Advertisment

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு: ஆம் ஆத்மி கட்சியை ஏன் வழக்கில் சேர்க்கவில்லை?- நீதிபதி

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், குற்றத்தின் மூலம் வருமானம் பெற்றதாகக் கூறப்படும் அரசியல் கட்சியை ஏன் வழக்கில் சேர்க்கவில்லை, குற்றம் சாட்டப்படவில்லை என உச்ச நீதிமன்றம் கேள்வி

author-image
WebDesk
New Update
Sisodia.jpg

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், குற்றத்தின் மூலம் வருமானம் பெற்றதாகக் கூறப்படும் அரசியல் கட்சியை ஏன் வழக்கில் சேர்க்கவில்லை, குற்றம் சாட்டப்படவில்லை என உச்ச நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) கேள்வி எழுப்பியது.  டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கை அமலாக்கத் துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை நடத்தி வரும் நிலையில் உச்ச நீதிமன்றம் வழக்கில் விசாரணையின் போது கேள்வி எழுப்பியது. 

Advertisment

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு அளித்தார். இந்த மனு நேற்று இரண்டு நீதிபதிகள் அமர்வு  சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என் பாட்டீ ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "PMLA (பணமோசடி தடுப்புச் சட்டத்தின்) உங்கள் வழக்கைப் பொறுத்த வரையில் முழு வழக்கும் அரசியல் கட்சிக்கு சென்றது. அந்த அரசியல் கட்சி இன்னும் வழக்கில் குற்றம் சாட்டப்படவில்லை. இதற்கு எப்படி பதில் சொல்வது? அவர் பயனாளி அல்ல, அரசியல் கட்சிதான் பலன் பெற்றுள்ளது” என்று நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறினார்.  மனீஷ் சிசோடியா  பிப்ரவரி 26 அன்று கைது செய்யப்பட்டார்.

இ.டி, சி.பி.ஐ தரப்பில்  ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜுவிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.  இந்த வழக்கை நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரிக்கும் போது கேள்விக்கு பதிலளிப்பதாக ஏஎஸ்ஜி கூறினார். 

மேலும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் நீதிமன்றம் தரையிட முடியாது என்று சட்டப் பாதுகாப்பு உள்ளதைப் போன்று இந்த வழக்கில் டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் அதன் அமைச்சரவைக் கோப்புகளின் முடிவுகளுக்கும் இதே சட்டப் பாதுகாப்பு உள்ளதா என்பதையும் விளக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். 

https://indianexpress.com/article/cities/delhi/why-has-party-that-got-proceeds-of-crime-not-been-made-accused-in-excise-case-sc-asks-cbi-ed-8968918/

சிசோடியா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி, சிசோடியாவை இணை குற்றவாளியான விஜய் நாயருடன் இணைக்க முயற்சிப்பதற்கும், "தெளிவற்ற அறிக்கைகளை" ஏஜென்சிகள் நம்பியிருப்பதாகவும், ஆனால் "குறிப்பிட்ட குற்றச்சாட்டு எதுவும் இல்லை" மற்றும் "பணத் தடம் இல்லை" என்றும் கூறினார்.

“விஜய் நாயர் சிசோடியாவின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் எனது முகவர் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. விசாரணையின் போது நிரூபிக்கப்பட வேண்டிய பல்வேறு தெளிவற்ற அறிக்கைகளை நம்பியிருக்கிறது... சிசோடியாவுக்கு எதிராக தனிப்பட்ட குற்றச்சாட்டு எதுவும் இல்லை. அவர் குற்றச் செயல்களுக்கு உதவினார் என்பது தெளிவற்ற குற்றச்சாட்டு. ஆனால் பண வரவு எதுவும் இல்லை” என்று சிங்வி வாதிட்டார்.

 

Delhi Aam Aadmi Party
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment