scorecardresearch

உத்தவ் தாக்கரே மீது அவதூறு வழக்கு.. டெல்லி உயர் நீதிமன்றம் சம்மன்

சிவசேனா சின்னத்தை ஷிண்டே அணியினர் ரூ.2,000 கோடிக்கு வாங்கியதாக கூறிய உத்தவ் தாக்கரே, ஆதித்யா மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோர் மீது சிவசேனா (ஷிண்டே) தலைவர் ராகுல் ஷெவாலே வழக்கு தொடர்ந்துள்ளார்.

Delhi HC summons Uddhav Thackeray Aaditya Sanjay Raut in defamation case
மராட்டிய முன்னாள் முதல் அமைச்சர் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரமுகர் ராகுல் ஷெவாலே உத்தவ் தாக்கரே, ஆதித்யா மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோர் மீது அவதூறு வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில், சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, அக்கட்சியின் எம்எல்ஏ ஆதித்யா தாக்கரே, எம்பி சஞ்சய் ராவத் ஆகியோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.

அவதூறு வழக்கில் ஷெவாலே, சிவசேனா சின்னத்தை ஷிண்டே பிரிவினர் ரூ.2,000 கோடிக்கு வாங்கியதாக உத்தவ், ஆதித்யா மற்றும் ராவத் ஆகியோர் கூறியிருந்தனர் எனக் கூறியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, இதுபோன்ற குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன என்று மூத்த வழக்கறிஞர் ராஜீவ் நாயர் கூறினார்.
இதற்கு பதிலளித்த நீதிமன்றம், “மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறதா இல்லையா என்பது கேள்வி அல்ல.
கேள்வி என்னவென்றால், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பிறரை அவமதிக்க உரிமை உண்டா? எனக் கேள்வியெழுப்பியது.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்திருந்த ஆதித்ய தாக்கரே, “தேர்தல் ஆணையம் முற்றிலும் சமரசம் செய்யப்பட்ட நிறுவனம்” என்று கூறியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Delhi hc summons uddhav thackeray aaditya sanjay raut in defamation case