தலைநகர் டெல்லியில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் இடி மின்னலுடன் மழை பெய்ததில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாகியுள்ளது.
இந்திய வானிலை மையம் கூற்றுப்படி, திங்கள்கிழமை காலை 5.40 முதல் 7 மணி வரையிலான காலகட்டத்தில், டெல்லியில் மேற்பரப்பு வெப்பநிலை 11 டிகிரி குறைந்துள்ளது. அதாவது, 29 டிகிரி செல்சியஸாக இருந்த நிலையில், தற்போது 18 ஆக குறைந்துள்ளது.
சூறைகாற்றுடன் மழை பெய்தவதால், டெல்லியில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பயணிகள், விமான நிறுவனங்களை தொடர்ந்து தொடர்பு கொண்டு, விமானங்களின் வருகை பற்றிய தகவல்களை பெற்று கொள்ளும்படி டெல்லி விமான நிலையம் கேட்டு கொண்டுள்ளது.
பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மரங்கள் வேராடு சாய்ந்துள்ளதால், மின்சார பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் மழைநீர் சாலைகளில் ஓடிய நிலையில், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சற்று மெதுவாக சென்றன.
சூறைகாற்றுடன் மழை பெய்து வருவதால், வீட்டில் மின்சார சாதனங்களின் வயரை பிளக்கில் இருந்து எடுக்குமாறு, நீர் நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil