டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை என்றாலும், பல காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவின் தோல்விக்கு மகிழ்ச்சி தெரிவித்துவருகின்றனர். முன்னாள் குடியரசுத் தலைவரின் மகளும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளருமான சர்மிஸ்தா முகர்ஜி காங்கிரஸ் கட்சியை நோக்கி உறத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், வெற்றுப் பேச்சுகளும் சலசலப்புகளும் தோல்வியடைந்தது. ஆம் ஆத்மி கட்சி வென்றது என்று குறிப்பிட்டிருந்தார். இதனால், சர்மிஸ்தா முகர்ஜி, மாநில கட்சிகளைவிட்டுவிட்டு பாஜகவை மட்டும் கேள்வி கேட்பதை செயல்திட்டமாக வைத்துள்ளதா காங்கிரஸ் என்று முன்னாள் நிதியமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஆம் ஆத்மி கட்சி வென்றது, வெற்றுப் பேச்சுகளும் சலசலப்புகளும் தோற்றது. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் உள்ள டெல்லி மக்கள் பாஜகவின் பிளவுபடுத்துதலையும் எதிர்நிலையாக்குவதையும் அதன் ஆபத்தான நிகழ்ச்சி நிரலை தோற்கடித்துள்ளனர்” என்று அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் ப.சிதம்பரம் செவ்வாய்க்கிழமை டுவிட் செய்திருந்தார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் ஒரு இடங்களில்கூட வெற்றி பெறவில்லை. 2015-ம் ஆண்டு டெல்லி தேர்தலில் 9.65% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி இந்தமூறை அதன் வாக்கு சதவீதம் 4.26% ஆக சரிந்தது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட 66 வேட்ப்பாளர்களில் 63 பேர் தங்களுடைய வைப்புத்தொகையை (deposit) இழந்தனர்.
With due respect sir, just want to know- has @INCIndia outsourced the task of defeating BJP to state parties? If not, then why r we gloating over AAP victory rather than being concerned abt our drubbing? And if ‘yes’, then we (PCCs) might as well close shop! https://t.co/Zw3KJIfsRx
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) February 11, 2020
இதனால், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சர்மிஸ்தா முகர்ஜி, “மாநில கட்சிகளை விட்டுவிட்டு பாஜகவை தோற்கடிப்பதை காங்கிரஸ் கட்சி செயல்திட்டமாக கொண்டுள்ளதா? அப்படி இல்லையென்றால், நாம் ஏன் ஆம் அத்மி கட்சியின் வெற்றியைப் பற்றி மகிழ்ச்சியடைகிறோம். ஆம் என்றால் நாம் மாநில காங்கிரஸ் கமிடிட்டி கடைகளை மூடிவிடலாம்?” என்று ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த ப.சிதம்பரத்தின் டுவிட்டுக்கு பதிலளித்துள்ளார்.
சர்மிஸ்தா முகர்ஜி செவ்வாய்க்கிழமை தனது டுவிட்டரில், “நாம் மீண்டும் டெல்லியில் தோற்றுவிட்டோம். இப்போது போதுமான சுயபரிசோதனையும் நடவடிக்கை எடுப்பதற்கான நேரம். தலைமையில் முடிவெடுப்பதில் தாமதம், வியூகங்களில் குறைப்பாடு, கட்சியில், மாநில அளவில் ஒற்றுமையில் குறைபாடு, தொண்டர்களை உற்சாகம் இழக்கச் செய்துவிட்டது. கட்சி அடிமட்டம் வரை இணைக்கப்படவில்லை. இது எல்லாம் தான் காரணம். இந்த அமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதால் நானும் இதில் எனது பொறுப்பை ஏறுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய பல காங்கிரஸ் தலைவர்கள், மத்திய அளவில், தலைமைப் பிரச்சினையை தீர்க்கும்போதுதான் கட்சி புத்துயிர் பெறும் என்று நம்பலாம். பிளவுபடுத்தும் பிரச்சினைகள் குறித்து நடைமுறை ரீதியான, நுணுக்கமான நிலைப்பாடுகளை எடுத்து, வழக்கமான அடிப்படையில் வேலையின்மை போன்ற வாழ்வாதார பிரச்சினைகளில் வீதிகளில் இறங்கி போராட வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.