டெல்லி ரோகினி நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பத்தில் கைது செய்யப்பட்ட பிரபல கேங்ஸ்டர் சுனில் பால்யன் என்ற தில்லு தாஜ்பூரியா நேற்று (மே 2) டெல்லி திகார் சிறையில் கோஷ்டி மோதலில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், தில்லு சிறையில் இருந்தாலும் வெளியில் ஒரு கோஷ்டியை வழி நடத்தி பல குற்றங்களை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் டெல்லியில் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரான சுனில் பால்யன் என்ற தில்லு தாஜ்பூரியா டெல்லி-என்சிஆரில் தனது அதிகாரத்தை உறுதி செய்வதற்காக கொலை, கொள்ளை ஆட்கடத்தில் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற பல குற்ற செயல்களில் ஈடுபடும் வகையில் தனது ஆட்களை வழிநடத்தியதாகக் கூறப்படுகிறது. இவர் கடந்த 2016 ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தாலும் அவரது குற்றச் செயல்கள் தொடர்ந்துகொண்டிருந்தது.
இந்நிலையில், டெல்லி திகார் சிறையில் இருந்து அவர் தனது பரம எதிரியான கேங்க்ஸ்டர் கோகி என்ற ஜிதேந்தர் மானை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு ரோகினி நீதிமன்றத்தில் வழங்கறிஞர்கள் போல் வேடமிட்டு சென்ற தில்லுவின் ஆட்கள், கோகியை சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது,
புறநகர் டெல்லியில் உள்ள தாஜ்பூர் கலான் கிராமத்தைச் சேர்ந்த தில்லு. தனது டீன் ஏஜ் பருவத்தை அகடாஸில் மல்யுத்தம் கற்றுக்கொண்டார். குற்ற செயல்களில் ஈடுபட்டது மற்றும் கோகியுடன் அவரது மோதல் இவை அனைத்தும் அவரது கல்லூரியில் தொடங்கியது.
தில்லுவும் கோகியும் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்ததாகவும், அவர்கள் படித்த டெல்லி பல்கலைக்கழகத்தின் சுவாமி ஷ்ரத்-ஆனந்த் கல்லூரியில் நடந்த மாணவர் சங்கத் தேர்தல்கள் இருவரும் வெவ்வேறு வேட்பாளர்களை ஆதரித்ததால் இருவருக்கும் இடையே மோதல் தொடங்கியதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தேர்தலின் போது இரு குழுக்களும் சண்டையிட்டுக் கொண்டதால், தில்லுவும் அவரது கூட்டாளிகளும் இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது, இதுவே கும்பலின் முதல் வழக்கு என்றும் போலீசார் தெரிவித்தனர்.
2013 முதல், இரண்டு பேரும் அவர்களது கும்பல்களும் அடுத்த ஆண்டுகளில் ஒருவரையொருவர் குறிவைத்து, தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களின் போட்டி பல கோஷ்டி மோதல்களளுக்கு வழிவகுத்த நிலையில், இந்த மோதல்கள் காரணமாக 22 க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
கோகியின் உறவினர் தில்லுவின் நெருங்கிய கூட்டாளியான தீபக்குடன் உறவில் இருந்ததாலும் போட்டி ஏற்பட்டது. கோகி மற்றும் அவரது கும்பல் 2015 இல் தீபக்கைக் கொன்றது, இது தில்லுவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில், அதே ஆண்டு கோகியின் கூட்டாளி அருண் கமாண்டோவை தில்லு கும்பல் கொன்றது,” ஒரு வருடம் கழித்து, இந்த வழக்கில் தில்லு கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் “இது குற்ற உலகில் தில்லுவின் இமேஜை உயர்த்தியது. அவரது சிண்டிகேட் பெரிதாக வளர்ந்தது.
அதனைத் தொடர்ந்து அவரும் அவரது கும்பலும் கோகியின் கும்பல் உறுப்பினர்களைக் கொன்று, சொத்து வியாபாரிகளை மிரட்டி பணம் பறிந்து வந்ததால் மக்கள் அவர்களை பார்த்து பயந்தனர், இதன் மூலம் 14க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர் என்றும், நீரஜ் பவானா, சுனில் பாலி, சீனு போன்ற குண்டர்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர். சிறப்பு பிரிவு அவர் மீது MCOCA இன் கீழ் பதிவு செய்தது.
இது குறித்து அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர் "தூண்டுதல் மகிழ்ச்சியான" ஆளுமை கொண்டவர் மற்றும் பொது இடங்களில் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. அவருக்கு பெற்றோர் மற்றும் மூன்று உடன்பிறப்புகள் உள்ளனர். அவரது தந்தை எம்சிடியில் எழுத்தராக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். அவரது சகோதரர்களில் ஒருவர் டிடிசி டிரைவராக இருந்தார், ஆனால் தில்லுவின் செயல்பாடுகளால் வேலையை இழந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.