‘அரசியல் விளம்பரங்களுக்காக’ ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து 97 கோடி ரூபாயை வசூலிக்க டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா உத்தரவிட்ட நிலையில், உத்தரவிட அவருக்கு அதிகாரம் இல்லை’ என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, அரசு விளம்பரங்களில் உள்ளடக்க ஒழுங்குமுறைக்கான உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் (சி.சி.ஆர்.ஜி.ஏ) பரிந்துரைகளை அமல்படுத்துமாறு டெல்லி தலைமைச் செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, அரசியல் விளம்பரங்களை அரசு விளம்பரமாக வெளியிட்டதாக ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ரூ. 97 கோடியை திரும்பப் பெறுமாறு
டெல்லி தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்ட நிலையில், துணைநிலை ஆளுநரிடம் “எந்தத் ஆதாரமும் இல்லை” என்றும், பா.ஜ.க சொல்வதைப் போல ஆடுகிறார் என்றும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி தேசியக் கட்சியாக மாறிவிட்டது… பா.ஜ.க-வும் துணை நிலை ஆளுநரும் கடுமையாக முயற்சி செய்யலாம், ஆனால் ஆம் ஆத்மி தலை நிமிர்ந்து நிற்கும். டெல்லியில் நடக்கும் நல்ல பணிகளை யாராலும் தடுக்க முடியாது என்று ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ சவுரப் பரத்வாஜ் கூறினார். “துணைநிலை ஆளுநர் அத்தகைய உத்தரவுகளை பிறப்பிக்க அதிகாரம் இல்லை. பா.ஜ.க-வின் வழிகாட்டுதலைப் பின்பற்றி அவர் டெல்லி மக்களுக்கு பிரச்சனையை உருவாக்க முயற்சிக்கிறார். பணிகளை நிறுத்த முயற்சிக்கிறார்.” ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ சவுரப் பரத்வாஜ் என்று கூறினார்.
அரசு விளம்பரங்களில் உள்ளடக்க ஒழுங்குமுறைக்கான உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் (சி.சி.ஆர்.ஜி.ஏ) பரிந்துரைகளை அமல்படுத்துமாறு டெல்லி அரசின் தலைமைச் செயலாளரை துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா கேட்டுக் கொண்டார்.
அதிகாரிகளின் கருத்துவப்படி, முன்னாள் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் இதேபோன்ற ஆட்சேபனைகளை எழுப்பினார். ஆம் ஆத்மி கட்சி அரசாங்கம் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி கட்சி வெளியிட்ட விளம்பரங்களுக்கு பணம் செலுத்த மாநில கருவூலத்தைப் பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, விளம்பர உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்காக 2017-ம் ஆண்டில் 3 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, தகவல் மற்றும் விளம்பர இயக்குநரகம் (டிஐபி) வெளியிட்ட விளம்பரத்தில் ஆம் ஆத்மி அரசாங்கம் எவ்வளவு பணம் செலவழித்தது என்பதைக் கண்டறிய ஆய்வு செய்யப்பட்டது.
நீதிமன்ற உத்தரவை மீறும் விளம்பரங்களுக்காக ரூ. 97,14,69,137/- செலவழிக்கப்பட்டது/புக்கிங் செய்யப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து அளவிட்டது. . இதில், ரூ.42,26,81,265/- பணம் ஏற்கனவே டிஐபி மூலம் விடுவிக்கப்பட்ட நிலையில், வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்கான ரூ.54,87,87,872/- இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2017-ம் ஆண்டில் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ. 42.26 கோடியை உடனடியாக அரசுக் கருவூலத்தில் செலுத்தவும், மீதமுள்ள தொகையை நேரடியாக சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனங்களுக்கு/வெளியீட்டு நிறுவனங்களுக்கு 30 நாட்களுக்குள் செலுத்தவும் உத்தரவிட்டார். உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மீறி ஆம் ஆத்மி அரசு வெளியிட்ட விளம்பரங்கள் காரணமாக இந்தப் பணம் செலுத்தப்பட்டது என்பது வலியுறுத்தப்படுகிறது” என்று ராஜ் நிவாஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
துணைநிலை ஆளுநர் எழுதிய ஒரு கடிதத்தில், ஐந்து ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், ஆம் ஆத்மி இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், “குறிப்பிட்ட உத்தரவு இருந்தபோதிலும், பொதுப் பணம் அரசுக் கருவூலத்தில் கட்சியால் டெபாசிட் செய்யப்படாததால், இது தீவிரமானது. பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியின் சட்டப்பூர்வ உத்தரவை மீறுவது நீதித்துறையை அவமதிப்பது மட்டுமல்ல. நல்லாட்சியின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல” என்று என்று குறிப்பிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”