 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வலுவான வெற்றி பெற்றதை தொடர்ந்து, திரிபுராவில் மேலும் வளர்ச்சியை கொண்டு வர முடிவு செய்து பணியாற்றி வருகிறது. மாநிலத்தில் கட்சியை வழிநடத்த சுபால் பௌமிக் நியமிக்கப்பட்டார். ஆனால் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் உறுதியான வெற்றி பெறாத நிலையில், பௌமிக் கட்சியிலிருந்து படிப்படியாக விலக தொடங்கினார். சமீபத்தில் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆகஸ்ட் 28 அன்று 2 நாள் பயணமாக பாஜக மூத்த தலைவர் ஜேபி நட்டா மேற்கு வங்கம் வரவுள்ளார். அப்போது பௌமிக் மீண்டும் பாஜகவில் இணைவார் என தகவல் தெரிவிக்கின்றன.
இந்தியா இணைப்பு: ஐ.நா முன்னாள் பொதுச்செயலாளர் பான் கி-மூன் நேற்று வெள்ளிக்கிழமை, ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் கெவின் ரூடுடன் டெல்லி வந்தார். அப்போது கி-மூன், 50 ஆண்டுகளுக்கு முன் இந்த நகரத்தில் தான் தனது வாழ்க்கை தொடங்கியதாக தெரிவித்தார். காலநிலை அறிக்கையின் வெளியீட்டு விழாவில் பேசிய கி-மூன், தனது மகன் புது டெல்லியில் பிறந்ததாகவும், ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும் தனது மகள் “ஒரு இந்திய பையனை” திருமணம் செய்து கொண்டதாகவும் தனது இந்திய தொடர்பை வெளிப்படுத்தினார். கி-மூனின் மருமகன் தற்போது ஐக்கிய நாடுகள் சபை சீனாவில் பணிபுரிகிறார். இந்தியாவையும் சீனாவையும் ஒன்று சேர்க்க அவர் காரணமாக இருக்கலாம் எனப் பேசினார்.