scorecardresearch

டெல்லி விவசாயிகள் போராட்டம் : சிங்கு எல்லையில் இணைந்த தமிழகம், மகாராஷ்டிரா

வேளாண் சட்டங்களுக்கு எதிராகடெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டம் : சிங்கு எல்லையில் இணைந்த தமிழகம், மகாராஷ்டிரா

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 30-வது நாளாக நடைபெறும் இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று சிங்கு எல்லையில் நடைபெற்ற, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகள் ஒற்றுமையின் நிகழ்ச்சியில்  பஞ்சாபின் ஃபெரோஸ்பூரைச் சேர்ந்த காஷ்மீர் சிங் மற்றும் தமிழ்நாட்டின் திருவள்ளூரைச் சேர்ந்த ஜே.அருள் ஆகிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது இவர்கள், பேசிய பேச்சு புரியவில்லை என்றாலும், அவர்கள் பரிமாறிக்கொண்ட புன்னகை  ஒரு பரந்த  நட்பை உருவாக்கும் விதமாக இருந்தது.

இது குறித்து அகில இந்திய கிசான் சபையில் (எய்கேஎஸ்) மாநில குழு உறுப்பினர் அருள் கூறுகையில், பஞ்சாப் மற்றும் அரியானாவைச் சேர்ந்த எங்கள் விவசாய சகோதரர்களுக்கு ஆதரவை தெரிவிப்பதற்காக தமிழ்நாட்டில் உறுப்பினர்களாக உள்ள 25 பேர் கடந்த புதன்கிழமை டெல்லியை வந்தடைந்தோம் என்று தெரிவித்தார். மேலும் போராட்டகார்ர்களிடம் தமிழில் உரையாடிய அருள், இந்த பேச்சு போராட்டகாரர்களின் பாராட்டை பெற்றது என தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்று கூறியுள்ளார். தொடர்ந்து  இந்த போராட்டத்திற்கு மொழி ஒரு தடை இல்லை என்று குறிப்பிட்டுள்ள பி பாலாஜி (26)  என்பவர், “கூகிள் மொழிபெயர்ப்பு மூலம் நாங்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடிகிறது” கூறியுள்ளார். இவரது பெற்றோர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நாசிக் நகரிலிருந்து மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுமார் 2,000 விவசாயிகள் புறப்பட்ட சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று போராட்டகாரர்களுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. .

இதற்கிடையில், மகாராஷ்டிராவின் ராம்தேக் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியரான திகம்பர் திவதே (44), கூறுகையில், நாங்கள் புதன்கிழமை சிங்குவை அடைந்தோம். “அரசாங்கம் விவசாயிகளை அடக்க முயற்சிக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த போராட்டத்தில், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிற்சங்கங்களைத் தவிர, குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த துமுல் கட்டாரா (47), அகில இந்திய ஜனநாயக இளைஞர் அமைப்பில் உறுப்பினர்கள, மற்றும் அகில இந்திய ஜனநாயக மாணவர்களின் உறுப்பினர் ஸ்ரீராம் சென் (24) மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த குணா, ஆகியோர் இந்த போராட்டத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த போராட்டம் குறித்து  அகில இந்திய ஜனநாயக மாணவர்களின் உறுப்பினர் ஸ்ரீராம் சென், தனது பெற்றோர் விவசாயிகள் என்றும், தான் டிசம்பர் 8 முதல் சிங்கு எல்லையில் போராட்டகாரர்களுடன் இருப்பதாகவும் கூறிய அவர், “விவசாயிகள் இங்கு இருக்கும் வரை நான் இங்குதான் இருப்பேன்.”என்று அவர் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Delhi farmer protest tamil nadu maharashtra join border singh