scorecardresearch

டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 20 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

மொத்த ஆக்சிஜன் தேவையில் 40 சதவீதம் மட்டுமே கிடைக்கப் பெற்றது. குறிப்பாக, வெள்ளிக்கிழமை இரவு ஆக்சிஜன் விநியோகம் 8 மணி நேரம் வரை தாமதமானது.

டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 20 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

India News in Tamil : டெல்லியில் மருத்துவமனை ஒன்றில், கொரோனா சிகிச்சைப் பெற்று வந்த 20 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில், கொரோனா நோயாளிகள் 20 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர். நேற்று இரவு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர். இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.டி.கே. பலூஜா இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசினார்.

‘தற்போது இறந்துள்ள நோயாளிகள் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்தனர். அவர்கள் சிகிச்சையில் இருக்கும் போது, ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவியது. கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் சாதாரண நிலையில் இருப்போர், ஆக்சிஜன் ஏற்ற இறக்கத்தை சமாளித்த் உயிர் வாழ முயற்சித்திருப்பர். இவர்கள் 20 பேரும் மிக மோசமான நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததால், அவர்களால் தப்பி பிழைக்க இயலவில்லை’ என்றார்.

மேலும், மருத்துவமனையின், மொத்த ஆக்சிஜன் தேவையில் 40 சதவீதம் மட்டுமே கிடைக்கப் பெற்றது. குறிப்பாக, வெள்ளிக்கிழமை இரவு ஆக்சிஜன் விநியோகம் 8 மணி நேரம் வரை தாமதமானது. இந்த சூழலில், மேலும் 215 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் முதல் டெல்லியில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாக அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த சம்பவம் நடைபெற்றுள்ள கோல்டன் மருத்துவமனையும் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்த தகவலை அரசுக்கு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Delhi jaipur golden hospital covid patients oxygen supply shortage tamil

Best of Express