நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா மற்றும் விகாஸ் மகாஜன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒமர் அப்துல்லாவுக்கு விவாகரத்து வழங்க மறுத்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஒமர் அப்துல்லா, அவரது மனைவி பாயல் நாத் அப்துல்லாவும் பிரிந்து வாழ்கிறார்கள்.
இந்த நிலையில் ஒமர் அப்துல்லா விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து, ஒமர் அப்துல்லா மேல்முறையீடு மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது, “பிரிந்து வாழும் மனைவி பாயல் நாத் அப்துல்லா தன்னை கொடுமைப்படுத்தியதாக ஒமர் அப்துல்லா கூறியிருந்தார்.
இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்து விவாகரத்து கோரும் மனுவை நிராகரித்துவிட்டது. முன்னதாக, 2016ஆம் ஆண்டு விவகாரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் அப்துல்லா தாக்கல் செய்திருந்த மனுவை குடும்ப நல நீதிமன்றம் ஆகஸ்ட் 30ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், விவாகரத்து ஆணையை வழங்குவதற்கு அவர் கூறிய காரணங்களான "கொடுமை" என்ற அவரது கூற்றுகளை அப்துல்லாவால் நிரூபிக்க முடியவில்லை என்று விசாரணை நீதிமன்றம் கூறியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“