Advertisment

மோடியை பிக் பாக்கெட் என விமர்சித்த ராகுல்; நோட்டீஸ் அனுப்ப முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நவம்பர் 23-ம் தேதி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகக் கூறினார். அதில், “நவம்பர் 25-ம் தேதி 1800 மணி நேரத்திற்குள் பதில் வரவில்லை என்றால், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Rahul Gandhi

மோடியை பிக் பாக்கெட் என விமர்சித்த ராகுல்; நோட்டீஸ் அனுப்ப முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நவம்பர் 23-ம் தேதி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகக் கூறினார். அதில், “நவம்பர் 25-ம் தேதி 1800 மணி நேரத்திற்குள் பதில் வரவில்லை என்றால், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Advertisment

பிரதமர் நரேந்திர மோடியை ஒரு பிக்பாக்கெட் என்று அழைத்ததாகக் கூறப்படும் பேச்சு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பிய நோட்டீஸ் மீது 8 வாரங்களில் விரைவாக முடிவெடுக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ஆங்கிலத்தில் படிக்க: Decide expeditiously on notice to Rahul Gandhi over ‘pickpocket’ speech targeting PM: HC to Election Commission

பிரதமர் மோடிக்கு எதிராக பரபரப்பான பேச்சுகளை பேசியதற்காக காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாரதி நாகர் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அதில், ஒரு சட்டம் அல்லது கொள்கை நடைமுறைக்கு வரும் வரை, தேர்தல்களின் போது முடிவில் செல்வாக்கு செலுத்துவதற்காக பேசப்படும் தவறான மற்றும் அவதூறான பேச்சுகள் தொடர்பான விஷயங்களைத் தீர்ப்பதற்கான ஒரு பயனுள்ள வழிமுறையை வழங்கும் வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என வாதிடப்பட்டது. 

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நவம்பர் 23-ம் தேதி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகக் கூறினார். அதில், “நவம்பர் 25-ம் தேதி 1800 மணி நேரத்திற்குள் பதில் வரவில்லை என்றால், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதையடுத்து, டெல்லி உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மினி புஷ்கர்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, “பதிலைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்துவிட்டதால், எந்தப் பதிலும் வரவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தை முடிந்தவரை விரைவாக, 8 வாரங்களுக்குள் முடிவெடுக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே கைப்பற்றியிருக்கும் இந்த விவகாரத்தைப் பற்றி  குறிப்பிடுகையில், நீதிபதிகள் அமர்வு வாய்மொழியாக, “தேர்தலில், மக்கள் முடிவுகளைத் தருகிறார்கள். இறுதியில் மக்களின் அறிவில் நம்பிக்கை வைப்போம். அவர்கள் எல்லாவற்றையும் கேட்கிறார்கள்; அவர்கள் முடிவெடுக்கிறார்கள், இந்த விஷயத்தில் ஒரு பார்வையை வழங்குகிறார்கள்… அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகக் இந்திய தேர்தல் ஆணையம் கூறுகிறது. அவர்கள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று பார்ப்போம். இந்திய ஒன்றியம் நிறுத்தப்படவில்லை. அவர்களுக்கு நாங்கள் தேவையில்லை, அவர்கள் விரும்பினால் வழிகாட்டுதல்களை உருவாக்கலாம்.” என்று கூறியது.

நீதிமன்றத்தால் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டபோது, ​​ “குறிப்பிட்ட முறையில் விஷயங்களை முடிவு செய்ய நாடாளுமன்றம் சொல்கிறதா? நாம் அனைவரும் இறையாண்மை கொண்டவர்கள்.” என்று குறிப்பிட்டுள்ளது.

பாரதி நாகர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஆதிஷ் சி அகர்வாலா மற்றும் கிர்த்தி உப்பல் ஆகியோர், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க சில வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

“இவை நிறுத்தப்பட வேண்டிய விஷயங்கள். நாட்டின் பிம்பம் வித்தியாசமானது” என்று உப்பல் சமர்ப்பித்தார். அகர்வாலா மேலும் கூறுகையில், மற்றொரு விஷயத்தில் ராகுல் காந்தி எதிர்காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது என்று கூறினார்.

மாற்றாக, ராகுல் காந்தி தனது அறிக்கைகள் மற்றும் உரையில் கூறப்பட்ட பிற கருத்துகளில் உள்ள உண்மையை நிரூபிக்க பிரதமருக்கு எதிரான ஆதாரத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது. ராகுல் காந்தியின் அறிக்கைகளின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்யவும், ஐ.பி.சி மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யவும் மனுவில் கோரப்பட்டது. மேலும், அந்த மனுவில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தலைமை தேர்தல் ஆணையரை கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், இந்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் ஷர்மா, பேசுவது தொடர்கிறது அது குறையவில்லை என்பதுதான் பெரிய பிரச்சினை என்று கூறினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment