இந்தியத் தலைநகர் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் முடிவடைந்தது. இந்த தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு வரும் 11ம் தேதியன்று வெளியிடப்படும். 2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள ஏழு இடங்களையும் கைபற்றியது.பாஜக 50 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது.
டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2020:
2020 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெரும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலை 6.30 மணி முதல் தேர்தலுக்கு பின் நடத்தபப்ட்ட கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. ஆம் ஆத்மி கட்சி 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸ்- எக்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பு:
இந்தியா நியூஸ்- எக்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில்
ஆம் ஆத்மி: 53-57 இடங்கள்
பாஜக: 11-17
காங்கிரஸ்: 0-2 இடங்கள்
டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக்கணிப்பு
டைம்ஸ் நவ்-ஐபிஎஸ்ஓஎஸ் ஆம் ஆத்மி கட்சி கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் குறைந்த இடங்களையே பிடிக்கும் என்று கூறியுள்ளது.
ஆம் ஆத்மி : 44
பாஜக: 26
காங்கிரஸ்: 0

ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக் கணிப்பு:
ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக் கணிப்பின்படி, கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு 48-61 இடங்கள் கிடைத்துள்ளன. இந்த வாக்கெடுப்பு பாஜகவுக்கு 9-21 இடங்களை கணித்துள்ளது.
ஆம் ஆத்மி : 48-61
பாஜக: 9-21
காங்கிரஸ்: 0-1
டிவி -9 நடத்திய கருத்துக்கணிப்பு :
டிவி -9 பரத்வர்ஷ்-சிசரோ ஆம் ஆத்மி கட்சிக்கு 54 இடங்களையும், பாஜகவுக்கு 15 இடங்களையும் கணித்துள்ளது.
முடிவுகள் :
ஆம் ஆத்மி : 54
பாஜக: 15
காங்கிரஸ்: 1