கத்துவா வன்கொடுமை வழக்கு: சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 6 மாதம் சிறை

காஷ்மீர் கத்துவா சிறுமி பாலியம் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 6 மாதம் சிறை தண்டனை என உத்தரவு.

Delhi-High-Court

காஷ்மீரில் மாநிலத்தில் கத்துவா என்ற பகுதியில் 8 வயது சிறுமியை 8 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர், பொதுமக்கள் என அனைவரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த மனிதநேயமற்ற குற்றத்தை செய்த 8 பேரும் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா ட்விட்டர் பக்கத்தில், “சிறுமிகள் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்குத் தூக்கு தண்டனை உறுதி செய்ய சட்டம் கொண்டு வரப்படும்” என்று தெரிவித்தார். இதனையொட்டி, பாஜக-வை சேர்ந்த 9 அமைச்சர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில் தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகத் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், கத்துவா பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி குறித்த அடையாளங்களை வெளிப்படுத்தினால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இவ்வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 25ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Delhi high court judgement 6 months jail if kathua rape victim identity revealed

Next Story
பிரம்மாண்டமாக நடந்தது லாலு மகனின் நிச்சயதார்த்தம்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X