டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத் துறை காவல் ஏப்.1ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் 6 நாள்கள் காவலில் வைக்க அனுமதி அளித்தது.
இந்தக் காவல் மார்ச் 28ஆம் தேதியோடு நிறைவுற்றது. இந்த நிலையில் இன்று கெஜ்ரிவால் மீண்டும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து, அவரை அமலாக்கத் துறை காவலில் ஏப்.1ஆம் தேதிவரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத் துறை காவல் மேலும் 4 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் முதல்வருக்கு வாழ்த்து
டெல்லியின் ரோஸ் அவென்யூ கோர்ட்டில் இருந்து புறப்படும்போது, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கு வாழ்த்துக்கள்" என்று கூறினார்.
காங்கிரஸ் கருத்து
“ஜனநாயகத்தை காப்பாற்ற மார்ச் 31ஆம் தேதி பேரணி நடத்தப்படுகிறது. அதன் செய்தி டெல்லியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் தெரிவிக்கப்படும்” என டெல்லி காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவாலுக்கு துன்புறுத்தல்
ரோஸ் அவென்யூ நீதிமன்றத்துக்கு வெளியே, சுனிதா கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அவருக்கு உடல்நிலை சரியில்லை. சர்க்கரை அளவு ஏற்ற இறக்கமாக உள்ளது. அவர் மிகவும் துன்புறுத்தப்படுகிறார். இந்த கொடுங்கோன்மை நீடிக்காது, மக்கள் பதில் அளிப்பார்கள்" என்றார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : Arvind Kejriwal Arrest Live Updates: No relief for Kejriwal as ED gets custody till April 1
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"