குழாயைப் பயன்படுத்தி கார்களைக் கழுவுதல் அல்லது தண்ணீர் தொட்டிகள் நிரம்பி வழிவதால், அதிகப்படியான தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று டெல்லி நீர் அமைச்சர் அதிஷி செவ்வாயன்று கூறினார். டெல்லி தொடர்ந்து கடுமையான வெப்ப அலைகளை சந்தித்தாலும், சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை சில நேரங்களில் 49.9 டிகிரி செல்சியஸ் வரை உயரும்.
ஆங்கிலத்தில் படிக்க: Heat nears 50°C, water crisis hits Delhi; Govt warns against wastage
மே 1-ம் தேதி முதல் ஹரியானா டெல்லிக்கு தர வேண்டிய தண்ணீரை விடுவிக்கவில்லை என்றும் டெல்லி அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டினார். மேலும், பிரச்சினை விரைவில் தீர்க்கப்படாவிட்டால், டெல்லி உச்ச நீதிமன்றத்துக்கு செல்லும் என்றும் கூறினார்.
டெல்லியில் அதிகரித்து வரும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தை நம்பியிருக்கும் நிலையில், டெல்லியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு அறிகுறி தெரிவதால், தண்ணீரை வீணாக்க வேண்டாம் என்று டெல்லி அமைச்சர் அதிஷி என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“இன்றும் தெற்கு டெல்லியின் பல குடியிருப்புப் பகுதிகளில், வாகனங்கள் கழுவப்படுவதால், மக்களின் வீடுகளுக்கு வெளியே ஓடுபாதைகளில் தண்ணீர் ஓடுவதைக் கண்டேன். இப்படி தண்ணீரை வீணாக்கி வாகனங்களை கழுவ வேண்டாம் என்பது அனைவருக்கும் எனது வேண்டுகோள். இந்த பொது வேண்டுகோள் இன்னும் ஓரிரு நாட்களில் பலனளிக்கவில்லை என்றால், அதிகப்படியான தண்ணீரைப் பயன்படுத்தினால், நாம் அபராதம் விதிக்க வேண்டியிருக்கும். ஆனால், இப்போது நாங்கள் இந்த வேண்டுகோளை வெளியிடுகிறோம்” என்று அவர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
தேசிய தலைநகரின் பல்வேறு பகுதிகளில் நீர் விநியோகத்தை முறைப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. “தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனையை தீர்க்க, பல பகுதிகளில் ஒரு நாளைக்கு இரண்டு முறை தண்ணீர் வழங்குவதை குறைப்பது போன்ற பல நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்... தற்போது ஒரு நாளைக்கு இரண்டு முறை தண்ணீர் கிடைக்கும் பகுதிகளில், இப்போது ஒரு நாளைக்கு ஒரு முறை கிடைக்கும்... இவ்வாறு சேமிக்கப்படும் தண்ணீர், ஒரு நாளைக்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு மட்டுமே தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும்” என்று அமைச்சர் அதிஷி கூறினார்.
டெல்லி, மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளைப் போலவே, வெப்ப அலையின் பிடியில் உள்ளது. முங்கேஷ்பூர் மற்றும் நரேலாவில் உள்ள இரண்டு தானியங்கி வானிலை நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 49.9 டிகிரி செல்சியஸைத் தொடுகிறது. டெல்லி பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள ஆயா நகர் மற்றும் ரிட்ஜ் ஆகிய இடங்களில் உள்ள கையேடு கண்காணிப்பு நிலையங்களும், முறையே 47.6 டிகிரி செல்சியஸ் மற்றும் 47.5 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலைக்கான முந்தைய சாதனைகளை முறியடித்தன.
நகரின் அடிப்படை நிலையமான சஃப்தர்ஜங்கில், அதிகபட்ச வெப்பநிலை 45.8 டிகிரி செல்சியஸைத் தொட்டது. இந்த பருவத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச வெப்பநிலை மற்றும் மே 2020-க்குப் பிறகு, 46 டிகிரி செல்சியஸைத் தொட்டதில் இருந்து அதிகபட்ச வெப்பநிலையாக உள்ளது.
புதன் கிழமை அதிகபட்ச வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கனித்துள்ளது.
டெல்லியில் இன்று பெரும்பாலான இடங்களில் வெப்ப அலையும், சில இடங்களில் கடுமையான வெப்ப அலையும் காணப்பட்டது. டெல்லியில் இன்று பெரும்பாலான இடங்களில் வெப்ப அலையும், ஒரு சில இடங்களில் கடுமையான வெப்ப அலையும் காணப்பட்டது.
மக்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை தான் புரிந்து கொண்டதாக கூறிய அதிஷி, “நாம் நம்மை பற்றி மட்டும் சிந்திக்க கூடாது... ஒன்றாக இருந்து அனைவரையும் பற்றி சிந்திக்க வேண்டும்... இன்று, ஹரியானா அரசால் டெல்லிக்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும் மிகவும் கடினமான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்... தயவுசெய்து ஒத்துழைத்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்....” என்று தெரிவித்துள்ளார்.
மே 1-ம் தேதி முதல் தில்லிக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை ஹரியானா அரசாங்கம் விடுவிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், “வஜிராபாத்தில் யமுனை நீர்மட்டம் மே 1-ம் தேதி 674.5 அடியாக இருந்தது, அது இன்று 669.8 அடியாகக் குறைந்துள்ளது… சராசரி நீர்மட்டத்தை பராமரிக்க வேண்டும்… கடந்த ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில், குறைந்தபட்ச அளவு 674.6 அடியாக பராமரிக்கப்பட்டது. ஆனால் ஹரியானா டெல்லிக்கு போதுமான தண்ணீரை வெளியிடாதபோது, கச்சா நீரின் அளவு குறைகிறது மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் மெதுவாகின்றன.” என்று தெரிவித்துள்ளார்.
ஹரியானா அரசு இந்தப் பிரச்னையைத் தீர்த்து, தேசியத் தலைநகருக்குத் தேவையான தண்ணீரைத் திறந்துவிடாவிட்டால், டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்துக்கு செல்லும் என்று அதிஷி கூறினார்.
டெல்லியின் தண்ணீர் தேவையில் 64 சதவீதம் ஹரியானா வழியாகவும், 26.5 சதவீதம் உத்தரபிரதேசம் வழியாகவும் பூர்த்தி செய்யப்படுகிறது என சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-23 ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பின்படி, டெல்லியின் தண்ணீர் தேவை தினசரி 1,290 மில்லியன் கேலன் (MGD) ஆகும்.
டெல்லி குடிநீர் வாரியம், (டெல்லி ஜல் போர்டு) மே 24-ம் தேதி வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், 956 கேலன் (MGD) நிறுவப்பட்ட கொள்ளளவிற்கு (குழாய் கிணறுகள் மற்றும் ரன்னி கிணறுகளில் இருந்து அதிக பிரித்தெடுத்தல் மூலம்) நீர் உற்பத்தி 1,000 கேலனுக்கு (MGD) அருகில் உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறியது. இருப்பினும், தண்ணீர் பயன்பாடு கோடைகால அறிக்கைகள், மே 11 முதல், சராசரியாக 980 கேலனாக (MGD) உள்ளது என்பதைக் காட்டுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.