பத்திரிக்கையாளர் சௌமியா விஸ்வநாதன் கொல்லப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், 2008 ஆம் ஆண்டு வழக்கில் கொலை மற்றும் குற்றங்கள் புரிந்த நான்கு பேரை MCOCA இன் கீழ் டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகள் என புதன்கிழமை தீர்ப்பளித்தது.
ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக் மற்றும் அஜய் குமார் ஆகியோர் கொலைக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர், அதே நேரத்தில் அஜய் சேத்தி திருடப்பட்ட சொத்துக்களைப் பெற்றதற்காகவும், MCOCA 1999 இன் பிரிவுகளின் கீழும் தண்டனை பெற்றுள்ளார்.
தண்டனையின் விவரங்களை நீதிமன்றம் அடுத்த வாரம் அறிவிக்கும்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, செப்டம்பர் 30, 2008 அன்று, இந்தியா டுடேயில் பணிபுரிந்த 25 வயது பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் தெற்கு டெல்லியில் உள்ள நெல்சன் மண்டேலா மார்க்கில் அவரது காரில் இறந்து கிடந்தார்.
அவரது கொலையாளிகளை அடையாளம் காண போலீசார் ஆரம்பத்தில் சிரமப்பட்டனர், ஆனால் 2009 இல் பி.பி.ஓ ஊழியர் ஜிகிஷா கோஷ் கொலை தொடர்பான விசாரணையின் போது ஒரு திருப்புமுனை வந்தது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சௌமியா விஸ்வநாதன் கொலையிலும் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார்.
பின்னர், மஹாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன, இந்த MCOCA வழக்குகள் விசாரணையை இழுத்தடித்தது.
MCOCA குற்றச்சாட்டுகள் வழக்கில் சிக்கலைச் சேர்த்தது, ஏனெனில் இந்த ஐந்து பேரும் பல வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் ஒரு பகுதியாக இருந்தனர் என்பதை அரசுத் தரப்பு நிரூபிக்க வேண்டும்.
வழக்கு விசாரணை 15 ஆண்டுகளாக நடந்து வருகிறது, சாட்சியங்களை சமர்ப்பிக்க அரசு தரப்புக்கு 13 ஆண்டுகள் ஆனது. மேலும், அரசு வழக்குரைஞர் ராஜீவ் மோகனும் சில விசாரணைகளில் ஆஜராகவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“