டெல்லி பிரகடனம்: ஆப்கன் பகுதிகளை பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தக் கூடாது; 8 நாடுகள் வலியுறுத்தல்

டெல்லியில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ரஷ்யா, ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இங்கே தரப்படுகிறது.

Delhi declaration, Afghan territory must not be used for terrorism, India, 7 other countries affirm, டெல்லி பிரகடனம், இந்தியால், புதுடெல்லி, ஆப்கானிஸ்தான், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்யா, ஈரான், தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், கஜகஸ்தான், கிர்ஜிஸ்தான், உஸ்பெகிஸ்தான், NSA Ajit Doval, NSAs of Russia, Iran, Tajikistan, Uzbekistan, Turkmenistan, Kazakhstan, Kyrgyzstan, New Delhi, NSA Ajit Doval

இந்தியா உட்பட 8 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் புதன்கிழமை ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து விவாதித்தனர். ஆப்கானிஸ்தான் தனது பிரதேசங்களை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படக்கூடாது என்பதை ஒப்புக்கொள்வதோடு, கடும்போக்கு, தீவிரவாதம், மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக ஒத்துழைப்பு அளிக்க அழைப்பு விடுத்தனர்.

“பெரிய இன-அரசியல் சக்திகளின்” பிரதிநிதித்துவத்தைக் கொண்ட உள்ளடக்கிய அரசாங்கத்திற்கு ஆதரவைத் தெரிவிக்கவும் அவர்கள் முடிவு செய்தனர்.

ஆப்கானிஸ்தானில் மோசமடைந்து வரும் சமூக-பொருளாதார மற்றும் மனிதாபிமான நிலைமை குறித்து கவலை தெரிவித்த 8 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் ஆப்கானிஸ்தானுக்கு தடையின்றி, நேரடியான மற்றும் உறுதியான முறையில் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும், சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் பாரபட்சமற்ற முறையில் அந்நாட்டிற்குள் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் கூறினர்.

டெல்லியில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ரஷ்யா, ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றதால் இவை முக்கியமானவையாக அமைந்துள்ளது.

“அந்நாட்டின் நிலைமை, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மட்டுமல்ல, அதன் அண்டை நாடுகளுக்கும் பிராந்தியத்திற்கும் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது” என்று அஜித் தோவல் கூறினார்.

“இது நம்மிடையே நடைபெற்ற நெருக்கமான ஆலோசனை, அதிக ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய நாடுகளிடையே தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கான நேரம்” என்று அஜித் தோவல் கூறினார்.

ஆப்கானிஸ்தான் தொடர்பான டெல்லி பிராந்திய பாதுகாப்பு உரையாடலில் அஜித் பேசுகையில், “இது 2018 ல் ஈரானால் தொடங்கப்பட்ட செயல்முறையின் மூன்றாவது கூட்டம். நாங்கள் அங்கே இரண்டாவது கூட்டத்தை நடத்தினோம். அதற்காக ஈரானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து மத்திய ஆசிய நாடுகளின் பங்கேற்புடன் இன்று இந்த உரையாடலை நடத்துவது இந்தியாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த யோசனையின் தொடங்கிய நாடாக ரஷ்யா இருந்தது.” என்று கூறினார்.

டெல்லி கூட்டத்தில் ரியர் அட்மிரல் அலி ஷாம்கானி (ஈரான்), நிகோலாய் பி பட்ருஷேவ் (ரஷ்யா), கரீம் மாசிமோவ் (கஜகஸ்தான்), மராட் முகனோவிச் இமான்குலோவ் (கிர்கிஸ்தான்), நஸ்ருல்லோ ரஹ்மத்ஜோன் மஹ்முத்ஜோடா (தஜிகிஸ்தான்), சாரிமிரத் ககலியேவ், விமென்சிரத் அம்காலியேவ் (உஸ்பெகிஸ்தான்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பாதுகாப்பு உயர் அதிகாரிகள் புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்தனர்.

இந்த கூட்டத்திற்குப் பிறகு, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட டெல்லி பிரகடனம், பங்கேற்பாளர்களால் ஆப்கானிஸ்தானில் உருவாகி வரும் நிலைமை, குறிப்பாக பாதுகாப்பு நிலைமை மற்றும் அதன் பிராந்திய மற்றும் உலகளாவிய மாற்றங்கள் குறித்து விவாதித்ததாகக் கூறப்பட்டது. அவர்கள் ஆப்கானிஸ்தானில் தற்போதைய அரசியல் சூழ்நிலை, பயங்கரவாதம், தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மனிதாபிமான உதவியின் தேவை ஆகியவற்றிலிருந்து எழும் அச்சுறுத்தல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தினர்” என்று பிரகடனம் கூறியுள்ளது.

டெல்லி பிரகடனத்தின்படி, அவர்கள் முக்கிய விஷயங்களில் ஒப்புக்கொண்டனர்:

*அமைதியான, பாதுகாப்பான மற்றும் நிலையான ஆப்கானிஸ்தானுக்கு அவர்கள் வலுவான ஆதரவை மீண்டும் வலியுறுத்தினர். அதே நேரத்தில் இறையாண்மை, ஒற்றும, பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை, அதன் உள் விவகாரங்களில் தலையிடாதது ஆகியவற்றை வலியுறுத்தினர்.

*ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு சூழ்நிலையில் இருந்து எழும் ஆப்கானிஸ்தான் மக்களின் துயரங்கள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய அவர்கள் குண்டுஸ், காந்தஹார் மற்றும் காபூல் பயங்கரவாத தாக்குதல்களை கண்டித்தனர்.

*ஆப்கானிஸ்தான் பிரதேசத்தை தங்குமிடம், பயிற்சி, திட்டமிடல் அல்லது பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்ய பயன்படுத்தக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

*அவர்கள் அனைத்து பயங்கரவாதச் செயல்களையும் கடுமையாகக் கண்டித்ததோடு, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி, பயங்கரவாத உள்கட்டமைப்பைத் தகர்த்தல் மற்றும் தீவிரமயமாக்கலை எதிர்த்தல் உள்ளிட்ட அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான உறுதியான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். உலகளாவிய பயங்கரவாதத்திற்கு ஆப்கானிஸ்தான் ஒருபோதும் பாதுகாப்பான புகலிடமாக மாறாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

*இந்த பிராந்தியத்தில் கடும்போக்குவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றின் அச்சுறுத்தலுக்கு எதிராக கூட்டு ஒத்துழைப்புக்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.ஆப்கானிஸ்தானில் அனைத்து மக்களின் விருப்பத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும், நாட்டில் உள்ள முக்கிய இன-அரசியல் சக்திகள் உட்பட அவர்களின் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடமிருந்தும் பிரதிநிதித்துவம் கொண்ட ஒரு திறந்த, உண்மையிலேயே அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். அந்நாட்டில் வெற்றிகரமான தேசிய நல்லிணக்கச் செயல்முறைக்கு சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் நிர்வாக மற்றும் அரசியல் கட்டமைப்பில் இணைத்துக்கொள்வது இன்றியமையாததாகும் என்று வலியுறுத்தினர்.

*ஆப்கானிஸ்தான் தொடர்புடைய ஐ.நா தீர்மானங்களை நினைவுகூர்ந்த அவர்கள், ஆப்கானிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபைக்கு முக்கிய பங்கு உள்ளது என்றும் அந்நாட்டில் தொடர்ச்சியாக ஐ.நாவின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

*பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

*அவர்கள் ஆப்கானிஸ்தானில் மோசமடைந்து வரும் சமூக-பொருளாதார மற்றும் மனிதாபிமான சூழ்நிலை குறித்து கவலை தெரிவித்தனர். மேலும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் கோடிட்டுக் காட்டினார்கள்.*ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி நேரடியாகவும் உறுதியான முறையில் வழங்கப்பட வேண்டும் என்றும், ஆப்கானிஸ்தான் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் பாரபட்சமற்ற முறையில் அந்நாட்டிற்குள் உதவிகள் விநியோகிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

*கோவிட்-19 பரவுவதைத் தடுக்க ஆப்கானிஸ்தானுக்கு உதவி வழங்குவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் தங்கள் உரையாடலின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியதுடன், எதிர்காலத்தில் ஒருவருக்கொருவர் உதவியாக உறுதியாக இருக்க ஒப்புக்கொண்டனர். மேலும், அடுத்த சுற்று சந்திப்பை 2022ல் நடத்த ஒப்புக்கொண்டனர்.

2018ல் ஆப்கானிஸ்தானில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெற அமெரிக்கா முடிவு செய்தபோது, ​​அத்தகைய உரையாடலின் யோசனை முதலில் முன்வைக்கப்பட்டது.

2018ம் ஆண்டு செப்டம்பரில், ஆப்கானிஸ்தான், ஈரான், ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் பங்கேற்புடன் ஈரானில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் முதல் கூட்டம் நடந்தது. டிசம்பர் 2019ல் ஈரானால் மீண்டும் நடத்தப்பட்ட தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களின் இரண்டாவது கூட்டத்தில், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய புதிய பங்கேற்பாளர்களுடன் 7 நாடுகள் கலந்து கொண்டன.

இதில் எந்த ஒரு கூட்டத்திலும் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை. உண்மையில், இஸ்லாமாபாத் – அல்லது ராவல்பிண்டி – இந்தியா கலந்து கொண்டால், அவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று ஈரானுக்கு முன்கூட்டியே ஒரு முன்நிபந்தனையை வைத்ததாக ஆதாரங்கள் தெரிவித்தன. ஆனால், அதற்கு தெஹ்ரான் அடிபணியவில்லை.

இம்முறையும் பாகிஸ்தான் இந்த சந்திப்பை புறக்கணிக்க முடிவு செய்தது. கடந்த வாரம், பாக்கிஸ்தானின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கூறியிருந்தார். மேலும் “ஒரு கெட்டவர் ஒரு சமாதானத்தை உருவாக்குபவராக இருக்க முடியாது” – இது இந்தியாவைப் பற்றிய வெளிப்படையான குறிப்பு என்று கூறப்படுகிறது.

ஈரானில் நடந்த முந்தைய இரண்டு கூட்டங்களிலும் சீனா கலந்து கொண்டது. ஆனால், இந்த முறை அது திட்டமிடல் சிக்கல்களை மேற்கோள் காட்டியுள்ளது. இருதரப்பு அல்லது பலதரப்பு வழிகள் மூலம் ஆப்கானிஸ்தானில் இந்தியாவுடன் தொடர்புகளைப் பேணுவதற்குத் தயாராக இருப்பதாக பெய்ஜிங் புதுடெல்லியிடம் கூறியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Delhi declaration afghan territory must not be used for terrorism india 7 other countries affirm

Next Story
பரபரப்பு திருப்பம்; ஒத்துக் கொண்ட டிடிவி தினகரன்….அடுத்து என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com