/tamil-ie/media/media_files/uploads/2020/06/New-Project-2020-06-16T121842.170.jpg)
satyendar jain hospitalised, delhi health minister satyendar jain high fever sudden oxygen level drop, satyendar jain coronavirus, டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், சத்யேந்தர் ஜெயின் மருத்துவமனையில் அனுமதி, delhi news, delhi health minister, covid-19 tested, coronavirus, delhi health minister hospital, tamil indian express
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அதிக காய்ச்சல் மற்றும் திடீர் ஆக்ஸிஜன் அளவு குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று 3 லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. இதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் இருந்து மட்டும் 60% தொற்றுகள் பதிவாகி உள்ளன. இதனால், தலைநகர் டெல்லி கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் கண்டறியப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.
இந்த தொற்று நோய் பேரிடர் காலத்தில் கொரோனா வைரஸ் தொற்று, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், எம்.எல்.ஏ-க்கள் என அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு அதிக காய்ச்சல் மற்றும் திடீரென ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் அவர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்யேந்தர் ஜெயினுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.
இது குறித்து சத்யேந்தர் ஜெயின் டுவிட்டரில், “அதிக காய்ச்சல் மற்றும் திடீரென ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் நேற்று இரவு நான் டெல்லி ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் அனைவரும் தொடர்பில் இருங்கள் தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
अपनी सेहत का ख़्याल किए बिना आप रात दिन 24 घंटे जनता की सेवा में लगे रहे। अपना ख़्याल रखें और जल्द स्वस्थ हों। https://t.co/pmsU5fuuRP
— Arvind Kejriwal (@ArvindKejriwal) June 16, 2020
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தரின் டுவிட்டுக்கு பதிலளித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “உங்களுடைய பாதுகாப்பில்கூட அக்கறை காட்டாமல் நீங்கள் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு சேவை செய்தீர்கள். தயவு செய்து உங்களுடைய உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். விரைவில் குணமடைவீர்கள்” என்று டுவிட் செய்துள்ளார்.
அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் திங்கள்கிழமை 2 உயர் மட்ட கூட்டங்களை நடத்தினார். முதலில், அவர் சுகாதாரத் துறை அதிகாரிகள், சுகாதாரப் பணிகள் பொது இயக்குனர், தலைமை மாவட்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் டெல்லி அரசின் கோவிட் மருத்துவமனைகளின் மருத்துவ இயக்குநர்களுடன் ஒரு மறுஆய்வுக் கூட்டத்தை மேற்கொண்டார். அடுத்து, அவர் தற்காலிக மருத்துவமனைகள் தொடர்பாக தனியார் மருத்துவமனைகளின் தலைவர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களின் கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார்.
முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 9-ம் தேதி அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருப்பதாகக் கூறியதை அடுத்து, அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று தெரியவந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.