Advertisment

பருவமடைந்த முஸ்லீம் பெண், பெற்றோர் சம்மதம் இன்றி திருமணம் செய்யலாம் – டெல்லி ஐகோர்ட்

முஸ்லீம் சட்டங்களின்படி பருவமடைந்த பெண் பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்து கொள்ளலாம்; மைனராக இருந்தாலும் கூட கணவருடன் வசிக்க உரிமை உண்டு - டெல்லி உயர் நீதிமன்றம்

author-image
WebDesk
New Update
பருவமடைந்த முஸ்லீம் பெண், பெற்றோர் சம்மதம் இன்றி திருமணம் செய்யலாம் – டெல்லி ஐகோர்ட்

On attaining puberty, Muslim girl can marry without parents’ consent: Delhi High Court: முஸ்லீம் சட்டங்களின்படி பருவமடைந்த பெண் "பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்து கொள்ளலாம்" என்றும், மைனராக இருந்தாலும் கூட கணவருடன் வசிக்க உரிமை உண்டு என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

Advertisment

பெண்ணின் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக மார்ச் 11 ஆம் தேதி முஸ்லிம் ஜோடி திருமணம் செய்துகொண்ட வழக்கில் நீதிபதி ஜஸ்மீத் சிங் இவ்வாறு குறிப்பிட்டார். அந்த ஆணுக்கு 25 வயது இருக்கும் நிலையில், அந்த பெண்ணின் குடும்பம் மற்றும் காவல்துறை கூறியபடி, மார்ச் மாதம் அந்த பெண்ணுக்கு 15 வயது. அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய ஆதார் அட்டையின்படி, அவருக்கு 19 வயதுக்கு மேல் இருக்கும்.

இதையும் படியுங்கள்: ஸ்டாலின் முதல் ராகுல் வரை; ஃபிட்னஸில் கலக்கும் அரசியல் தலைவர்கள்

“முகமதியச் சட்டத்தின்படி, பருவ வயதை அடைந்த பெண் தன் பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்து கொள்ளலாம் என்பதும், அவள் 18 வயதுக்குக் குறைவாக இருந்தாலும் கணவனுடன் வசிக்க உரிமை உண்டு என்பதும் தெளிவாகிறது, அதாவது மைனர் பெண்ணாக இருந்தாலும்,” என்று நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகஸ்ட் 17 தேதியிட்ட உத்தரவில் கூறினார், அதன் முழு நகல் திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டது.

விசாரணையின் போது, ​​பெஞ்ச் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற உத்தரவை எடுத்துக் கொண்டது, அதில் நீதிமன்றம் ‘சர் டின்ஷா பர்துன்ஜி முல்லாவின் முகமதிய சட்டத்தின் கோட்பாடுகள்’ என்ற புத்தகத்தை குறிப்பிட்டுள்ளது.

பெண் தானாகவே திருமணத்திற்கு சம்மதித்து மகிழ்ச்சியாக இருந்தால், அவரது தனிப்பட்ட இடத்தில் நுழைந்து தம்பதியரை பிரிக்க, அரசுக்கு இடமில்லை என்று நீதிபதி சிங் மேலும் கூறினார். “அதைச் செய்வது அரசு தனிப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பதற்குச் சமம்” என்று நீதிமன்றம் உத்தரவில் கூறியது.

போலீஸ் பாதுகாப்பு மற்றும் ஒருவரையொருவர் யாரும் பிரிக்காமல் இருக்க வழிகாட்டுதல் கோரி ஏப்ரல் மாதம் தம்பதியினர் நீதிமன்றத்தை அணுகினர். சிறுமியின் பெற்றோர் மார்ச் 5 ஆம் தேதி துவாரகா மாவட்டத்தில் மைனர் கடத்தப்பட்டதாகக் கூறி போலீஸில் வழக்குப் பதிவு செய்தனர். ஐ.பி.சி.,யின் பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் பிரிவு 6 (மோசமான ஊடுருவும் பாலியல் வன்கொடுமை) ஆகியவை பின்னர் வழக்கில் சேர்க்கப்பட்டன.

ஆனால், வீட்டில் பெற்றோரால் அடிக்கடி அடிக்கப்படுவதாகவும், வேறு ஒருவருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க முயன்றதாகவும் சிறுமி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 27 அன்று அந்த நபரின் காவலில் இருந்து சிறுமியை "மீட்ட" காவல்துறை, சிறுமியை குழந்தைகள் நலக் குழுவின் (CWC) முன் ஆஜர்படுத்தியது. CWCயின் வழிகாட்டுதலின் பேரில், அவர் ஹரி நகரில் உள்ள நிர்மல் சாயா வளாகத்தில் தங்க வைக்கப்பட்டார். சிறுமியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், அவரது சொந்த விருப்பம் மற்றும் சம்மதத்தின் பேரில் அந்த நபருடன் சென்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நீதிபதி ஜஸ்மீத் சிங், தனது உத்தரவில், போக்சோ என்பது 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகத்தில் இருந்து பாதுகாப்பதற்கான சட்டம் என்றும் அது முஸ்லிம் சட்டத்திற்கும் பொருந்தும் என்றும், ஆனால் முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பிலிருந்து இந்த வழக்கு வேறுபட்டது என்று கூறினார். அந்த வழக்கில், பாதிக்கப்பட்டவருக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே திருமணம் இல்லை என்றும், திருமணத்திற்கு முன்பே பாலியல் உறவு ஏற்படுத்தப்பட்டது என்றும் நீதிமன்றம் கூறியது. உடல் உறவை ஏற்படுத்திய பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் மனுதாரரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார், என அந்த வழக்கு பற்றி நீதிமன்றம் கூறியது.

"மறுபுறம், தற்போதைய வழக்கில், இது சுரண்டல் வழக்கு அல்ல, மனுதாரர்கள் காதலித்து, முஸ்லீம் சட்டங்களின்படி திருமணம் செய்து, அதன் பிறகு, உடல் உறவுகளை வைத்திருந்த வழக்கு" என்று நீதிமன்றம் கூறியது. மேலும், இருவரும் கணவன்-மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர், திருமணத்திற்கு முன்பு அவர்கள் உடலுறவு கொண்டதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை, என்றும் நீதிமன்றம் கூறியது.

மேலும், மனுதாரர்கள் ஒருவரையொருவர் சட்டப்படி திருமணம் செய்துகொள்வதை மறுக்க முடியாது என்றும், அது “திருமணத்தின் சாராம்சம்” என்றும், அவர்கள் பிரிந்தால், அது பெண்ணுக்கும் பிறக்காத குழந்தைக்கும் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் நீதிமன்றம் கூறியது. "தற்போதைய வழக்கில், மனுதாரர் எண்.1 (பெண்) வீட்டில் உள்ள சூழல் அவருக்கும் அவரது கணவருக்கும் விரோதமாக உள்ளது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்" என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை அனுமதித்து, தம்பதியினரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், சிறுமி தனது கணவருடன் சேர்ந்து வாழ சுதந்திரம் இருப்பதாகக் கூறியது. “மனுதாரர்கள் ஒன்றாக இருக்க உரிமை உண்டு மற்றும் பிரதிவாதி எண். 1 முதல் 3 வரை (டெல்லி அரசு மற்றும் காவல்துறை) மனுதாரர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று நீதிபதி ஜஸ்மீத் சிங் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Muslim
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment